Thursday, December 27, 2018


இந்திய அளவில் அசிங்கப்படுத்திய 'தல - தளபதி’ ரசிகர்கள்: மீண்டும் தொடங்கிய ஹேஷ்டேக் போர்!

Published : 26 Dec 2018 13:24 IST

ஸ்கிரீனன்




அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஹேஷ்டேக் மூலமாக ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொண்டார்கள்.

ட்விட்டர் தளத்தில் எப்போது அஜித் - விஜய் ரசிகர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். இருவரின் படங்களின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள், டீஸர், ட்ரெய்லர், வசூல் நிலவரங்கள் என எந்தவொரு தகவல் வந்தாலுமே, அதற்கொரு ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்வார்கள்.


இருவரின் ரசிகர்களுமே இந்திய அளவில் ஹேஷ்டேக் ட்ரெண்டாகும் வரை ஓய்வதில்லை. சில சமயங்களில் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராகவும், விஜய் ரசிகர்கள் அஜித்துக்கு எதிராகவும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்வதில் போட்டி நடத்தி அஜித் - விஜய் இருவரையுமே அசிங்கப்படுத்துவார்கள்.

அப்படியொரு ஹேஷ்டேக் போர் நேற்று (டிசம்பர் 25) நடைபெற்றது. இருதரப்பு ரசிகர்களும் உருவாக்கிய ஹேஷ்டேக்குகளை குறிப்பிடப்பிட முடியாது என்பதால், அதன் புகைப்படத்தை மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

'விஸ்வாசம்' படத்தின் புகைப்படங்கள், பொங்கல் வெளியீடு உள்ளிட்டவற்றை வைத்து அஜித் ரசிகர்கள் சந்தோஷப்பட்டு வந்தார்கள். அதே சமயத்தில், நேற்று (டிசம்பர் 25) 'சர்கார்' 50 நாட்களை கடந்தது. எங்கள் தலைவர் தான் வசூலில் அதிகம் என்பதில் தொடங்கிய இந்தப் போர், கடைசியாக இருவரையும் அசிங்கப்படுத்திய விதமாகவே முடிவுற்றது.

சமீபகாலமாக அஜித் - விஜய் ரசிகர்கள் இம்மாதிரியான ஹேஷ்டேக் போர் நடத்தாமல் இருந்தார்கள். நேற்று (டிசம்பர் 25) மீண்டும் தொடங்கியதால் ட்விட்டர் உள்ள திரையுலக பிரபலங்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அதிலும், இரண்டு ஹேஷ்டேக்குகளுமே இந்திய அளவில் முதல் இரண்டு இடத்தில் ட்ரெண்டானது நினைவுகூரத்தக்கது.

அஜித் - விஜய் இருவருமே, இந்த ஹேஷ்டேக் போர் விஷயத்தில் இதுவரை மவுனமாக இருக்கிறார்கள். அவர்கள் மவுனம் கலைக்கும் வரை, அசிங்கப்படுவது அவர்களின்றி வேறு யாருமில்லை!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024