Thursday, December 27, 2018

மாவட்ட செய்திகள்

நாய் கடித்து குதறிய சிறுமிக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை - சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது



நாய் கடித்து குதறிய சிறுமிக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது.

பதிவு: டிசம்பர் 27, 2018 04:15 AM

சேலம்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி கிராமம் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 31). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைதிலி. இவர்களது 2-வது மகள் ஷார்மி (4). நேற்று முன்தினம் மாலை இந்த சிறுமி வீட்டின் வெளியில் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் வளர்த்து வரும் நாய் திடீரென்று சிறுமி மீது பாய்ந்து அவளது கன்னத்தை கடித்து குதறியது. இதில் சிறுமி பலத்த காயம் அடைந்து வலி தாங்க முடியாமல் கதறி அழுதாள். இந்த நிலையில் சிறுமியின் கன்னத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. இதை பார்த்த பெற்றோர் பதறி துடித்தனர்.

பின்னர் மகளை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் சிறுமி ஷார்மியின் கன்னத்தில் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். தொடர்ந்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரனிடம் கேட்ட போது, நாய் கடித்ததில் சிறுமியின் கன்னத்தில் இருந்து சிறிதளவு சதை பிய்ந்தது. மேலும் நாயின் எச்சில் சிறுமியின் கன்னத்தில் அதிகம் பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து முதலில் நாயின் எச்சில் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் பாதுகாப்பான முறையில் சிறுமிக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கன்னத்தில் 25 தையல்கள் போடப்பட்டு உள்ளன. தற்போது சிறுமிக்கு மேலும் சிகிச்சை அளித்து வருகிறோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...