Wednesday, December 26, 2018

உதவி டாக்டர்கள் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

Added : டிச 26, 2018 05:11

சென்னை; அரசு மருத்துவமனைகளில், 1,884 உதவி டாக்டர்களை நியமிக்க, 2,073 பேரின் சான்றிதழ் சரிப்பார்க்கும் பணிகள் துவங்கின.தமிழக அரசு மருத்துவமனைகளில், பொது பிரிவில், 1,884 தற்காலிக உதவி டாக்டர்கள் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை, செப்டம்பரில், தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கு, எம்.பி.பி.எஸ்., படித்த, 10 ஆயிரத்து, 18 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு, சென்னை அண்ணா பல்கலை உட்பட, ஐந்து மையங்களில், டிச., 9ல் நடந்தது. இந்த தேர்வை, 9,353 பேர் எழுதினர்.தேர்வு எழுதியோருக்கான மதிப்பெண், சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதன்படி, முதல், 2,073 இடங்களை பெற்றவர்களின் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி துவங்கியுள்ளது.இதுகுறித்து, மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:இதுவரை, 150 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்துள்ளது. மேலும், 13 நாட்கள் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவேண்டிய நாட்கள் குறித்த தகவல், தேர்வானோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சர்பார்க்கும் பணி முடிந்ததும், 1,884 பேருக்கும், பணி நியமன ஆணை வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024