Friday, December 28, 2018


எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஓய்வு

dinamalar  28.12.2018
சென்னை, தமிழ்நாடு டாக்டர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, நேற்று ஓய்வு பெற்றார்.சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் துணைவேந்தராக, டாக்டர் கீதாலட்சுமி, 2015 டிச., 28ல், பதவியேற்றார்.

மருத்துவ பல்கலையின் செயல்பாடுகள் அனைத்தையும், டிஜிட்டல் மயமாக்கினார். வினாத்தாள் திருத்தும் பணியை, இணையதளத்திற்கு மாற்றினார்.மேலும், ேஹாமியோபதி மருத்துவத்தில், எம்.டி., முதுகலை மற்றும் பிஎச்.டி., படிப்பு வர காரணமாக இருந்தார். அண்ணா பல்கலை, சட்ட பல்கலை உள்ளிட்ட பல்கலைகளுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, மாணவர்கள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட வழிவகுத்து தந்துஉள்ளார்.இந்நிலையில், கீதாலட்சுமியின் பதவிக்காலம், நேற்றுடன் முடிந்ததால், பணியிலிருந்து, அவர் ஓய்வு பெற்றார்.இந்நிலையில், புதிய துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக, நெல்லை மருத்துவ கல்லுாரியின் முன்னாள் டீன், சித்தி அத்திய முனவரா தலைமையில், தேடுதல் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிடம், 41 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், இறுதி முடிவு எடுக்கப்படாததால், புதிய துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்படலாம் என, கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024