Friday, December 28, 2018


தமிழக அரசு பஸ் டிக்கெட்டில் புதுச்சேரி அரசின் பயணச்சீட்டு

Added : டிச 28, 2018 01:23 |

சென்னை,தமிழக அரசு பேருந்தில், புதுச்சேரி அரசு பேருந்தின் பயணச்சீட்டு வழங்கப்பட்டதால், பயணியர் குழப்பம் அடைந்தனர்.தமிழக அரசுப் பேருந்துகளில், பயணியரிடம், பயண கட்டணம் பெற்று, அதற்கான மின்னனு பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.இந்த சீட்டில், அரசு போக்குவரத்துக் கழக கோட்டம், பணிமனை, பயண நாள், நேரம், கட்டணம் உள்ளிட்ட விபரங்கள் அச்சிட்டிருக்கும்; நிரந்தர அச்சடிப்பு இருக்காது.கடந்த, 24ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு, மாமல்லபுரம் நபர், சென்னை, கோயம்பேடு பணிமனை பேருந்தில், மாமல்லபுரத்திலிருந்து, கல்பாக்கத்திற்கு பயணம் செய்த போது, அவருக்கு, மின்னனு பயணச்சீட்டு வழங்கப்பட்டது.அந்த சீட்டில், தமிழக அரசுப் பேருந்தின் விபரங்கள், மின்னனு எழுத்தில் இடம் பெற்றிருந்தன. எனினும், அவை, புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்திற்குரிய, பயணச்சீட்டில் அச்சிட்டிருந்தன.தமிழக பேருந்தில், புதுச்சேரி அரசுப் பேருந்திற்குரிய,பி.ஆர்.டி.சி., என குறிப்பிடப்பட்ட, பயணச்சீட்டு வழங்கியது, குழப்பத்தைஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024