Sunday, December 30, 2018

மாணவரை, 'ராகிங்' செய்த 5 பேர் கைது

Added : டிச 29, 2018 23:53

பெங்களூரு: பெங்களூரு மருத்துவ கல்லுாரியில், தலித் மாணவரை, 'ராகிங்' செய்த, ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.தலைநகர், பெங்களூரில் உள்ள, இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரியில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, ௧௯ வயது தலித் மாணவர், முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில், அவர் தங்கியுள்ளார்.அதே விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படிக்கும் ஐந்து மாணவர்கள், சமீபத்தில், தலித் மாணவரின் அறைக்குச் சென்று, அவரை, 'ராகிங்' செய்துள்ளனர்.தலித் மாணவரை தாக்கியும், ஜாதிப் பெயரை சொல்லியும் இழிவுபடுத்திய சீனியர் மாணவர்கள், அந்த மாணவரின் தலை முடியை வெட்டிஉள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின்படி, ஐந்து சீனியர் மாணவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு மற்றும் கர்நாடக மாநில கல்வி சட்டத்தில் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024