Tuesday, December 25, 2018

விஜய் சேதுபதினாலே வித்தியாசம்தான்: 'சீதக்காதி' குழுவினருக்கு ரஜினி பாராட்டு

Published : 24 Dec 2018 17:31 IST




விஜய் சேதுபதினாலே வித்தியாசம்தான் என்று தொலைபேசி வாயிலாக 'சீதக்காதி' படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, மெளலி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சீதக்காதி'. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள 25-வது படம் இது. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை, தமிழகமெங்கும் ட்ரைடெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

திரையுலகப் பிரபலங்கள் பலரும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். விமர்சன ரீதியாகவும் 'சீதக்காதி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், 'சீதக்காதி' பார்த்துவிட்டு படக்குழுவினரை தொலைபேசி வாயிலாகப் பாராட்டியுள்ளார் ரஜினி. 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதிக்கும் தயாரிப்பாளருக்கும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி. "விஜய் சேதுபதினாலே வித்தியாசம். வித்தியாசம்னா விஜய் சேதுபதி. ரொம்ப நல்லாயிருந்தது. ரொம்பவே ரசிச்சுப் பார்த்தேன். காமெடி காட்சிகள் அற்புதமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார் ரஜினி.

ரஜினியின் பாராட்டால் படக்குழுவினர் மேலும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து, சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024