Sunday, December 30, 2018

நெருக்கடி!
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு...
ராஜினாமா செய்ய உத்தரவு?
மறுத்தால் பதவி நீக்க முடிவு

dinamalar 30.12.2018
தமிழக அமைச்சரவையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரரை கழற்றி விடும்படி , முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.



விஜயபாஸ்கர் ராஜி னாமா செய்யாவிட்டால், அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து, முதல்வர் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அமைச்சர்களில், அதிக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவராக, விஜயபாஸ்கர் உள்ளார். எதிர்க்கட்சிகளை, சட்டசபையில் கடுமையாக விமர்சனம் செய்ததற்காக, அவருக்குஅமைச்சர் பதவியை, ஜெயலலிதா வழங்கினார்.அதன்பின், சசிகலா தயவில், அசைக்க முடியாதவராக மாறி விட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா முதல்வர் பதவி ஏற்பதற்காக, அனைத்து பணிகளையும் செய்தார்.எம்.எல்.ஏ., க்களை, கூவத்துாரில் தங்க வைத்த போது, அவர்களுக் கான செலவுகளை யும் ஏற்றார். பன்னீர்செல்வத்தை, கடுமையாக எதிர்த்தார். சென்னை, ஆர்.கே. நகரில், தினகரன் போட்டியிட்ட போது, அவருக்காக, பணம் பட்டுவாடா செய்யும் பொறுப்பை ஏற்றார். அவர்

வீட்டில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, பணம் பட்டுவாடா ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

விஜயபாஸ்கரை ராஜினாமா செய்யும்படி, எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின;ஆனால், அவர் கண்டு கொள்ளவே இல்லை.அவர் வீட்டில் நடந்த சோதனை காரணமாக தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில், அவர் பெயர் சேர்க்கப் படாதது குறித்து, நீதிமன்றமே ஆச்சரியப் பட்டது. அதன்பின், தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள், தடையின்றி விற்பனை செய்ய, லஞ்சம்பெற்றதாக, அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதும், எதிர்க்கட்சிகள், அவரை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தின; அவர் மசியவில்லை.

குட்கா வழக்கு, நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அமைச்சரின் உதவியாளர்களிடம்,சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டது. அதன்பின், அமைச்சரை நேரில் அழைத்தும், சி.பி.ஐ., தரப்பில் விசாரிக்கப்பட்டது. அதன் பிறகும், தார்மீக பொறுப் பேற்று, பதவி விலக அவர்முன்வரவில்லை. முதல்வரே, அவரை ராஜினாமா செய்யும்படி கூறிய போது,'என்னை ராஜினாமா செய்ய சொன்னால், உங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி விடுவேன்' என, மிரட்டியதாக கூறப்படுகிறது.

பல்வேறு நெருக்கடி ஏற்பட்டபோதும், அவர் பதவி   விலக முன்வரவில்லை.'இவரால், ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்ப டுகிறது; அவரை நீக்குங்கள்' என, மற்ற அமைச்சர்கள் வலியுறுத்தியும், முடிவெடுக்க முடியாமல், முதல்வர் திணறி வந்தார்.

இந்நிலையில், கூட்டணி குறித்து பேசுவ தற்காக, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், இரு தினங்களுக்கு முன், டில்லி சென்றனர். மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினர்.அப்போதும், விஜயபாஸ்கர் விவகாரம் தான் கிளப்பப்பட்டு உள்ளது. 'விஜயபாஸ்கரை நீக்குங்கள். அப்போது தான், அரசுக்கு ஓரள வாவது நல்ல பெயர் கிடைக்கும்' என, மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.அதை, முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜய பாஸ் கருக்கு, நெருக்கடி அதிகரித்துள்ளது. அவராக பதவியை ராஜினாமா செய்யா விட்டால், அவரை,'கழற்றி'விடுவது குறித்து, முதல்வர் ஆலோசித்து வருவதாக,தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024