Thursday, December 27, 2018

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் 2018 டாப் 10-ல் கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு இடமில்லாதது ஏன்?

By எழில் | Published on : 26th December 2018 03:16 PM |




2018-ல் பெரிய அளவில் வெற்றி படங்களில் ஒன்று - பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம். குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் எனப் படம் வெளிவந்த சமயத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ந்துபோனார்கள்.


சென்னையின் புறநகர்ப் பகுதியான குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கம் மிகவும் புகழ்பெற்றது. பலவருடங்களாக அப்பகுதியில் இயங்கிவருகிறது. இந்தத் திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன், ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்தந்த வருடத்தின் டாப் 10 பட்டியலை வெளியிடுவார். அதேபோல ரசிகர்களின் எண்ணிக்கையைக் கொண்டு (வசூல் அல்ல) இந்த வருடம் அவர் வெளியிட்ட வெற்றி திரையரங்கின் 2018 டாப் 10 பட்டியல்:


1. 2.0
2. சர்கார்
3. காலா
4. செக்கச் சிவந்த வானம்
5. இரும்புத்திரை
6. 96
7. கோலமாவு கோகிலா
8. வடசென்னை
9. இமைக்கா நொடிகள்
10. தானா சேர்ந்த நொடிகள்

ஆச்சர்யமாக இந்தப் பட்டியலில் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான கடைக்குட்டி சிங்கம் இடம்பெறவில்லை. அதேபோல சமீபத்தில் நன்குப் பாராட்டைப் பெற்ற ராட்சசன் படமும். இதற்கு ராகேஷ் கெளதமன் ட்விட்டரில் அளித்த பதில்கள்:

* ராட்சசன் இந்த வருடத்தின் சிறந்த படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பல படங்கள் ஒரே சமயத்தில் வெளியானதால் முதல் வாரம் அதற்கு ஒரு காட்சி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது பார்வையாளர்களின் எண்ணிக்கையிலான பட்டியல். படம் குறித்த ரேட்டிங் கிடையாது.

* இந்தப் பட்டியலில் கடைக்குட்டி சிங்கம் படம் ஏன் இல்லை? தமிழ்ப்படம் 2 படத்துடன் இதன் காட்சிகள் பகிரப்பட்டன. இதன் வகைமை (கிராமத்துக்கதை) காரணமாக நகரத்தை விடவும் தென் தமிழ்நாட்டுப் பகுதிகளில் கடைக்குட்டி சிங்கம் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்று பதில் அளித்துள்ளார்.

வெற்றி திரையரங்கில் 2018 டாப் 10 பட்டியலில் 11 முதல் 15 இடங்களை இன்ஃபினிட்டி வார், கடைக்குட்டி சிங்கம், டிக்டிக்டிக், சீமராஜா, தமிழ்ப்படம் 2 ஆகிய படங்கள் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024