Sunday, December 30, 2018

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் சுதா சேஷையன்

Added : டிச 29, 2018 23:36



சென்னை: தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக, டாக்டர் சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலை துணை வேந்தராக இருந்த கீதாலட்சுமி, இரு தினங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். துணை வேந்தர் பதவிக்கு, 48 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், டாக்டர்சுதா சேஷையனை, துணை வேந்தராக தேர்வு செய்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இவர், இப்பதவியில், மூன்று ஆண்டுகள் இருப்பார்.சுதா சேஷையன், முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில், முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உடையவர். சென்னை மருத்துவ கல்லுாரியில், உடற்கூறு இயல் துறை இயக்குனராகவும், பேராசிரியையாகவும் பணியாற்றி உள்ளார்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். நிர்வாகத் துறையிலும், அனுபவம் மிகுந்தவர். மருத்துவம், ஆன்மிகம் தொடர்பாக, பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார்; சிறந்த பேச்சாளர்.முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, தொகுத்து வழங்குவதில், சிறப்பு பெற்றவர். லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட, ஆன்மிக இசையிலும் சிறந்து விளங்குபவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததும், அவரது உடலுக்கு, 'எம்பாமிங்' செய்தவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024