Sunday, December 9, 2018

கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை

Added : டிச 09, 2018 08:25 |

புதுடில்லி : கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், கட்டுமான பணிகள் நிறைவுபெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது. இருப்பினும் கட்டுமான பணி தொடங்கும் போதோ அல்லது கட்டுமானம் முடிந்து நிறைவு சான்று பெறப்படாமலோ உள்ள வீடுகளை வாங்கினால் ஜிஎஸ்டி விதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு வீடு திட்டம், ராஜிவ் ஆவாஸ் யோஜனா, பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கான 8 சதவீதம் ஜிஎஸ்டியை கட்டுமான நிறுவனங்கள் தங்களது வரி வரவில் இருந்து கழித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024