Sunday, December 9, 2018

அரசு மருத்துவமனைகளில் சோதனை தொடர்கிறது

Added : டிச 09, 2018 01:01

சென்னை அரசு மருத்துவமனைகளில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை, நேற்றும் சில இடங்களில் தொடர்ந்தது.தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவமனைகளில், எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கப்படுகிறது. உள்நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களிடமும், ஊழியர்கள் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.மேலும், கர்ப்பிணிகள் பதிவு செய்வது முதல், அவர்களுக்கு வரும் மகப்பேறு நிதியுதவி திட்டங்கள் உட்பட, அனைத்திற்கும், 500 முதல், 5,000 ரூபாய் வரை, சுகாதாரத் துறை ஊழியர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். இது போன்று, ஏழை மக்கள் பயன் பெறும் அனைத்து திட்டங்களிலும், தங்களுக்கும் ஒரு பங்கை, அதிகாரிகளும், ஊழியர்களும் பிடுங்கிக் கொள்கின்றனர்.தொடர் புகார்களை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், நேற்று முன்தினம் காலை முதல், இரவு வரை சோதனை நடத்தினர். இதில், சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 'ஸ்கேன்' எடுக்கும் பெண் ஊழியரிடம், 3,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதேபோல, ஸ்டான்லி, ஓமந்துாரார் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கணக்கில் வராத பணம், மருத்துவமனை ஊழியர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை, திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், நேற்று நடந்தது. 'பொது மக்களின் புகார்களின் அடிப்படையில், மருத்துவமனைகளில் சோதனை தொடரும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

எதற்கெல்லாம் லஞ்சம்?யாருக்கு - எவ்வளவு ரூபாய்'லிப்ட்' இயக்குபவருக்கு - 10'ஸ்கேன்' எடுப்பவருக்கு - 20குப்பை அள்ள மற்றும் படுக்கை சுத்தப்படுத்துபவருக்கு - 30பார்வை நேரங்களை தவிர்த்து, நோயாளியை பார்க்க - 30குளுக்கோஸ் ஏற்றுவதற்கு - 50'ஸ்ட்ரெக்சர்' தள்ளுபவருக்கு - 50 - 100முடி திருத்துபவருக்கு - 100'எக்ஸ் - ரே' மற்றும் ரத்த பரிசோதனை உடனுக்குடன் பெற - 100நோயாளிக்கு சிறந்த சிகிச்சை அளிக்க - 100 முதல், 500பெண் குழந்தை பிறந்தால் - 500ஆண் குழந்தை பிறந்தால் - 1,000சடலத்தை பிணவறைக்கு கொண்டு வர - 100பிரேத பரிசோதனை செய்ய - 500 முதல் 1,000டாக்டர் சான்றிதழ் பெற - 500 முதல் 1,000அரசின் காப்பீட்டு திட்டம் மற்றும் நிதியுதவி திட்டங்களுக்கு - 1,000 முதல் 5,000'108' ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கு - 100 முதல் 1,000 வரை

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024