Monday, November 2, 2026

ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!


ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!

ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கங்கள் சாா்பில் ‘ரோமி’ எனும் புதிய பேருந்து முன்பதிவு இணையதளம், செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.


Updated On :2 நவம்பர் 2026, 3:43 am



சென்னையிலிருந்து தினமும் 1,800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு, 70,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துவரும் நிலையில், தனியாா் இணையவழி முன்பதிவுத் தளங்களின் கமிஷன் செலவைக் குறைக்கும் வகையில், ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கங்கள் சாா்பில் ‘ரோமி’ எனும் புதிய பேருந்து முன்பதிவு இணையதளம் மற்றும் செயலி ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு தினமும் சுமாா் 1,200 ஆம்னி பேருந்துகளும், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பகுதிகளுக்கு 600 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மூலம் தினமும் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணம் செய்து வருகின்றனா்.

தனியாா் செயலிகளால் கமிஷன் செலவு: தற்போது பெரும்பாலான பயணிகள் தனியாா் இணையதளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாக ஆம்னி பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து வருகின்றனா். இதற்காக பேருந்து உரிமையாளா்கள் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் முன்பதிவுத் தளங்களுக்கு கமிஷன் தொகை செலுத்த வேண்டியுள்ளது.

இதனால் பேருந்து உரிமையாளா்களின் வருவாய் பாதிக்கப்படுவதுடன், செயல்பாட்டுச் செலவும் அதிகரிக்கிறது. மேலும், தனியாா் முன்பதிவுத் தளங்களைச் சாா்ந்திருப்பதால், பேருந்து உரிமையாளா்கள் தங்களது சேவைகள், இருக்கை, இருப்பு, கட்டணம் உள்ளிட்டவற்றை நிா்வகிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், கமிஷன் செலவைக் குறைத்து அதன் பயனை பயணிகளுக்கு வழங்கவும் தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கங்கள் இணைந்து ரோமி எனும் புதிய பேருந்து முன்பதிவு இணையதளம் மற்றும் செயலியை உருவாக்கியுள்ளன.

சென்னையில் நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ. அன்பழகன், துணைத் தலைவா் சுனில் குமாா், கோவை ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் செந்தில் குமாா், திருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று செயலி மற்றும் இணையதளத்தை தொடங்கி வைத்தனா்.

1,000 பேருந்துகளுடன் தொடக்கம்: இதுகுறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் தளம், மத்திய அரசின் ஓஎன்டிசி திறந்த டிஜிட்டல் வா்த்தக வலையமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

தொடக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து உரிமையாளா்களின் 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் 1,000-க்கும் அதிகமான வழித்தடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயலி மூலம் பயணிகள் பேருந்துகளின் புறப்படும் நேரம், கட்டணம், வகை, இருக்கை வசதி ஆகியவற்றை ஒப்பிட்டு தங்களுக்கு ஏற்ற பேருந்துகளைத் தோ்வு செய்து முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவுக்கு முன்பே முழுக் கட்டணத்தையும் தெரிந்துகொள்ள முடியும். மேலும், நேரடிக் கண்காணிப்பு வசதி கொண்ட பேருந்துகளின் இருப்பிடத்தையும் அறிந்துகொள்ளலாம். பேருந்து உரிமையாளா்கள் வழித்தடங்கள், இருக்கை இருப்பு, முன்பதிவுகள் உள்ளிட்டவற்றை ஒரே தளத்தில் நிா்வகிக்கவும், ஓஎம்டிசி வலையமைப்பு மூலம் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தும் பயணிகளைச் சென்றடையவும் இந்தத் தளம் உதவும்.

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்? சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!


இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்? சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு ஆந்திரத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Updated On :2 நவம்பர் 2026, 3:19 am


வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு ஆந்திரத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், காஞ்சிபுரம், வேலூா், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி, இரண்டாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) தெற்கு அந்தமான் கடலில் கடந்த அக். 29-ஆம் தேதி உருவானது. இந்தப் புயல் சின்னம் அக்.30-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவியது. தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அக்.31 காலை 11.30 மணியளவில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி அளவில் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் காலை 11.30 மணிக்கு ‘முரசு’ புயலாக வலுப்பெற்றது.

புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 27 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே சுமாா் 480 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், ஓங்கோலுக்கு தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 610 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூா் மற்றும் நரசாப்பூா் இடையே திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு முதல் நவ. 3 அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவ. 2) இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ex-VC urges CM to review 5-yr age relaxation for govt jobs

Ex-VC urges CM to review 5-yr age relaxation for govt jobs 

02.11.2026

Chennai: Anna University’s former vice-chancellor and former member of the UPSC, Prof E Balagurusamy, has urged CM C Joseph Vijay to reconsider the state govt’s recent decision to raise the upper age limit for recruitment to govt services by five years. 

In his letter to the CM, Balagurusamy urged the govt to restore age limits appropriate to the nature of each post, particularly Group I and other field services, keeping in mind the need for young, energetic and future-ready administrators. He said Group I posts, such as deputy collectors and deputy superintendents of police, require officers with contemporary knowledge, digital skills, adaptability, analytical abilities and capacity to respond to emerging technologies. 

Recruiting officers at relatively advanced ages, he said, could reduce number of productive years available for field administration and leadership responsibilities. Balagurusamy said the upper age limit had been extended without adequate consideration of the nature of the responsibilities involved and long-term interests of public administration. He also expressed concern that the measure could intensify competition for a limited number of vacancies and adversely affect educated young people seeking their first meaningful employment opportunity. 

He suggested that govt provide time-bound transitional relief to candidates genuinely affected by recruitment delays instead of making the relaxation a permanent policy. He also called for age criteria tailored to individual posts, an annual TNPSC recruitment calendar, the expeditious filling of vacancies and a comprehensive review involving educationists, administrators, human-resource experts and youth representatives. “Compassion towards candidates affected by recruitment delays is justified, but it should not come at the cost of the employment aspirations of younger generations,” he said. TNN

Sunday, November 1, 2026

NEWS TODAY 01.11.2026











































சொத்து விவரம் தாக்கல் செய்ய அரசு ஊழியர்களுக்கு அவகாசம்


சொத்து விவரம் தாக்கல் செய்ய அரசு ஊழியர்களுக்கு அவகாசம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி...


தமிழ்நாடு அரசு.

Updated On :31 அக்டோபர் 2026, 7:07 pm


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை ஒருங்கிணைந்த மனிதவள நிதி மேம்பாட்டுத் திட்டத்தின் (ஐஎஃப்ஆர்எம்எஸ்) ‘களஞ்சியம்’ செயலி வாயிலாக, அக்டோபர் 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை தனது கடிதத்தில் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, இத்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் ‘களஞ்சியம்’ செயலியில் விவரங்களை தவறாமல் பதிவுசெய்து, அதன் விவரத்தை இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்தால் மட்டுமே பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கருவூலத் துறையின் களஞ்சியம் செயலியில் சர்வர் பிரச்னை போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆவணங்களை பதிவேற்றுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதால், சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பதற்றமில்லா பயணம்!


பதற்றமில்லா பயணம்!

தினமணி நடுப்பக்க கட்டுரைகள்

உடல்நலக் குறைபாடு காரணமாக ஏற்படும் சிரமங்களைக் குறைத்து அவர்களும் மற்றவர்களைப்போல தன்னம்பிக்கையுடன் பயணம் செய்ய வகை செய்கின்றன.



Updated On :31 அக்டோபர் 2026, 6:44 am



முகநூலில் ஒரு காணொலியைப் பார்த்தேன். அதில் விமானத்துக்குள் செல்ல வேண்டிய வாயிலின்முன் ஏகப்பட்ட இந்தியர்கள் சக்கர நாற்காலியில் காத்திருந்ததைக் காண முடிந்தது. அது குறித்துப் பேசிய ஒரு வெளிநாட்டவர், இந்தியாவில் நல்ல உடல் நலனுடன் இருப்பவர்கள்கூட சக்கர நாற்காலி சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால், அவசியமானவர்களுக்கு இந்தச் சேவை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

அந்தக் காணொலியில் வயதானவர்கள் ஒரு சிலரே இருந்தார்கள்; மற்றவர்கள் நடுத்தர வயதுக்காரர்கள்; ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்கள். ஆகவேதான், அந்த வெளிநாட்டவர் அவ்வாறு கூறினார்.

ஒருகாலத்தில் வெளிநாட்டுக்குப் போவது பெருமை. அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டாது. தற்போது விமானப் பயணம் பேருந்து பயணம்போல ஆகிவிட்டது. அதிக விவரமில்லாதவர்கள், வெளி உலகப் பரிச்சயம் இல்லாதவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள் எல்லோரும் சர்வசாதாரணமாக தனியாக வெளிநாடு போய் வருகிறார்களே, எப்படி? என்று நான் முன்பெல்லாம் வியந்ததுண்டு. அதன் பின்னரே இந்த சக்கர நாற்காலி சேவை குறித்து தெரியவந்தது. இது எத்தகைய ஓர் அற்புதமான சேவை.

விமான முனையத்தின் பிரம்மாண்டமும் நடைமுறைகளும் முதியவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தும். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் ஒன்றும் புரியாது. சாமான்களை ஒப்படைப்பது, குடியேற்றம், பாதுகாப்பு சோதனை போன்ற இடங்களில் தடுமாறிப் போவார்கள். சக்கர நாற்காலி சேவையைப் பயன்படுத்திக் கொண்டால் எந்தக் கவலையும் இல்லை; சங்கடமில்லாமல் செல்ல முடிகிறது. சக்கர நாற்காலி சேவையால், தான் பட்ட சிரமத்தை உறவினர் ஒருவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன் வயதான பெற்றோரை அவர் லண்டனில் இருந்து தோஹா வழியாக சென்னைக்கு அனுப்பினார். லண்டனில் அவர்களை ஏற்றிவிட்டார். அவர்கள் தோஹாவில் இறங்கி சென்னை விமானத்துக்கு மாறவேண்டும். தனியாக அனுப்புகிறோமே என்று சக்கர நாற்காலி சேவை போட்டுவிட்டார்.

தோஹா விமான நிலையம் சென்றடையும்வரை எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்தது. தோஹாவில் விமானம் இறங்கியவுடன், விமான பணிப்பெண் "சக்கர நாற்காலிக்காரர்கள் காத்திருக்கவும், கீழே இறங்க வேண்டாம்' என்று கூறிவிட்டார்; ஆறு பேர் மட்டும் தங்கிவிட்டார்கள்; அடுத்து சென்னை விமானத்தைப் பிடிக்க ஒரு மணி நேர அவகாசம் மட்டுமே இருந்த நிலையில் அனைவரும் பதற்றமடைந்தனர். ஒருவரும் வரவில்லை 30 நிமிஷங்கள் கழித்து இவர்களை ஒரு வாகனத்தில் ஏற்றி வாயிலருகே விட்டுவிட்டார்கள்; விமானம் போய் விட்டது; இவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?, என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை.

அந்த நிறுவன கவுன்ட்டருக்குப் போய் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை.

சென்னைக்கு மறுநாள் மாலை 6 மணிக்குத்தான் விமானம் என்று சொல்லியிருக்கிறார்கள். அங்குமிங்கும் ஓடி கொஞ்சம் கனிவான முகம் தென்பட உதவி கோரி தவித்துப் போயிருக்கிறார்கள். மறுநாள் மாலை 6 மணிவரை உண்மையில் தொலைந்து போய் விட்டவர்கள் நிலை என்று சொல்லலாம். பின்னர், விமானத்தைப் பிடித்து வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே, சக்கர நாற்காலி போட்டாலும் அவஸ்தைப்பட வேண்டும் என்று இருந்தால் பட்டே ஆகவேண்டும். விமான நிலையங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகள் பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மட்டுமே இருக்கும். ஆகவே, விமானப் பயணம் புதியவர்களை மன ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பெரிதும் அச்சுறுத்துகிறது. ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் என்ற கற்பனையும் பயமும் சேர்ந்து கொள்கிறது. மற்ற பயணிகளின் நடவடிக்கைகள், தோற்றம் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. சட்டென்று அவர்களிடம் எதையும் கேட்க முடிவதில்லை. உள்ளூரிலேயே ஏதோ அந்நிய நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு அல்லவா ஏற்படுகிறது?. ஆகவே, சக்கர நாற்காலி சேவை இந்த சங்கடங்களையெல்லாம் தவிர்த்து விடுகிறது.

மேலும், இந்த சேவை இலவசம். நடக்க முடியாதவர்கள், உடல் நலமில்லாதவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், முதியவர்கள் ஆகியோருக்குப் பேருதவியாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல, இன்னொரு சேவையும் உள்ளது. அது "மீட் அண்ட் கிரீட்' என்பது. இது பரவலாக அறியப்படவில்லை. அது என்ன வசதி?. அதாவது, பயணிகள் விமான நிலையத்தில் எந்தவித சிரமமும் இன்றி எளிதாகப் பயணிக்க உதவும் ஒரு சிறப்பு உதவி சேவையாகும். பெரிய விமான நிலையங்களில் வழிவகை தெரியாமல் திணறுபவர்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், முதல்முறை பயணம் செய்பவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்பவர்களின் பயணத்தை இந்தச் சேவை எளிதாக்குகிறது. விமான நிலையத்துக்கு வந்தவுடன் அல்லது விமானத்தில் இருந்து இறங்கியவுடன் ஒரு பிரதிநிதி நம் பெயர் கொண்ட பதாகையுடன் நிற்பார். நீண்ட வரிசையில் நிற்காமல் பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் குடியேற்றப் பரிசோதனை போன்றவற்றை விரைவாக முடிக்க உதவுவார். சாமான்களை எடுத்துக் கொள்ளவும் உதவியாளர் இருப்பார். ஒரு விமானத்தில் இருந்து வேறு விமானத்துக்கு மாற வேண்டி இருந்தால் அதற்கான வழிகாட்டலையும் செய்வார். இந்தச் சேவையைப் பெற விமான நிலைய அதிகாரபூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது தனியார் பயண நிறுவனங்கள் மூலமாகவோ முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். எல்லோரும் சக்கர நாற்காலிக்கு விண்ணப்பிப்பதற்குப் பதில் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணம் உண்டு என்பதற்காக தயங்கக்கூடாது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து வெளிநாடு போகிறோம். செலவு கூடுதலாக ஆனால்தான் என்ன?

விமான நிலையத்தில் சக்கர நாற்காலி உதவியும் "மீட் அண்ட் கிரீட்' மற்றும் கட்டண பயணப் பை உதவி கோரும் தொடர்புடைய தகவல்களுடன் அதிகாரபூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன. சக்கர நாற்காலி உதவிக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போதே தொடர்புடைய விமான நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கலாம். "மீட் அண்ட் கிரீட்' சேவைக்கு விமான நிலைய சேவை வழங்குநரிடம் கிடைக்கும் வசதிகள், முன்பதிவு நடைமுறை, கட்டணம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். பயணப் பைகளை எடுத்துச் செல்லஉதவியும், இந்தச் சேவையில் தானாக அடங்கி இருக்கிறதா? என்பதைத் தனியாகக் கேட்க வேண்டும்.

இத்தகைய சேவைகள் மனிதநேயத்தின் அடையாளங்கள். பிறரின் உதவியின்றி நீண்ட தொலைவு நடக்க முடியாத ஒருவர், விமான நிலையத்தில் ஒருமுனையில் இருந்து மற்றொரு முனைக்கு சிரமமின்றி செல்லவும், விமானத்தில் ஏறவும், இறங்கிய பிறகு தனது பயணத்தைத் தொடரவும் இவை துணை புரிகின்றன. உடல்நலக் குறைபாடு காரணமாக ஏற்படும் சிரமங்களைக் குறைத்து அவர்களும் மற்றவர்களைப்போல தன்னம்பிக்கையுடன் பயணம் செய்ய வகை செய்கின்றன.

ஆனால், இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது; நலமுடன் இருப்பவர்கள் ஏன் சக்கர நாற்காலி உதவியைக் கேட்க வேண்டும்?, இவ்வாறு பொத்தாம் பொதுவாகக் குற்றஞ்சாட்டுவது தவறு. இந்த உதவி ஆடம்பர வசதியோ அல்லது வரிசையைத் தவிர்ப்பதற்கான குறுக்கு வழியோ அல்ல. உடல் இயக்கத்தில் சிரமம் உள்ளவர்கள் கண்ணியத்துடன் பயணம் செய்வதற்கான அவசியமான உதவியாகும். விரைவில் போய் விடலாம் என்பதற்காக இந்த உதவியைப் பயன்படுத்துவது தவறு. ஒரு வசதி நமக்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்பதற்காக மட்டும் அதைப் பயன்படுத்துவது சரியல்ல.

முதியவர்களைத் தனியாக அனுப்பும்போது நேரடி விமான சேவையே சிறந்தது. அதில் இடம் கிடைக்கவில்லை அல்லது கட்டணம் அதிகம் என்றாலோ விமானம் மாறிச் செல்ல வகை செய்யலாம். அப்படி மாறும்போது குறைந்தது 2 மணி நேரமாவது கண்டிப்பாக இடைவெளி இருக்குமாறு பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். குறைந்த அவகாசத்தில் அவர்களைப் பதற்றமடைய வைக்கக் கூடாது.

அதேபோல, அவர்கள் எந்த நாட்டில் விமானம் மாற உள்ளார்களோ அந்த நாட்டின் பணம் அவர்களிடம் சிறிது அளவாவது இருக்க வேண்டும். அவசரத் தேவை ஏற்பட்டால் அவர்கள் சிரமப்படக் கூடாது. முக்கியமான மருந்துகளை உடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கைப்பேசியில் முழு சார்ஜ் இருக்குமாறு பார்த்துக் கொள்ள சொல்ல வேண்டும். அந்த நாட்டில் யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களின் கைப்பேசி, தொலைபேசி எண்களைக் குறித்துக் கொடுக்க வேண்டும். சிரமமோ, பயமோ இன்றி அவர்கள் பயணிப்பது மிக மிக அவசியம்.

விமான நிலையங்களில் சக்கர நாற்காலிகளின் எண்ணிக்கை, உதவியாளர்களின் எண்ணிக்கை, ஒரே நேரத்தில் சேவை பெறும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவை வரையறுக்கப்பட்டிருக்கலாம். அப்போது உண்மையிலேயே நடக்க முடியாமல் தவிக்கும் ஒருவருக்கு தாமதம் ஏற்படுவது வேதனைக்குரியது. பொதுவரிசையைத் தவிர்க்க "டிஜியாத்ரா' என்ற செயலியை வீட்டிலேயே பதிவிறக்கம் செய்து விமான நிலையத்தில் பயன்படுத்தலாம். ஒருவர் தனக்குத் தேவையில்லாத உதவியை, அதாவது சக்கர நாற்காலி சேவையைப் பெறுவது மற்றொருவருக்கு தேவையான உதவி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும்; இந்த சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

CM announces 3% DA hike for govt staff

CM announces 3% DA hike for govt staff 

01.11.2026

Chennai: Chief minister C Joseph Vijay on Saturday announced a 3% hike in dearness allowance for govt employees, teachers, pensioners and family pensioners with retrospective effect from July 1. The revision, from 60% to 63%, will benefit 16 lakh people and entail an additional burden of 1,858 crore on state exchequer, according to an official release. 

This, govt said, was in recognition of the roles played by officials and teachers in formulating and implementing welfare schemes. Employees and pensioners will also receive arrears for July to Oct ahead of Diwali. 

“Govt employees are happy about this. The happiness has doubled with govt allowing us to claim arrears before Diwali,” said Tamil Nadu secretariat association president G Venkatesan. This move comes after Union cabinet on Wednesday approved a 3% hike in DA to compensate against price rise. tnn

NMC weighs five-year rotation of HoDs after stakeholder feedback

NMC weighs five-year rotation of HoDs after stakeholder feedback TNN | Oct 24, 2026, 07.43 PM IST NEW DELHI: The National Medical Commission...