கர்நாடகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிக் கட்டணம் 10 சதவீதம் உயர்த்த முடிவு
By DIN | Published on : 03rd March 2019 02:19 AM
கர்நாடகத்தில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பாடங்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து விவாதிக்க பெங்களூரில் சனிக்கிழமை கர்நாடக அரசு மானியம் பெறாத தனியார் பொறியியல் கல்லூரிகளின் சங்கம், கர்நாடக மதம் மற்றும் மொழி சிறுபான்மையினர் தொழில் கல்லூரிகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர்ஜி.டி.தேவெ கெளடா தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பின்னர் ஜி.டி.தேவெ கெளடா செய்தியாளர்களிடம் கூறியது:
2019-20-ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த அதன் நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. நீண்ட விவாதத்துக்கு பிறகு கல்விக் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. கல்லூரி பிரதிநிதிகளிடம் முதல்வர் குமாரசாமியும் தொலைபேசியில் பேசி 10 சதவீத கல்விக் கட்டண உயர்வுக்கு ஒப்புக்கொள்ள வைத்தார்.
2 ஆண்டு காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில் கல்விக் கட்டணத்தை 15 சதவீதமாக உயர்த்த அரசு விரும்பியபோதும், அதற்கு ஒப்புக்கொள்ளாத நீதிபதி சைலேந்திரகுமார் தலைமையிலான கட்டண ஒழுங்குமுறைக் குழு, 8 சதவீத கல்விக் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்திருந்தது. சட்ட சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அதற்கு அரசு ஒப்புக் கொண்டிருந்தது.
ஆனால், இம் முறை 25 சதவீதத்துக்குப் பதிலாக 10 சதவீதக் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதித்துள்ளது.
7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம், கல்லூரியை நடத்துவதற்கான செலவைக் கருத்தில் கொண்டு கட்டண உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. அரசு பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார் அவர்.
நீதிபதி சைலேந்திரகுமார் தலைமையிலான கட்டண ஒழுங்குமுறைக் குழு கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய குழுவை அரசு அமைக்கவில்லை. இந்தநிலையில், கல்விக் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது குறிப்
பிடத்தக்கது.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம்
கல்வி ஆண்டு அரசு ஒதுக்கீடு தனியார் ஒதுக்கீடு
2018-19 ரூ.53,460+பல்கலை. கட்டணம் ரூ.1,43,748
2019-20 ரூ.58,800+பல்கலை. கட்டணம் ரூ.2,01,960

No comments:
Post a Comment