Sunday, March 31, 2019

மருத்துவத்துடன் சமூக பங்களிப்பும் அவசியம்

Added : மார் 31, 2019 02:33




 
மதுரை: "மருத்துவத்துடன் சமூக பங்களிப்பிலும் டாக்டர்கள் அக்கறை செலுத்த வேண்டும்" என தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராஜா வலியுறுத்தினார்.

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. டீன் ராஜா முத்தையா வரவேற்றார். கண்காணிப்பாளர் சோமசுந்தரம், துணை முதல்வர் மொகந்தி மற்றும் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

முத்துராமலிங்கம் பேசுகையில், "டாக்டர்கள் சிறந்த மருத்துவமனைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஒழுக்கத்தை கடைபிடித்து பெற்றோருக்கும், நாட்டிற்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்" என்றார்.

முன்னாள் துணைவேந்தர் ராஜா பட்டமளிப்பு உரையாற்றியதாவது:தமிழகத்தில் உள்ள 20 மருத்துவக் கல்லுாரிகளில் வேலம்மாள் கல்லுாரி குறிப்பிடும் பெயரை பெற்றுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களை தவறவிடும் திறமையான மாணவரின் டாக்டர் கனவை நிகர்நிலை பல்கலை மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் நிறைவேற்றுகின்றன.டாக்டர்களுக்கு ஓய்வு என்பது இல்லை. உயிரை காப்பாற்றும் பணியில் அவர்கள் மனதிருப்தியடைகின்றனர். பட்டம் பெறுவோர் நல்ல டாக்டராக, நல்ல பெற்றோராக, நல்ல மனிதராக விளங்க வேண்டும். சமூக பங்களிப்பில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.
விழாவில் 141 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024