ஏர் - இந்தியா விமானிகளுக்கு புது கட்டுப்பாடு அறிவிப்பு
Added : மார் 27, 2019 21:55
புதுடில்லி, 'விமான பயணத்தின் போது, விமானிகள், தங்களுக்காக, சிறப்பு உணவுகளை, 'ஆர்டர்' செய்யக் கூடாது' என, 'ஏர் - இந்தியா' நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.ஏர் - இந்தியா விமான நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அமிதாப் சிங், விமானிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:விமான பயணத்தின் போது, விமானிகள் தங்களுக்கென சிறப்பு உணவு பொருட்களை, ஆர்டர் செய்யக் கூடாது; இது, நிறுவனத்தின் விதிகளுக்கு எதிரானது. நிறுவனம் வகுத்துள்ள உணவு திட்ட முறைகளை, விமானிகள் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவ காரணங்களுக்காக, டாக்டர்கள் பரிந்துரை இருந்தால், அவர்கள் மட்டும், சிறப்பு உணவுகளை ஆர்டர் செய்யலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.விமானிகள் ஆர்டர் செய்யும் சிறப்பு உணவுகளால், செலவு அதிகரிப்பதால், இந்த திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ஏர் - இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:விமானிகள், பயணத்திற்கு முன், கூடுதல் விலையுள்ள சிறப்பு உணவுகளை ஆர்டர் செய்கின்றனர். அதை தயாரித்து எடுத்து செல்வதற்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதுடன், செலவும் அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment