Saturday, April 25, 2020


மருத்துவ மாணவி தற்கொலை

Added : ஏப் 25, 2020 01:15

நாகர்கோவில்:திண்டுக்கல் மாவட்டம், கரட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ் மகள் பிரீத்தி மீனா, 21. குமரி மாவட்டம், குலசேகரம் தனியார் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்காக, சுரேஷ் குடும்பத்துடன், குலசேகரம் அருகே அரமன்னம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்த பிரீத்தி மீனா, தன் அறைக்கு துாங்க சென்றார்.நேற்று காலையில் நீண்ட நேரமாகியும், அறைக் கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது, அவர் துாக்கில் சடலமாக தொங்கினார். குலசேகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024