முடிந்தது 4 நாள் ஊரடங்கு: சேலத்தில் முண்டியடித்த மக்கள்
Added : ஏப் 30, 2020 02:30
சேலம்:சேலம் மாநகராட்சி பகுதியில், நான்கு நாளுக்கு பின், முழு ஊரடங்கு தளர்த்தப் பட்டதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மக்கள் முண்டியடித்தனர். இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா தொற்றை குறைக்க, சேலம் மாநகர பகுதியில், 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.சாலைகள் வெறிச்மக்களின் தேவைக்கு, வாகனங்களில் பொருட்கள் விற்கப் பட்டன. நான்கு நாளாக, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.நேற்று முன்தினத்துடன், முழு ஊரடங்கு நிறைவு அடைந்ததால், நேற்று காலை முதல், வழக்கமான ஊரடங்கு அமலுக்கு வந்தது.
மளிகை, காய்கறி சந்தைகள் திறக்கபட்டன.ஆனால், 4 நாளாக வீடுகளுக்குள் அடைபட்ட மக்கள், நேற்று மடை திறந்த வெள்ளமாக, கடைகளுக்கு படையெடுத்தனர். மளிகை கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. காய்கறி, உழவர் சந்தைகளில் கூட்டம் அலைமோதியது.சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்க மக்களுக்கு பொறுமையில்லை; ஒருவரை ஒருவர் தொட்டும், தள்ளிவிட்டபடியும் நின்று பொருட்களை வாங்கினர். ஓரிரு மணி நேரத்தில் அனைத்து பொருட்களும் காலியாயின.
நான்கு நாளுக்கு பின் கடைகள் திறக்கப்பட்டதால், சாலையில் வாகனங்களையும் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. வழக்கத்தை விட பல மடங்கு வாகனங்கள் அதிகமாக இருந்தன.போக்குவரத்து நெரிசல்பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டிருந்ததால், ஒரு வழிச்சாலையில் காத்திருந்து, ஊர்ந்து செல்லும் நிலை இருந்தது.
முழு ஊரடங்கு காலத்தில், நடமாடும் வாகனங்களில் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட் களை மாநகராட்சி விற்பதாக அறிவித்து வந்தாலும், அனைத்து பகுதிகளையும் சென்றடைய வில்லை.கூடுதல் வாகனங்களை இயக்கி, அனைத்து பகுதிகளுக்கும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்றால் தான், முழு ஊரடங்கு பலனளிக்கும். இப்படி முண்டியடித்து வரும் மக்களால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது கடினம்.
No comments:
Post a Comment