'ஜியோமீட்' அறிமுகம்
பதிவு செய்த நாள்07மே 2020 00:00
வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நிலை உருவான பின், காணொலி மூலமாக உரையாடுவது அதிகரித்துவிட்டது. இதையடுத்து, 'ஜூம்' போன்ற பல நிறுவனங்கள் கொடிகட்டி பறக்க துவங்கியுள்ளன.
இந்நிலையில், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது. 'ஜூம், கூகுள் மீட், ஹவுஸ்பார்ட்டி' போன்ற நிறுவனங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், 'ஜியோமீட்' எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி மூலமாக, இலவச பிளானில், ஐந்து நபர்களுடன் உரையாடலாம். பிசினஸ் பிளான் எனில், 100 பேருடன் உரையாடலாம்.
'ஆண்ட்ராய்டு, ஐபோன் உள்ளிட்ட போன்களிலும், விண்டோஸ், மேக் மென்பொருள் கொண்ட கம்ப்யூட்டர்களிலும் இதை பயன்படுத்தலாம். மேலும், கூகுள் குரோம் மூலமாகவும் மீட்டிங்கில் இணையலாம்' என, ஜியோ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment