Wednesday, May 27, 2020

அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்து வழக்கு


அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்து வழக்கு

Added : மே 27, 2020 01:06

மதுரை : தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை, 58லிருந்து, 59 ஆக உயர்த்தியதற்கு எதிரான வழக்கில், அரசிடம் விபரம் பெற்று தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகரம், அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர், ஜெயமங்கலம் தாக்கல் செய்த மனு:ஏப்., 30ல், பணி ஓய்வு வயதை அடைந்தேன். மே 31 வரை மறு பணியமர்வு செய்யப்பட்டேன். ஊரடங்கால், ஓய்வு கால பலன்களை வழங்கவில்லை என, அரசு தரப்பில் தெரிவித்து விட்டனர்.அதற்குரிய பரிந்துரையும், அரசுக்கு அதிகாரிகள் அனுப்பவில்லை. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58லிருந்து, 59 ஆக உயர்த்தி, அரசு, மே 7ல் அரசாணை பிறப்பித்தது. இதன்படி, மே 31ல் ஓய்வு பெறுவோர், மேலும் ஓராண்டு பணியில் நீட்டிப்பர்.அரசாணையில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.

ஓய்வு வயது நீட்டிப்பிற்குரிய தேதியை அரசு நிர்ணயிக்க முடியாது; நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசாணையால், எங்களை போல், ஏப்., 30ல் ஓய்வு வயதை எட்டியவர்களுக்கு பயனில்லை. அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.ஏப்., 30ல் பணி ஓய்வு வயதை அடைந்தவர்களுக்கும், ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை என்னை பணியிலிருந்து விடுவிக்க, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார். இதுபோல், மற்றொரு மனு தாக்கலானது.'அரசிடம் விபரம் பெற்று, அரசு வழக்கறிஞர் இன்று தெரிவிக்க வேண்டும்' என, நீதிபதி ஜெ.நிஷாபானு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024