Friday, May 29, 2020

ஒரு நாளைக்கு 81 மைல்களுக்கு மேல் பயணிக்க வெட்டுக்கிளிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்


ஒரு நாளைக்கு 81 மைல்களுக்கு மேல் பயணிக்க வெட்டுக்கிளிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

இணைய தளத்தில், வெட்டுக்கிளியின் (Locusts) தாக்குதல் தொடர்பான வீடியோக்களை பார்த்தால், அதன் பயங்கரத்தை அறியலாம். பாலைவன வெட்டுக்களிகள் என்றால் என்ன என நீங்கள் யோசிக்கிறீர்களா? அதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.

 ZH Web (தமிழ்) | Updated: May 28, 2020, 08:00 PM IST

Photo: Zee Network

புது டெல்லி: வெட்டுக்கிளி (Locusts) தாக்குதல் தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் காணப்பட்டது. வெட்டுக்கிளி படையெடுப்பை புயல் என்று தான் கூறவேண்டும். ஏற்கனவே இந்த வெட்டுக்கிளி புயல் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சுமார் 16 மாவட்டங்களில் படையெடுத்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன என முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது,மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை தாக்கிய பின்னர், வெட்டுக்கிளிகள் (Locusts) டெல்லி மற்றும் அதை ஒட்டிய தேசிய தலைநகர் பிராந்தியத்தை (என்.சி.ஆர்) நோக்கி செல்கின்றன.

வெட்டுக்கிளி (Locusts) பசுமை நிறைந்த மண்டலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது. இது தலைநகருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனென்றால், இங்கு பசுமை நிறைந்த பகுதிகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டு, இது பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏனெனில் பாலைவன வெட்டுக்கிளிகள் பொதுவாக தனியாக அல்லது சிறிய குழுக்களாக வந்து தான் பொதுவாக தாக்குதல் நடத்தும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெரிய திரளாக வந்து தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய தளத்தில், வெட்டுக்கிளியின் (Locusts) தாக்குதல் தொடர்பான வீடியோக்களை பார்த்தால், அதன் பயங்கரத்தை அறியலாம். பாலைவன வெட்டுக்களிகள் என்றால் என்ன என நீங்கள் யோசிக்கிறீர்களா? அதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.

பாலைவன வெட்டுக்களிகள் என்றால் என்ன?

பாலைவன வெட்டுக்கிளி (ஸ்கிஸ்டோசெர்கா கிரேகாரியா; கிரில்லஸ் கிரெகாரியஸ்) என்பது ஒரு வெட்டுக்கிளி இனமாகும், இது அக்ரிடிடே குடும்பத்தில் ஒரு குறுகிய கொம்பு உள்ள வெட்டுக்கிளி. இது உலகின் மிகவும் ஆபத்தான, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் புலம்பெயர்ந்த பூச்சிகளில் ஒன்றாகும். இவை அனைத்து வகையான பசுமை பயிர்கள் மற்றும் தீவனம் உள்ளிட்ட எந்தவொரு தாவரங்களையும் அதிக அளவில் சாப்பிடும்.

பாலைவன வெட்டுக்கிளியின் நீளம் 0.5 முதல் 3 அங்குலங்கள் வரை இருக்கும் என்றும், அது 0.07 அவுன்ஸ் எடையுள்ளதாக இருக்கும் எனவும் நேஷனல் ஜியோகிராஃபிக் வலைத்தளத்தில் உள்ள தகவல்கள் கூறுகின்றன.

உலகில் உள்ள பாலவைவன வெட்டுக் கிளி வகைகள்:

10 வகையான வெட்டுக்கிளிகளின் இனங்களை உலகம் அறியும். இந்த இனங்களின் பெயர் - பாலைவன வெட்டுக்கிளி, பாம்பே வெட்டுக்கிளி, இடம்பெயர்ந்த வெட்டுக்கிளி, இத்தாலிய வெட்டுக்கிளி, மொராக்கோ வெட்டுக்கிளி, சிவப்பு வெட்டுக்கிளி, பழுப்பு வெட்டுக்கிளி, தென் அமெரிக்க வெட்டுக்கிளி, ஆஸ்திரேலிய வெட்டுக்கிளி, மர வெட்டுக்கிளி ஆகியவை.

இந்தியாவில் 4 வகை வெட்டுக்கிளிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவை பாலைவன வெட்டுக்கிளி (சிஸ்டோசெர்கா கிரேகரியா), இடம்பெயர்ந்த வெட்டுக்கிளி (லோகஸ்டா மைக்ரேட்டோரியா) பம்பாய் வெட்டுக்கிளி (நோமடாக்ரிஸ் சுசின்க்டா) மற்றும் மர வெட்டுக்கிளி (அனாக்ரிடியம் எஸ்பி.).

பாலைவன வெட்டுக்கிளிகள் பற்றிய தகவல்கள்...

1. வெட்டுக்கிளி திரளாக மிகப் பரந்த தூரத்தை கடக்கக்கூடும், சில இனங்கள் ஒரு நாளைக்கு 81 மைல் அல்லது அதற்கு மேற்பட்ட தூரங்களை கூட கடக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

2. சராசரியாக சிறிய வெட்டுக்கிளியின் கூட்டம் ஒரே நாளில் சுமார் 10 யானைகள், 25 ஒட்டகங்கள் அல்லது 2500 நபர்கள் உண்ணும் உணவை சாப்பிடுகின்றது.

3. வெட்டுக்கிளிகள் தனது நிறம் மற்றும் உடல் வடிவத்தை கூட மாற்றலாம்.

4. ஒரு பாலைவன வெட்டுக்கிளி கூட்டம் 460 சதுர மைல் அளவுவிற்கு பரவி இருக்கலாம். அதில் அரை சதுர மைலுக்குள் 40 முதல் 80 மில்லியன் வெட்டுக்கிளிகள் வரை இருக்கும்.

5. பாலைவன வெட்டுக்கிளி காரணமாக 64 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

6. ஒரு திரளில் 80 மில்லியன் வெட்டுக்கிளிகள் இருக்கலாம்.

(மொழியாக்கம்: சித்ரா விக்னேஷ்)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024