Wednesday, May 13, 2020

குடோனில் துாங்கும், 'என் 95 மாஸ்க்'குகள்


குடோனில் துாங்கும், 'என் 95 மாஸ்க்'குகள்

Added : மே 13, 2020 00:31

கடலுார் : கடலுாரில் கொள்முதல் செய்த, 'என் 95 மாஸ்க்'குகள் குடோனில் துாங்குவதால், மருத்துவ ஊழியர்கள், பாதுகாப்பின்றி பணிபுரியும் சூழல் உள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போரில், முன் நின்று போராடும் மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் பலர் மரணத்தை தழுவினர்....இதையடுத்து, மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி, 'என் 95 மாஸ்க்' வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாஸ்க்குகள் பாதுகாப்பானது என்பதால், இதன் விலை, 250 - 400 ரூபாய் வரை உள்ளது.இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை, ஐந்து மருத்துவர்கள், நான்கு செவிலியர்கள், ஐந்து சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக, என் 95 மாஸ்க்குகளை மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளது. ஏராளமான தன்னார்வலர்களும், என் 95 மாஸ்க்குகளை வழங்கியுள்ளனர்.இந்த மாஸ்க்குகள், மாதக் கணக்கில், கடலுார் டவுன் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஏராளமான வாட்டர் பாட்டில்களும் வாங்கி, அங்கு அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

என் 95 மாஸ்க்குகள், மருத்துவப் பணியாளர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. பெரும்பாலான செவிலியர்கள், ஊழியர்கள் சாதாரண மாஸ்க்குகளை அணிந்து பணிபுரிவதால், அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கடலுார் டவுன் ஹாலில் மாதக்கணக்கில் துாங்கும், என் 95 மாஸ்க்குகளை, அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒருவருக்கு 4 மாஸ்க்மருத்துவர் ஒருவர் கூறியதாவது:கொரோனா சிறப்பு வார்டுகளில் பெரும்பாலான டாக்டர்கள், நர்ஸ்கள் சாதாரண மாஸ்க்குகளையே பயன்படுத்தி வருவதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது .

'என் 95 மாஸ்க்'குகள் பாதுகாப்பானவை. அவை கூடுதல் விலை என்பதுடன், பற்றாக்குறை உள்ளது. மாவட்டத்தில் மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, என் 95 மாஸ்க்குகள் போதுமானதாக இல்லை.எனவே, ஒருவருக்கு தலா நான்கு, என் 95 மாஸ்க்குகளை வழங்கினால், அவர்களின் ஒரு மாத தேவைக்கு போதுமானதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024