Friday, January 8, 2021

பாரத தரிசன சிறப்பு ரயில் பிப்., 16க்கு மாற்றம்


பாரத தரிசன சிறப்பு ரயில் பிப்., 16க்கு மாற்றம்

Added : ஜன 08, 2021 02:15

கோவை:பாரத தரிசன சுற்றுலா ரயில், பிப்., 16ம் தேதி புறப்படுவதால், பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில், கடந்த டிச., 20ல், திருநெல்வேலியில் இருந்து பாரத தரிசன சுற்றுலா சிறப்பு ரயில் இயக்குவதாக இருந்தது. குளிர்காலம் காரணமாக தேதி தள்ளிவைக்கப்பட்டு, இந்த ரயில் வரும் பிப்., 16ல் புறப்படுகிறது.

மதுரையில் இருந்து புறப்பட்டு, திருநெல்வேலி வழியாக செல்லும் வகையில் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, போத்தனுார், ஈரோடு, சேலம் வழியாக குவாலியர் செல்கிறது.அங்குள்ள கோட்டைகளுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுவர்.

மேலும், உலகப்புகழ் பெற்ற கஜூராஹோ சிற்பங்கள், ஜான்சி கோட்டை, விதிஷா சாஞ்சி ஸ்துாபி, ஹலாலி டேம், போபாலில் பிம்பேட்கா குகை மற்றும் போஜ்பூர் சிவாலயம் தரிக்கலாம். 10 நாட்கள் கொண்ட யாத்திரைக்கு, 10 ஆயிரத்து, 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40655, 82879 31965 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024