Saturday, January 30, 2021

உங்கள் குழந்தைக்கு நாளை சொட்டு மருந்து போடுங்க!


உங்கள் குழந்தைக்கு நாளை சொட்டு மருந்து போடுங்க!

Updated : ஜன 30, 2021 05:52 | Added : ஜன 30, 2021 05:51

சென்னை : போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை(ஜன.,31) நடைபெற உள்ளதால், தவறாமல், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு சொட்டு மருந்து போட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலியோ நோய் இல்லாத நாடாக இந்தியா உள்ளது. ஆனாலும், அண்டை நாடுகளில் இருந்து, போலியோ பரவாமல் தடுக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.


நாடு முழுதும், வரும், 31ம் தேதி, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம், காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பணியில், 41 ஆயிரத்து, 53 மையங்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். முகாமில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள, சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024