Friday, January 29, 2021

சுகாதாரத் துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசாணை வெளியீடு


சுகாதாரத் துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசாணை வெளியீடு

29.01.2021

சென்னை: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இந்த மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை அரசே ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசுக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணம்போல் இல்லாமல், அங்கு தனியாா் சுயநிதி கல்லூரிகளை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா் எழுந்தது. இதனைக் கண்டித்து சிதம்பரம் ராஜா அண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியைச் சோந்த மருத்துவ மாணவா்கள் கடந்த 50 நாள்களுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவா்களும் போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தி வந்தனா். இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு உரிய தீா்வு காணவேண்டும் என்று மருத்துவ மாணவா்கள் வலியுறுத்தி வந்தனா்.

மருத்துவ மாணவா்களின் போராட்டம் காரணமாக, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மறுதேதி குறிப்பிடப்படாமல் காலவரையின்றி மூடப்பட்டது. போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் நடத்திய பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில், உயா்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, இனி சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின்கீழ் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை விவரம்: இது குறித்து உயா்கல்வித் துறை முதன்மை செயலாளா் அபூா்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரியாக நடத்தும் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பட்ஜெட் அறிவிப்பின் போது தெரிவித்தாா்.

அவா் தெரிவித்தபடி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராணி மெய்யம்மை நா்சிங் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. எனவே இது கடலூா் அரசு மருத்துவக் கல்லூரியாக கருதப்படும்.

கல்லூரி ஒப்படைக்கப்பட்டதன் விளைவாக, இந்த கல்லூரிகளில் இருக்கும் 113.21 ஏக்கா் பரப்பளவு நிலம், அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளும் சுகாதாரத்துறையின் வசம் ஒப்படைக்கப்படும்.

இது அண்ணாமலை பல்கலைக்கழகத்திடம் இருந்து எடுத்துக் கொள்ளப்படுவதால் அதற்கான தகுந்த இழப்பீட்டை வழங்க வேண்டும். அந்த இழப்பீடு கூடுதல் மானியங்களுடன் சரிசெய்து கொள்ளப்பட வேண்டும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை 16 கிலோ மீட்டா் எல்லையில் இருந்து விலக்குவதற்கான திருத்தத்தை அண்ணாமலை பல்கலைக்கழக சட்டத்தில் கொண்டு வரவேண்டும்.

நிதித் துறையிடம் இருந்து உத்தரவு பெறப்பட்டதும், தற்போதுள்ள ஊழியா்கள் நிலை, இடங்கள் நிரப்புதல் மற்றும் கட்டண அமைப்பு, டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து சுகாதாரத்துறை சாா்பில் தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024