Friday, January 29, 2021

ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி: அரசு மருத்துவ கல்லுாரியாக மாற்றம்

DINAMALAR

ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி: அரசு மருத்துவ கல்லுாரியாக மாற்றம்

Added : ஜன 28, 2021 23:02

சென்னை:அண்ணாமலை பல்கலையுடன் இணைந்த, ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியை, கடலுார் மாவட்டத்திற்கான, அரசு மருத்துவ கல்லுாரியாக மாற்ற, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

'அண்ணாமலை பல்கலையுடன் இணைந்த, ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியை, அரசே ஏற்று, கடலுார் மாவட்டத்திற்கான அரசு மருத்துவ கல்லுாரியாக்கப்படும்' என, 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அதன்படி, ராஜா முத்தையா கல்லுாரியை, அரசு மருத்துவ கல்லுாரியாக மாற்ற, அண்ணாமலை பல்கலை பதிவாளர், சுகாதாரத் துறைக்கு கருத்துரு அனுப்பினார். அதை ஏற்று,ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியை, சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்து, கடலுார் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியாக மாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை, உடனடியாக எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024