சர்ச்சை நீதிபதிக்கான பணி நிரந்தரம் ரத்து?
Added : ஜன 30, 2021 21:21
புதுடில்லி:சிறுமியரிடம் தகாத முறையில் நடந்தவர்களை விடுவித்து, சர்ச்சைக்குரிய இரண்டு தீர்ப்புகளை வழங்கிய, மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதியை, நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை, உச்ச நீதிமன்ற, 'கொலீஜியம்' ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையைச் சேர்ந்த, பெண் நீதிபதி, புஷ்பா கனேதிவாலா, சமீபத்தில் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளன. 'போக்சோ' சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், சிறுமியரிடம் தகாக முறையில் நடந்தவர்களை விடுவித்து, அவர் தீர்ப்பு அளித்தார். அதில் ஒரு தீர்ப்பை செயல்படுத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக, 2019ல் நியமிக்கப்பட்டு உள்ள அவரை, நிரந்தர நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான கொலீஜியம், கடந்த, 20ம் தேதி பரிந்துரை செய்து இருந்தது.தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளதால், அந்தப் பரிந்துரையை, கொலீஜியம் திரும்பப் பெற்றுள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment