நீதிமன்றங்கள் மீதான விமர்சனம் அதிகரிப்பு'
Updated : ஜன 30, 2021 00:03 | Added : ஜன 29, 2021 21:36 |
புதுடில்லி:'நீதிமன்றங்களை விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது; அனைத்து தரப்பு மக்களும் விமர்சிக்கின்றனர்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நகைச்சுவை பேச்சாளர் குனால் கம்ரா, கர்நாடகாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ரச்சித் தனிஜா ஆகியோர், சமூக வலைதளங்களில் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். இருவர் மீதும், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
குனால் கம்ரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'பொருத்தமில்லாமல் பேசுவது, நகைச்சுவைக்கான சாதனம். நகைச்சுவையாக கூறப்படுவதை, அப்படியே அர்த்தமாக கருதி, எடுத்துக் கொள்ளக் கூடாது' என, கூறியிருந்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: நீதிமன்றங்களை விமர்சிப்பது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் விமர்சிக்கின்றனர். பதில் மனு தாக்கல் செய்ய, தனிஜாவுக்கு மூன்று வார கால அவகாசம் வழங்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment