அரசு டாக்டர்களின் கோரிக்கை
Added : ஜன 31, 2021 00:51
சென்னை:மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் பெருமாள் பிள்ளை மதுரை மருத்துவ கல்லுாரி டாக்டர்தாஹிர் தேனி மருத்துவ கல்லுாரி டாக்டர் நளினி உள்ளிட்ட எட்டு டாக்டர்கள் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் தமிழகத்தில் பணியாற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கும்இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பள வேறுபாடு உள்ளது.அரசு மருத்துவர்களுக்கான சம்பள மறு ஆய்வு குறித்து 2009ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இதனால் எங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுக்கள் நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தன. மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப். 3க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment