Tuesday, January 12, 2021

ரேஷனில் பொங்கல் பரிசு பெற 25 வரை அவகாசம் நீட்டிப்பு


ரேஷனில் பொங்கல் பரிசு பெற 25 வரை அவகாசம் நீட்டிப்பு

Added : ஜன 11, 2021 23:38

சென்னை : ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கான அவகாசம், வரும், 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்குகிறது. அவற்றை, ரேஷன் கடைகளில் வழங்கும் பணி, 4ம் தேதி துவங்கியது.பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, 12ம் தேதிக்குள் முடிக்கும்படியும், விடுபட்ட கார்டு தாரர்களுக்கு, 13ம் தேதி வழங்க வேண்டும் என்றும், ரேஷன் கடைகளை நடத்தும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, உணவு துறை உத்தரவிட்டது.நேற்று வரை, 2 கோடி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இன்னும், 10 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. இதற்கான அவகாசம், நாளை முடிவதாக இருந்தது.இந்நிலையில், விடுபட்டவர்கள், பொங்கல் பரிசு தொகுப்பை, வரும், 18ம் தேதி முதல், 25ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது. இதனால், பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள், திரும்பி வந்து, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024