Wednesday, January 20, 2021

தொடரும் 'சர்வர்' பிரச்னை ரேஷன் கார்டுதாரர்கள் அவதி

தொடரும் 'சர்வர்' பிரச்னை ரேஷன் கார்டுதாரர்கள் அவதி

Added : ஜன 19, 2021 23:02

சென்னை:ரேஷன் கடைகளில், விற்பனை முனைய கருவியை இயக்கும், 'சர்வரில்' ஏற்பட்ட பிரச்னையால், இம்மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல், ரேஷன் கார்டுதாரர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தமிழகத்தில், 2020 அக்டோபர், 1ல், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்பட்டன.கைரேகை பதிவில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டதால், அக்., இறுதியில், அத்திட்டம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ரேஷன் கார்டு, 'ஸ்கேன்' செய்வது உள்ளிட்ட பழைய முறைப்படியே பொருட்கள் வழங்கப்பட்டன.

பின், விரைவாக கைரேகையை பதிவு செய்யும் வகையில், தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு, டிசம்பர் இறுதியில், மீண்டும் செயல்படுத்தப்பட்டது.இருப்பினும், அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போது, பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக, கைரேகை பதிவுக்கு பதில், பழைய முறையே பின்பற்றப்பட்டது.

ரேஷன் கடைகளில், நேற்று முன்தினம் முதல், இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்களும், விடுபட்ட கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், ரேஷன் ஊழியர்கள் கடைகளை திறந்து, விற்பனை முனைய கருவியை, 'ஆன்' செய்த போது, அதன் மென்பொருள் இயக்கம் செயல்படவில்லை. தொடர்ந்து, அவர்களால், பொருட்கள் விற்பனையை பதிவு செய்ய முடியவில்லை.

இதனால், காலை முதல் சுட்டெரிக்கும் வெயிலில், கால்கடுக்க காத்திருந்தும், பொருட்களை வாங்க முடியாமல், கார்டுதாரர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி, சென்றனர். டிசம்பர் மாதத்திலும், அதே பிரச்னை காரணமாக, கார்டுதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ரேஷனில், 'சர்வர்' பிரச்னை தொடர் கதையாவதற்கு, ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியமே காரணம் என்ற, புகார் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024