Sunday, January 3, 2021

ஆன்மிக பயணம்: ரஜினி முடிவு?

ஆன்மிக பயணம்: ரஜினி முடிவு?

Added : ஜன 03, 2021 00:48

சென்னை:சொன்னதை செய்ய முடியாததால், மன உளைச்சலில் உள்ள ரஜினி, ஆன்மிக குருமார்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

'சரியான ஆளுமை இல்லாமல் தவிக்கும் தமிழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும், கட்சி ஆரம்பித்து, 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்' என, மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார், ரஜினி. ஆனால், கொரோனா அச்சத்தால், அரசியலில் நுழையும் முடிவில் இருந்து பின்வாங்கினார்.கடந்த மாதம், ஐதராபாத் சென்ற ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு படக்குழுவினருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால், ரத்த அழுத்த பிரச்னை காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, உரிய சிகிச்சைக்கு பின், வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, கட்சி ஆரம்பிப்பதில் இருந்து பின்வாங்கினார். ஆனாலும், ரசிகர்களையும், நிர்வாகிகளையும் ஏமாற்றி விட்டோமோ என்ற மன உளைச்சலில், அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினி வீட்டுக்கு, நமோ நாராயணா சுவாமிகள் வருகை புரிந்துள்ளார். அவரை வரவேற்ற ரஜினிக்கு,ஸ்படிக மாலையை அணிவித்து, ஆசிர்வதித்து, அவருடன் சிறிது நேரம் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்த படங்கள், தற்போது இணையதளத்தில் உலா வருகின்றன. ஆன்மிக அரசியலை அறிவித்த ரஜினி, தற்போது மன நிம்மதிக்காக, ஆன்மிக பயணம் மேற்கொள்வார் என, தகவல் வெளியாகிஉள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024