துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு வரவேற்பு உயர்கல்வி செயலர்களின் முடிவுக்கு 'குட்டு'
Added : ஜன 10, 2021 01:51
பாரதிதாசன், பெரியார் பல்கலை துணைவேந்தர்கள் பதவி நீட்டிக்கப்பட்டதற்கு, கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், உயர்கல்வித் துறை செயலர்களின் தன்னிச்சையான முடிவுகளுக்கு, 'குட்டு' வைக்கப்பட்டுள்ளது.பல்கலை துணைவேந்தர்நியமனங்களில், பல ஆண்டுகளாக பல்கலை மானியக் குழுவின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், துணைவேந்தராக நியமிக்கப்படுபவரின் நன்னடத்தை குறித்த விபரங்களை சரிவர கண்காணிக்காமலும், பல கோடிகளை பெற்று, துணைவேந்தர்கள் நியமனம் நடந்துள்ளது.
மறுபரிசீலனைஇது குறித்து, பல்வேறு கால கட்டங்களில், கல்வியாளர்கள் குரல் கொடுத்தும், எவ்வித பயனும் இல்லை. இவ்வாறு நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் சிலர், உயர்கல்வி துறையினரோடு இணைந்து, பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி, பல்கலைகளின் மாண்பையும் கெடுத்து வந்தனர். கவர்னராக, பன்வாரிலால்புரோஹித் பதவி ஏற்ற பின், துணைவேந்தர் நியமனங்கள் வெளிப்படைத் தன்மையுடனும், தகுதி அடிப்படையிலும் நடந்தன. என்ன தான் துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையான முறையில் நடந்தாலும், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கையில் சிக்கி, துணைவேந்தர்களால் சுயமாக செயல்பட முடியவில்லை.பல்கலை சிண்டிகேட் கூட்டங்களில், நிதி சம்பந்தமான விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டால், அந்த தீர்மானத்தை நிறைவேற்றாமல், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சிண்டிகேட் தீர்மானங்களை மறுபரிசீலனை செய்து, திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.கொரோனா காலத்தில், பல்கலைகளில் பணியாற்றும் ஆசிரியர், அலுவலர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே திணறும் நிலை உள்ளபோது, பல்கலைகளில் தேவையில்லாத ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குகின்றனர்.
இதனால், பல்கலைகள் கடும் நிதிச்சுமைக்கு தள்ளப்படும். இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலையில், மானியக் குழுவின் விதிகளுக்கு மாறாக, ஆசிரியர் நியமன விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதை எதிர்த்து, பல்கலை ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.பணி நீட்டிப்புஇந்த வழக்கில், பல்கலைசார்பில், உயர்கல்வி துறையின் வழிகாட்டுதலின்அடிப்படையிலேயே விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாக, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி, உயர்கல்வி துறை செயலர், அந்த பதவியை வகிப்பதற்கான தகுதி உடையவர் தானா எனக் கேள்வி எழுப்பி, ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்தது.இந்நிலையில், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மணிசங்கரின் பதவிக்காலம் ஜன., 7ல் நிறைவடைந்தது. புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை, உயர்கல்வி துறை செயலர் அபூர்வா தலைமையில், துணைவேந்தர் பொறுப்பு குழு நியமிக்கப்பட்டது.இந்நிலையில், கவர்னர் அலுவலகத்தில் இருந்து, மறு அறிவிப்பு வரும் வரை, மணிசங்கருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ஜன., 7ல்பணி நிறைவு பெற்ற, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலுவுக்கும் பணி நீட்டிப்புவழங்கப்பட்டுள்ளது.இது, கல்வியாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம், புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படும் வரை, உயர்கல்வி துறை செயலரின் தன்னிச்சையான முடிவுகளை நிறைவேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment