Sunday, January 10, 2021

மீண்டும் திருப்பதி தரிசனம்


மீண்டும் திருப்பதி தரிசனம்

Added : ஜன 10, 2021 02:18

சென்னை:ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சென்னையில் இருந்து, திருமலை தரிசனத்திற்கான ஆன்மிக சுற்றுலா பயணம், ஒன்பது மாதங்களுக்கு பின் துவங்குகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க, 2020 மார்ச்சில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. திருமலை திருப்பதி தரிசன சேவையையும், திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒன்பது மாதங்களுக்கு பின், திருமலை சுற்றுலா பயண தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் இருந்து திருமலை தரிசனத்திற்கான, சுற்றுலா சேவையை, ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் மீண்டும் துவக்கியுள்ளது. சென்னை, தி.நகர், பர்கிட் சாலையில் உள்ள அலுவலகத்தில் இருந்து, தினமும் காலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, தரிசனம் முடித்து இரவு, 8:30 மணிக்கு, சென்னை திரும்பலாம்.பக்தர்கள் வசதிக்காக, 'வால்வோ' பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆன்மிக சுற்றுலாவில், திருமலை கோவில், பத்மாவதி தாயார் கோவில் சிறப்பு தரிசனம் மற்றும் காலை, மதிய உணவு வழங்கப்படும்.சுற்றுலா பயணியர் தங்கள் டிக்கெட்டுகளை, அலுவலக கவுன்டரிலும், www.aptdc.in மற்றும் www.aptourism.gov.in ஆகிய, இணையதளங்களிலும் முன்பதிவு செய்யலாம்.மேலும் தகவலுக்கு, 044 - - 2435 3373 மற்றும், 98405 80577 என்ற, எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024