Monday, February 8, 2021


08.02.2021 

போபால்:'ராகிங்' பிரச்னையால், மாணவி ஒருவர் தற்கொலை செய்த வழக்கில், நான்கு மாணவியருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், தனியார் மருந்தக கல்லுாரி உள்ளது. கடந்த, 2013ல், இந்த கல்லுாரியில் படித்த அனிதா சர்மா, வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியிருந்த கடிதத்தில், 'கல்லுாரியில் படிக்கும் சீனியர் மாணவியரான தேவன்ஷி, கீர்த்தி கவுர், தீப்தி, நிதி மாக்ரி ஆகியோர், ராகிங் என்ற பெயரில், என்னை சித்ரவதை செய்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, கூறப்பட்டிருந்தது.

நான்கு மாணவியரையும், போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, போபால் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமித் ரஞ்சன், நான்கு மாணவியருக்கும், தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 8,000 ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024