அரசாணைகளில் தமிழ் ஆங்கிலத்திற்கு தடை
Added : பிப் 19, 2021 23:30
சென்னை:'தமிழக அரசின் ஆணைகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளில், அதிக அளவில் ஆங்கிலம் பயன்படுத்தக் கூடாது; தமிழையே பயன்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி துறை அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில், தமிழ் ஆட்சிமொழி சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டப்படி, ஆட்சிமொழி தமிழ் மட்டுமே என்பதால், விதிகள், விதிமுறைகள், ஆணைகள் மற்றும் விலக்கு அளிப்பட்டவை தவிர, மற்ற உத்தரவுகள், தமிழிலேயே பிறப்பிக்கப்பட வேண்டும்.ஆனால், இந்த சட்ட த்தை மீறி, அரசாணைகள், கோப்புகள், பதிவேடுகள், சுற்றறிக்கைகள், தாக்கீதுகள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளிட்டவற்றில், தமிழை விட, ஆங்கிலம் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக, தமிழ் வளர்ச்சித் துறைக்கு புகார்கள் வருகின்றன.
இதுகுறித்து, அலுவலர்கள், துறை பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கவனமாக ஆவணங்களை கையாள வேண்டும்.அரசாணைகள், சுற்றறிக்கைகள், பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களில், தமிழ் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ஆங்கிலக் கலப்பை குறைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment