கோவையில் இருந்து கோவா, தாஜ்மஹாலுக்கு ரயில் மூலம் சுற்றுலா செல்ல முன்பதிவு தொடக்கம்
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் கோவையில் இருந்து ரயில் மூலம் கோவா, தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐஆர்சிடிசி ரயில் மூலம் கோவா, ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், சண்டிகர், வைஷ்ணவதேவி கோயில் மற்றும் தாஜ்மஹால் ஆகியவற்றைக் காண ஏற்பாடு செய்துள்ளது. 13 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவானது, வரும் மார்ச் 31-ம் தேதி மதுரையில் இருந்து தொடங்குகிறது. இதற்கான கட்டணம் ரூ.13,540. இதில், ரயில் பயணக் கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க பேருந்து வசதி ஆகியவை அடங்கும்.
இந்த சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி-ன் கோவை அலுவலகத்தை 9003140655, 8287931965 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment