Saturday, February 27, 2021

வங்கிகளுக்கு அடுத்த மாதம் 11 நாட்கள் விடுமுறை


வங்கிகளுக்கு அடுத்த மாதம் 11 நாட்கள் விடுமுறை

Updated : பிப் 26, 2021 21:13 

புதுடில்லி:நாடு முழுதும் உள்ள வங்கிகளுக்கு, அடுத்த மாதம், 11 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கியின் காலண்டர் வாயிலாக, வங்கிகளின் விடுமுறை தினங்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன.

'ஹோலி' பண்டிகை

அதன்படி, மார்ச், 5ம் தேதி, மிசோரம் மாநிலத்தில், 'சாப்சர் கட்' என்ற விழா கொண்டாடப் படுவதால், வங்கிகளுக்கு, அன்று விடுமுறை. மார்ச், 11ம் தேதி, மஹாசிவராத்திரி; மார்ச், 22ல், பீஹார் மாநில தினம்; மார்ச், 29ம் தேதி, மணிப்பூரில், 'யாவோசாங்' பண்டிகை மற்றும் மார்ச், 30ம் தேதி கொண்டாடப்படும்,

'ஹோலி' பண்டிகையை முன்னிட்டும், வங்கிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, 'இரண்டு சனிக்கிழமைகள் மற்றும் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளை சேர்த்து, அடுத்த மாதம், மொத்தமாக 11 நாட்கள், வங்கிகள் இயங்காது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வங்கி விடுமுறை நாட்கள், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது அல்ல. மாநிலம் மற்றும் பிராந்தியத்திற்கு ஏற்ப, இந்த விடுமுறைகள் மாறுபடும்.

இதற்கிடையே, மத்திய அரசின் தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வங்கி சங்கங்கள், மார்ச் 15, 16ம் தேதிகளில், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

பேரணி

மார்ச் 10ம் தேதி, பார்லிமென்ட்டை நோக்கி பேரணியாக செல்லவும், சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால், அடுத்த மாதம், மிகக் குறைவான நாட்களே இயங்கும் என்பதால், வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024