Saturday, February 20, 2021

ரத்தான இரு எம்.டெக்., படிப்புகள் தொடர்ந்து நடத்த ஐகோர்ட் உத்தரவு

ரத்தான இரு எம்.டெக்., படிப்புகள் தொடர்ந்து நடத்த ஐகோர்ட் உத்தரவு

Added : பிப் 20, 2021 00:02

சென்னை:ரத்து செய்யப்பட்ட, இரண்டு எம்.டெக்., படிப்புகளை தொடர்ந்து நடத்தவும், மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றவும், அண்ணா பல்கலைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் நடத்தப்பட்டு வந்த, 'எம்.டெக்., பயோடெக், எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் பயாலஜி' படிப்புகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.இந்தப் படிப்புகளில், 49.5 சதவீத, மத்திய இட ஒதுக்கீட்டை பின்பற்ற மத்திய அரசும், 69 சதவீத ஒதுக்கீட்டை பின்பற்ற மாநில அரசும் வற்புறுத்தியதால், மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதாகவும், இரு படிப்புகளையும் தொடர்ந்து நடத்தக் கோரியும், மாணவியர் இருவர் வழக்கு தொடர்ந்தனர்.

இம்மனுக்கள், நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் சரவணன்; அண்ணா பல்கலை சார்பில், வழக்கறிஞர் விஜயகுமார்; தமிழக அரசு சார்பில், சிறப்பு பிளீடர் மனோகரன்; மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் பிரகதீஷ் ஆஜராகினர். வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், இரண்டு எம்.டெக்., படிப்புகளையும் தொடர்ந்து நடத்தவும், மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை சேர்க்கவும், அண்ணா பல்கலைக்கு, நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Govt employees to get insurance cover up to 1cr

Govt employees to get insurance cover up to 1cr  10.10.2026 Lucknow: In an initiative to strengthen the welfare of state govt employees and ...