Friday, February 19, 2021

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு


திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

Added : பிப் 18, 2021 23:37

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தான நிர்வாகம், இணையதளம் வாயிலாக விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இதை பக்தர்கள் முன்பதிவு செய்து, தங்களின் திருமலை பயணத்தை முடிவு செய்கின்றனர்.

மார்ச் மாதத்திற்கான, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள், நாளை, காலை, 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. தினசரி, 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம், மார்ச் முழுவதும், இந்த டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024