Friday, February 19, 2021

ஐ.ஓ.பி., வங்கியில் அழகுக்கலை பயிற்சி

ஐ.ஓ.பி., வங்கியில் அழகுக்கலை பயிற்சி

Added : பிப் 19, 2021 04:30

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் கிளையில், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சியின் கீழ், அழகு கலை பயிற்சி பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செய்திக் குறிப்பு:தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக் கல்லுாரி, ஈஸ்வரி நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது, இங்கு அழகுக் கலை பயிற்சி பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

இதில், மணப்பெண் அலங்காரம், மெஹந்தி, பேஷியல், பல்வேறு விதமான சிகை அலங்காரம், முடி பராமரிப்பு உட்பட, அழகுக் கலை தொடர்பான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி, நபார்டு வங்கியின் நிதி உதவி வாயிலாக வழங்கப்படுகிறது.

விழாவில், நபார்டு வங்கியின் தஞ்சாவூர் மாவட்ட மேலாளர் கே.பாலமுருகன், பாங்க் ஆப் இந்தியா வங்கி தலைமை மேலாளர் அசோக் எஸ்.கனகி, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024