Friday, February 19, 2021

நாக்பூர் பெண் நீதிபதிக்கு புதுவிதமான எதிர்ப்பு

நாக்பூர் பெண் நீதிபதிக்கு புதுவிதமான எதிர்ப்பு

Added : பிப் 18, 2021 23:30

நாக்பூர் : பாலியல் அத்துமீறல் தொடர்பாக சர்ச்சை தீர்ப்பளித்த, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை பெண் நீதிபதிக்கு, குஜராத்தை சேர்ந்த பெண், ஆணுறைகளை அனுப்பி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சர்ச்சை

'போக்சோ' எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், ஒரு வழக்கில், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கணேதிவாலா, கடந்த மாதம் தீர்ப்பு அளித்தார். 'தோலும் தோலும் தொடர்பு கொண்டால் மட்டுமே அது, பாலியல் அத்துமீறலாகும்' என, தீர்ப்பில் அவர் குறிப்பிட்டார்.

இளம் சிறுமியின் ஆடைகளை களையாமல், அவருடைய மார்பகத்தை தொட்டதாக தொடரப்பட்ட வழக்கில், 39 வயதுடையவரை விடுதலை செய்து, நீதிபதி புஷ்பா கணேதிவாலா தீர்ப்பு அளித்தார். இது நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பெண் நீதிபதிக்கு ஆணுறைகளை அனுப்பி வைத்து, குஜராத்தை சேர்ந்த தேவ்ஸ்ரீ திரிவேதி என்ற பெண் அரசியல் நிபுணர், தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

தண்டனை

'நீதிபதியின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு, தவறு செய்யும் ஆண்களுக்கு சாதகமாக உள்ளது. ஆணுறை அணிந்தால் கூட, தோலோடு தோல் தொடர்பு இருக்காது. 'அதை உணர்த்தவே, ஆணுறைகளை அனுப்பி வைத்தேன். இதற்காக எந்த தண்டனை அளித்தாலும் தயாராக உள்ளேன்' என, தேவ்ஸ்ரீ திரிவேதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024