Wednesday, May 3, 2017

தலையங்கம்
பின்னடைவில் தொழிலும், விவசாயமும்
ந்தவொரு நாடும், முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டுமென்றால், அங்கு பொருளாதார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் மேம்பட்டு இருக்கவேண்டும். பொருளாதார வசதி மேம்பட்டு இருக்கவேண்டுமென்றால், நிச்சயம் அங்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் ஒழிக்கப்படவேண்டும். தொழிலும், விவசாயமும் இரண்டு தண்டவாளங்கள்போல் இருந்தால்தான் அங்கு வேலைவாய்ப்பு என்ற ரெயில் வேகமாக ஓடமுடியும்.

கடந்த மார்ச் மாதம் 31–ந் தேதியோடு தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்து காத்திருக்கிறார்கள். பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் நிச்சயம் ஒரு கோடியை தாண்டும். இது நிச்சயம் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும், விவசாயம் மேம்படவேண்டும், வேலைவாய்ப்பை எடுத்துக்கொண்டால், அரசாங்கம் ஆண்டுதோறும் ஒருசில ஆயிரம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரமுடியும். தனியார் தொழில்கள், தனியார் முதலீடுகள் ஏராளமாக பெருகினால்தான், வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும்.

தமிழ்நாட்டின் நிலைமை அப்படியில்லை. இந்தியாவில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களும் சரி, வெளிநாட்டு நிறுவனங்களும் சரி, முன்பெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க போட்டிப்போட்டுக்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ‘ஹூண்டாய்’ கார் கம்பெனியின் துணை நிறுவனமான ‘கியா’ என்ற தென்கொரிய நாட்டு நிறுவனம் சென்னைக்கு மிக அருகில் ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா என்ற ஊரில் ஒரு புதிய கார் தொழிற்சாலையை நிறுவப்போகிறது. ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட இருக்கும் இந்த நிறுவனம், இந்தியாவிலேயே மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் முதலில் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய நிறுவனத்தின் மூலம் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த தொழிற்சாலையை அங்கு தொடங்குவதன்மூலம், மேலும் பல துணை நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் அதன் அருகே தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ‘இசுசூ’ மோட்டார் நிறுவனம் சென்னையை விட்டுவிட்டு, சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. ‘ஹீரோ’ மோட்டார் நிறுவனம் தனது இருசக்கர வாகன தொழிற்சாலையை அங்கு தொடங்க இருக்கிறது. இப்படி பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு, ஆந்திராவுக்கு செல்கிறது என்றால் அதன்காரணம் என்ன? என்பதை தமிழக அரசு ஆராய்ந்து, நம்மிடமுள்ள குறைகளை உடனடியாக நிவர்த்திசெய்து, தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொழில் வளர்ச்சியில்தான் பின்தங்கி இருக்கிறோம் என்றால், ‘இந்துதாஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகை குழுமத்தை சேர்ந்த ‘மிண்ட்’ பத்திரிகை நடத்திய ‘கிராமப்புற இடர்பாடு’ என்ற ஆய்வில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விவசாயம் மிகப்பெரிய இடர்பாடுகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. விவசாய வளர்ச்சியில் பின்தங்கியிருக்கிறோம். கடுமையான வறட்சியும் மற்றவர்களைவிட அதிகம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயம் பெரிய இடர்பாடுகளை சந்திக்க இருக்கிறது என்று அந்த ஆய்வில் கூறப்படுகிறது. ஆக, தமிழக அரசு உடனடியாக விவசாயத்தையும், தொழிலையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதையே தனது முதல் லட்சியமாகக்கொண்டு, அந்தபாதையில் வேகமாக செல்வதற்கு தடையாக இருக்கும் அத்தனை முட்டுக்கட்டைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, தன் லட்சிய பயணத்தை தொடங்கவேண்டும்.
மேம்பாலம் இருந்தும் வடபழனியில் நெரிசல் குறையவில்லைமுருகா!ஆக்கிரமிப்பை அகற்றாமல் போக்குவரத்தை மாற்றுவதா?

பதிவு செய்த நாள்
மே 02,2017 23:15



சென்னை:கோடம்பாக்கம் - வடபழனி ஆற்காடு சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்பட்ட நிலையிலும், எந்நேரமும் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகருகின்றன. ஆற்காடு சாலையை கடக்க, அரை மணி நேரத்திற்கு மேல் வாகனங்கள் காத்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.வடபழனி, 100 அடி சாலை மற்றும் வடபழனி ஆற்காடு சாலை வழியாக தினமும், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால், இரண்டு சாலைகள் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதையடுத்து, 2010ல், வடபழனி, 100 அடி சாலையில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க, இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இருவழிப் பாதைமுதல் மேம்பாலத்தில் வாகனங்களும், 2வது மேம்பாலத்தில், மெட்ரோ ரயிலும் செல்ல திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. வாகனங்கள் செல்வதற்கான மேம்பாலம், பூமியில் இருந்து, 7 மீ., உயரத்தில், 520 மீ., நீளம், 18.6 மீ., அகலத்தில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலம், 69 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

பணிகள் முடிந்த நிலையில், 2016 நவம்பரில், மேம்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இதனால், 100 அடி சாலை மற்றும் வடபழனி ஆற்காடு சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது.கோடம்பாக்கத்தில் இருந்து, வடபழனி நோக்கி வரும் வாகனங்கள், வடபழனி துரைசாமி சாலை, அசோக் நகர், 2 அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலைக்கு சென்றன. அங்கிருந்து, கே.கே.நகர், போரூர் செல்லும் வாகனங்கள், பி.டி.ராஜன் சாலை வழியாகவும், வடபழனி செல்லும் வாகனங்கள், 100 அடி சாலை வழியாகவும் சென்றன. இதனால், 100 அடி சாலை, பி.டி.ராஜன் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது.

இதையடுத்து, ஒருவழிப் பாதையாக இருந்த கோடம்பாக்கம் -- வடபழனி ஆற்காடு சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
ஆமை வேகம்

அதில், இருசக்கர வாகனம், கார் மற்றும் ஆட்டோக்கள் போன்ற, இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கனரக வாகனங்கள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட துரைசாமி சாலை வழியாக செல்கின்றன.ஒருவழிப் பாதையாக இருந்த வடபழனி ஆற்காடு சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்பட்டதால், போரூரில் இருந்து வரும் வாகனங்கள், வடபழனி, ஏ.வி.எம்., ஸ்டுடியோ அருகில் இருந்து, வடபழனி காவல் நிலையம் வரை, வாகனங்கள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய துாரத்திற்கு, அரை மணி நேரம் ஆகிறது. 'பீக் அவர்' போல் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகருகின்றன. இதனால், அலுவலகம் செல்வோர், குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.

ஆக்கிரமிப்பை அகற்றும் எண்ணமில்லை

வடபழனியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம், கோவில் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் தான். அவற்றை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகளிடம், பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், போக்குவரத்தை மாற்ற, போலீசார் முடிவெடுத்தனர். இதையடுத்து, கோயம்பேட்டில் இருந்து அசோக் பில்லர் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும், 100 அடி சாலை, வடபழனி மேம்பாலத்தின் மேலே சென்று, தெற்கு சிவன் கோவில் தெரு அருகில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு முன் நின்று செல்லும்.அசோக் பில்லரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும், தெற்கு சிவன் கோவில் தெரு முன் நின்றுவிட்டு, மேம்பாலம் வழியாக கோயம்பேடுக்கு செல்லும்.இதனால், கோயம்பேடு செல்லும் பயணிகள், தெற்கு சிவன் கோவில் தெரு முன் ஏற்படுத்தப்பட்டுள்ள, புதிய பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை, இன்றிலிருந்து, தற்காலிகமாக அமலுக்கு வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றாமல், போக்குவரத்தை மாற்றுவது சரியான நடவடிக்கையா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடபழனி முருகன் கோவில் எதிரே, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது, பேருந்துகள் மேம்பாலத்தை பயன்படுத்த செய்யும் வகையில், பேருந்து நிறுத்தம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என, எதிர்பார்க்கிறோம்.வடபழனி போக்குவரத்து ஆய்வாளர்
தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்! : மருத்துவ படிப்பு விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி

பதிவு செய்த நாள் 02 மே
2017

23:39 சென்னை: முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு, தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளிடம் இருந்து, 50 சதவீத இடங்களை பெற்று, 'நீட்' தேர்வு அடிப்படையில் நிரப்பும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பாட்டை கண்டித்த உயர் நீதிமன்றம், தலா, ஒரு கோடி ரூபாய் வழக்கு செலவு தொகையும் விதித்தது. முதுகலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த டாக்டர்கள், 20 பேர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியுள்ளதாவது:

தனியார் மருத்துவக் கல்லுாரிகளிடம் இருந்து, முதுகலை மற்றும் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், 50 சதவீத இடங்களை அரசு பெற்று, நீட் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களை சேர்க்க வேண்டும்; அதுவரை, 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் நிரப்ப, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டது.

ரத்தாகவில்லை : மனுக்களை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள், ஆர்.என்.அமர்நாத், ஜி.சங்கரன் ஆஜராகினர். பின், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கும் இடையேயான, 50 : 50 இட பங்கீடானது, முதுகலை மருத்துவக் கல்விக்கான விதிமுறைகளின்படி உள்ளது. இந்த முறையை, எந்த நீதிமன்றமும் ரத்து செய்யவில்லை. இந்த இட பங்கீடு தொடர்பான விதிமுறைகளை எதிர்த்து, இதுவரை வழக்கு தொடரப்படவில்லை. எனவே, மாநில அரசுக்கு, 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் அளிக்க வேண்டும்.

கவனிக்கவில்லை : நிகர்நிலை பல்கலைகள், தங்களுக்கென தனிப்பட்ட அந்தஸ்து கோர முடியாது; அவைகளுக்கும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் பொருந்தும். அதில், இடங்கள் பகிர்வு தொடர்பான விதிமுறைகளும் அடங்கும். முதுகலை மருத்துவக் கல்வி விதிமுறைகள் வகுக்கப்பட்டும், அவை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை, இந்திய மருத்துவ கவுன்சில் கவனிக்க தவறிவிட்டது. தனியார் மருத்துவக் கல்லுாரிகள் ஆதாயம் பெற, அவைகளிடம் இருந்து, 50 சதவீத இடங்களை பெற, மாநில அரசு தவறிவிட்டது.

மாநில அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கூட்டு சேர்ந்து, இடங்கள் பகிர்வு முறையை, தனியார் கல்லுாரிகள் பின்பற்றவில்லை. 50 சதவீத இடங்களை, அரசுக்கு அளிக்காததன் மூலம், தனியார் கல்லுாரிகள் ஆதாயம் அடைந்திருக்க வேண்டும். மாநில ஒதுக்கீடான, 50 சதவீத இடங்களை சேர்க்காமல், பொது கவுன்சிலிங்குக்காக, நிகர்நிலை பல்கலைகளுக்கு என, தனி விளக்க குறிப்பேட்டை, மாநில அரசு வெளியிட்டது, மோசடியான செயல் மட்டுமல்ல, சட்ட விரோதமானது; பொதுநலனுக்கு எதிரானது. எனவே, கீழ்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

l சிறுபான்மை கல்லுாரிகள் தவிர்த்து, தனியார் கல்லுாரிகளிடம் இருந்து, முதுகலை மருத்துவப் படிப்புக்கான ஒவ்வொரு பிரிவிலும், 50 சதவீத இடங்களை, தமிழக அரசு பெற வேண்டும். 'நீட்' தேர்வின் தகுதி பட்டியல் அடிப்படையில், மத்திய கவுன்சிலிங் மூலம், அந்த இடங்களை நிரப்ப வேண்டும்

l நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, 50 சதவீத இடங்களை, அரசின் அறிவிப்பாணை மூலம் கொண்டு வர வேண்டும்

l சிறுபான்மை கல்லுாரிகள், தாங்களாக முன்வராமல், அரசுக்கு, 50 சதவீத இடங்களை வழங்க தேவையில்லை

l சிறுபான்மை நிறுவனங்கள் தவிர்த்து, தனியார் கல்லுாரிகளில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான, 15 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பது செல்லாது; அது, ரத்து செய்யப்படுகிறது. இந்த இடங்களை, மாநில அரசு நடத்தும் மத்திய கவுன்சிலிங்கில் சேர்க்க வேண்டும்
l நிகர்நிலை பல்கலைகளில், முதுகலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளுக்கான கவுன்சிலிங்குக்கு, 2017 - 18ம் ஆண்டுக்கான, மாநில அரசின் விளக்க குறிப்பேடு, ரத்து செய்யப்படுகிறது. இதில், மாநில அரசுக்கான, 50 சதவீத இடங்கள் இடம் பெறாததால், ரத்து செய்யப்படுகிறது.

கவுன்சிலிங் நடத்துவது மாநில அரசு என்பதால், இணையதளத்தில் கீழ்கண்ட விபரங்களை வெளியிட வேண்டும்.

l ஒவ்வொரு கல்லுாரி, பல்கலையில் உள்ள இடங்கள், பிரிவு வாரியாக இடம் பெற வேண்டும்

l நிகர்நிலை பல்கலை உள்ளிட்ட, தனியார் கல்லுாரிகளின் கட்டண விபரங்கள்
l கவுன்சிலிங் போது வராத, மாணவர்களின் பட்டியல்

l அரசு, தனியார், நிகர்நிலை பல்கலையில் சேராத மாணவர்களின் பட்டியல்
l வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக, ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் குறித்த விபரங்கள்

l அடுத்த ஆண்டு முதல், எடுக்கப்பட்ட முடிவுகள், நடைமுறைகள் அனைத்தையும், முன்கூட்டியே மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கீழடிக்கு ரூ.1 கோடி! : நீதிபதி கிருபாகரன் உத்தரவில் மேலும் கூறியதாவது: மற்ற மாநிலங்கள் எல்லாம், 50 சதவீத இடங்களை பெற்றிருக்கும் போது, தமிழக அரசு வேண்டுமென்றே, 50 சதவீத இடங்களை கேட்டு பெறவில்லை; இது, கண்டிக்கத்தக்கது. தகுதி வாய்ந்த மாணவர்கள், இதனால்
பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே, தமிழக அரசுக்கு, வழக்கு செலவு தொகையாக, ஒரு கோடி ரூபாய் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் அகழாய்வுக்கு பயன்படுத்த வேண்டும்.பொது நலன் பாதிக்கும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடு இருந்ததால், அதற்கும், ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மையத்துக்கு வழங்க வேண்டும்.

சட்ட விதிகள் மீறப்படுவதை தடுத்து, பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளுக்காக, இந்த வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. அதிகாரிகளின் அஜாக்கிரதையால், தகுதி படைத்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்; அவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
விபத்தில் சிக்கிய சரக்கு வாகனம்: திராட்சைகளை அள்ளிய மக்கள்

பதிவு செய்த நாள் 02 மே
2017
23:54



ஓசூர்: சூளகிரி அருகே, விபத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தில் இருந்து, கீழே கொட்டிய பச்சை திராட்சைகளை, பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாமணி, 45, டிரைவர். இவர், நேற்று மதியம், ஓசூரில் இருந்து, பச்சை திராட்சை லோடு ஏற்றி, கிருஷ்ணகிரிக்கு, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில் கிளம்பினார்; 35 வயது கிளீனர் உடன் வந்தார்.
சூளகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில், மதியம், 2:30 மணிக்கு, பின்னால் வந்த ஈச்சர் லாரி, டாடா ஏஸ் மீது திடீரென மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் உருண்டுவிபத்துக்குள்ளானது. டாடா ஏஸ் வாகனத்தில் இருந்த பச்சை திராட்சைகள், சாலையோரம் சிதறின. இருசக்கர வாகனம் மற்றும் லாரிகளில் சென்றவர்கள் மட்டு மின்றி, நடந்து சென்ற பலரும், சாலையோரம் கொட்டி கிடந்த பச்சை திராட்சைகளை அள்ளிச் சென்றனர்.

விபத்தில் காயமடைந்த டிரைவர் ராஜாமணி, கிளீனர், சூளகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிளஸ் 2 விடைத்தாளில் 'டவுட்' : 'டம்மி' தேர்வு நடத்தி விசாரணை

பதிவு செய்த நாள் 03 மே
2017

01:09 பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கையெழுத்து மாறுபட்ட மாணவர்களிடம், அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 'டம்மி' தேர்வு நடத்தினர். முந்தைய ஆண்டுகளில், பிளஸ் 2 தேர்வில், பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இரு ஆண்டுகளுக்கு முன், தேர்வு நாளில், 'வாட்ஸ் ஆப்'பில், கணித வினாத்தாள் வெளியானது. ௨௦௧௬ல், தனியார் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு, ஆசிரியர்களே தேர்வை எழுதி கொடுத்தது தெரிய வந்தது.

இதனால், இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வை, எந்த முறைகேடுக்கும் இடமின்றி நடத்தி, முடிவை வெளியிட, அரசு உத்தரவிட்டு உள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில், விடைத்தாள் தெரிந்தால், அதை ஆய்வுக்கு அனுப்புமாறு, ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, 500க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் தேர்வுத் துறைக்கு வந்தன. அவற்றை, தேர்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர்களையும், பெற்றோரையும் வரவழைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில், கையெழுத்து மாறுபாடு, பேனாவை மாற்றி எழுதியதால் எழுத்துக்களின் நிறம் மாற்றம், எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசம், விடைத்தாளில் அலங்கரிப்பு, ஒரே கேள்வியை இரண்டு முறை எழுதுவது போன்றவை குறித்து விசாரிக்கப்பட்டு உள்ளன. சில கேள்விகளுக்கு பதில் எழுதுமாறு, மாணவர்களுக்கு தனி அறையில், 'டம்மி' தேர்வு நடத்தப்பட்டு உள்ளது.முடிவில், 'தேர்வை நான் தான் எழுதினேன்; எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கவில்லை' என, உறுதிமொழி கடிதம் பெறப்பட்டு உள்ளது. வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள, இந்த உறுதிமொழி கடிதம் பெறப்படுவதாக, அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -
டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பதிவு செய்த நாள் 02 மே
2017

00:32 சென்னை, இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால், டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.

முதுகலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, அரசு டாக்டர்கள், நடத்தி வரும் போராட்டம், நேற்று, 13வது நாளாக நீடித்தது. இதனால், நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். 'டாக்டர்களின் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்' என, மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வில், இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. 'நீதிமன்ற உத்தரவை பொறுத்தே போராட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என, முடிவு செய்வோம்' என, டாக்டர்கள்
கூறுகின்றனர்.
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்' : மே 7 ல் திருக்கல்யாண அறுசுவை விருந்து

பதிவு செய்த நாள் 03 மே
2017

00:42 மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் முக்கிய நிகழ்வான, மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், மே 7 ல் காலை 8:35 மணிக்கு மேல் காலை 8:59 மணிக்குள்ளும், திருக்கல்யாண அறுசுவை விருந்து சேதுபதி மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் பி.என்.விவேகானந்தன் கூறியதாவது:மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 17 ஆண்டுகளாக டிரஸ்ட் சார்பில் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டு வருகிறது. பத்தாண்டுகள் மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலும், ஏழு ஆண்டுகளாக வடக்கு வெளி வீதி சேதுபதி மேல்நிலைப்பள்ளியிலும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருந்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டப்படி, அதற்குரிய கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று நடத்தப்படுகிறது.இந்தாண்டு, மே 7 ல் காலை 8:00 மணி முதல் மாலை வரை ஒரு லட்சம் பக்தர்களுக்கு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண அறுசுவை விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்கண்டு சாதம்,

சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வடை, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், உருளை கிழங்கு கறி, பச்சடி, ஊறுகாய், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவை பாக்குத்தட்டில் வைத்து வழங்கப்படும். பரவை, மாட்டுத்தாவணி காய்கறி வியாபாரிகள் சார்பில் விருந்துக்கு தேவையான காய்கறிகள், டிரஸ்ட் உறுப்பினர்கள், பக்தர்கள் சார்பில் அரிசி மூடைகள், கீழமாசி வீதி வியாபாரிகள், பக்தர்கள் சார்பில் மளிகை, எண்ணெய், நெய் வழங்கவுள்ளனர்.

சேவையில் பங்கேற்கலாம் : விருந்து உபசரிப்பில் பங்கேற்க விரும்புவோர் மே 5 காலை 10:00 மணி முதல் மே 6 மாலை வரை சேதுபதி பள்ளியில் பொருட்களை கொடுத்து ரசீது பெற்று கொள்ளலாம். மே 6 மதியம் 2:00 மணி முதல் காய்கறிகள் வெட்டும் பணி துவங்குகிறது.
இச்சேவையில் இணைய விரும்புவோர் சேதுபதி பள்ளிக்கு காய்கறிகள் வெட்டும் அரிவாள்மனை அல்லது கத்தியுடன் நேரில் வந்து சேவையாற்றலாம். மே 6 மாலையில் மாப்பிள்ளை அழைப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்புக்கு 0452- 234 5601.
தென்காசியில் கனமழை

பதிவு செய்த நாள் 02 மே
2017
23:44

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி சுற்று வட்டாரத்தில், நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களில், நேற்று வெயிலின் அளவு குறைந்திருந்தது. மாலையில், நெல்லையில் லேசான மழை பெய்தது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில், நேற்று மாலை, 5:30 மணிக்கு துவங்கி, 40 நிமிடங்களுக்கும் மேலாக கனமழை பெய்தது.
விஜய் மல்லையாவுக்கு வலை லண்டன் விரைந்த அதிகாரிகள்

பதிவு செய்த நாள் 02 மே
2017
22:54

புதுடில்லி:பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் லண்டனுக்கு விரைந்து உள்ளனர்.

வங்கிகளில் வாங்கிய, 9,000 கோடி ரூபாய் கடனை திருப்ப செலுத்தாதது தொடர்பாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையாவை, நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, மல்லையா, சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளான். நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, வரும், 17ல் விசாரணைக்கு வருகிறது. பிரிட்டன் சட்டங்களின்படி, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால், உடனடியாக, மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியம் இல்லை.

லண்டனில் நடக்கும் இந்த வழக்குகளில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை, வாதியாக இல்லை. அதே நேரத்தில், பிரிட்டன் அரசுக்கு, இந்த வழக்கின் முக்கியத்துவம் குறித்து விளக்குவதுடன், தேவையான ஆதாரங்களையும் அளிக்க முடியும்.

அதன்படி, மல்லையா மீதான வழக்கின் தீவிரம் குறித்தும், அவனை உடனே இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் குறித்தும் பிரிட்டன் அதிகாரிகளிடம் விளக்குவதற்காக, நான்கு பேர் அடங்கிய குழு, லண்டன் சென்றுள்ளது.

சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான இந்த, நால்வர் குழுவில், அமலாக்கத் துறை அதிகாரிகள், இருவரும் அடங்குவர். 'மல்லையா மீதான வழக்கில், மத்திய அரசு மிகவும் தீவிரமாக இருப்பதை, பிரிட்டனுக்கு உணர்த்துவதற்கு இந்தப் பயணம் உதவும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு பிடிவாரண்ட் நீதிபதி கர்ணன் உத்தரவு

பதிவு செய்த நாள்
மே 02,2017 21:10

கோல்கட்டா: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

நேரில் ஆஜராகததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 8 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி உள்ளார்.

'நீதிபதி கர்ணன், எவ்வித நிர்வாக மற்றும் நீதித் துறை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நீக்க வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது.இதற்கிடையே, இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:

நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, வரும், 4ல், கோல்கட்டா அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் குழு பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் நீதிபதி கர்ணன் பங்கேற்பதை, மாநில போலீஸ் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். அதற்காக போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, கோல்கட்டாவில் நிருபர்களிடம், நீதிபதி கர்ணன் கூறியதாவது: என்னை கட்டாயப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்றால், போலீஸ், டி.ஜி.பி.,யை சஸ்பெண்ட் செய்வேன்.

அதற்கு முன்னதாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட, ஏழு நீதிபதிகளுக்கு, டில்லியில் உள்ள மருத்துவமனையில் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை, டில்லி போலீஸ் டி.ஜி.பி., செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 8 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கர்ணன் கூறி உள்ளார்.

Tuesday, May 2, 2017

உலக பாஸ்வேர்ட் தினம் மே 4: உங்களுடைய கடவுச்சொல் பத்திரமா?

எஸ்.எஸ்.லெனின்

இணைய வணிகம், ஃபேஸ்புக், இமெயில் என நமது அன்றாட பயன்பாட்டில் உள்ளவற்றின் கடவுச்சொற்களை (பாஸ்வேர்ட்) கடைசியாக எப்போது மாற்றினோம்?
கடவுச்சொல்லின் பயன்பாட்டைப் பரிசீலித்துத் திடமானதாக அவற்றை மாற்ற ‘உலகப் பாஸ்வேர்டு தினம்’ வாயிலாக அறைகூவல் விடுக்கிறார்கள் இணைய முன்னோடிகள். காரணம் விளையாட்டான அடையாளத் திருட்டில் தொடங்கி விவகாரமான அந்தரங்கப் பதிவுகள் கசிவதுரை அண்மைக்காலமாகக் கேள்விப்படும் செய்திகள் பலவற்றின் பின்னணியில் கடவுச்சொல் பராமரிப்பின் அலட்சியமே உறைந்திருக்கிறது.
நல்ல கடவுச்சொல் என்பது
இன்றைய இணைய உலகத்தின் உச்சபட்ச கறுப்பு வணிகத்தில் ஒன்று பயன்பாட்டாளர்களிடமிருந்து கடவுச்சொல்லைத் திருடுவது. தமது அடையாளங்களை மறைத்துக்கொண்டு பிறரது அடையாளங்களைத் திருடி பணம் பார்க்க முடியும் என்பதால் இணைய உலகில் பிஷ்ஷிங் (Phishing), விஷ்ஷிங் (Vhishing), ஹேக்கிங் (Hacking) என விதவிதமான திருடர்கள் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், நமது தகவல்கள், ஆவணங்கள், பதிவுகள், சமூகத் தொடர்புக்கான சாவியாக இருக்கும் நமது பாஸ்வேர்டுகளை பாதுகாப்பது எப்படி?
முதன்முதலில் கடவுச்சொல்லைப் பதிவிட வேண்டும் என்கிற நிலை வந்தபோது ‘Password’, ‘123456’ என்பவையாகவே பெரும்பாலோர் பதிவிட்டனர். இன்றும்கூடச் செல்லப் பிராணி, பிடித்த பிரபலங்களின் பெயர்களைக் கடவுச்சொல்லாகக் குறிப்பிடுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பகிர்வுகள் வாயிலாக உலகில் எவர் வேண்டுமானாலும் இந்தத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அவற்றைத் தவிர்ப்பதே நல்லது. மாறாக, எவராலும் கண்டுபிடிக்க முடியாத கடினமான கடவுச்சொல்லை உருவாக்குகிறேன் பேர்வழி எனப் பிற்பாடு அவற்றை நினைவுகூர்வதில் தடுமாறித் தவித்தவர்கள் அதிகம்.
தனக்குச் சுலபமானதாக, பிறர் ஊகிக்கக் கடினமானதாக இருப்பதே நல்ல கடவுச்சொல்லுக்கு இலக்கணம். இந்தப் பாஸ்வேர்டையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவது முக்கியம். குறிப்பாகத் தனிப்பட்ட உபயோகத்திற்கான கணினி அல்லாது பொது இடங்களில் மற்றும் அலுவலகம் மற்றும் நண்பர்களின் கணினிகளில் பாஸ்வேர்டை உள்ளிடுபவர்கள், முடிந்தவரை உடனுக்குடன் அவற்றை மாற்றி விடுவது நல்லது.
மாற்றம் தேவை
முதலாவதாக, இமெயில், ஃபேஸ்புக், வங்கி உபயோகம் என அனைத்துக்கும் ஒரே கடவுச்சொல்லை உபயோகிக்கக் கூடாது. அதிகப்படியான பாஸ்வேர்டுகளை உபயோகிப்பவர்கள் குழப்பங்களைத் தவிர்க்க இணையத்தில் கிடைக்கும் பாஸ்வேர்ட் மேனேஜர்கள் உதவியை நாடலாம்.
பல அடுக்கு அரண்கள்
பாதுகாப்புக்கு எனப் பாஸ்வேர்டினை மட்டும் நம்பியிருக்காது, உடன் கிடைக்கும் பல அடுக்கு அரண்கள் உபயோகத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்குச் செட்டிங்க்ஸ் உதவியுடன் நமது உள் நுழைகை, கடைசியாகப் பயன்படுத்தியது, பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட ஒவ்வொரு சிறு நகர்வையும் நமக்குத் தெரிவிக்கச் செய்யுமாறு கட்டமைத்துக் கொள்ளலாம். வங்கிப் பரிவர்த்தனைக்கான ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ உபயோகத்தை இமெயில் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடுகளுக்கும் உதவுமாறு செய்யலாம்.
இணையத் திருட்டைத் தடுக்கப் படிக்கலாம்!
பல்வேறு இணையக் கணக்குகளை உடைத்து அவற்றின் கடவுச்சொல்லைக் கைப்பற்றும் ‘கிரிமினல் ஹேக்கர்ஸ்’ எல்லா நாடுகளிலும் உண்டு. அவர்கள் கையாளும் அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இணையப் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள் ‘எத்திக்கல் ஹேக்கர்ஸ்’. பிரபல நிறுவனங்கள் பலவும் தங்களது இணையப் பாதுகாப்பின் ஓட்டைகளை அறிந்துகொள்ள எத்திக்கல் ஹேக்கர்ஸை பணிக்கு அமர்த்துகின்றன. பகுதி நேரமாகத் தங்களது திறமையைக் காட்டுபவர்களுக்கு ஆச்சரியமூட்டும் சன்மானங்களை வழங்குகின்றன. இணையப்பெருவெளியின் ஜேம்ஸ்பாண்டுகளாக வலம் வரும் பெருமையும் சேர்ந்துகொள்வதால், இளம்வயதினர் மத்தியில் எத்திக்கல் ஹேக்கர்ஸ் தொடர்பாகப் படிக்க ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் `தகவல் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்’ என்ற பெயரில் எத்திக்கல் ஹேக்கர்ஸ் பணியமர்த்தப்படுகின்றனர். அரசின் பாதுகாப்புத்துறை, தடய அறிவியல் துறை ஆகியவற்றுடன் வங்கி மற்றும் காப்பீட்டு துறைகள், ஐ.டி. நிறுவனங்கள் ஆகியவை இந்த வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகள் பலவற்றிலும் எத்திக்கல் ஹேக்கிங் தனித் தாளாகவே பயிற்றுவிக்கப்படுகிறது.
எங்கே படிக்கலாம்?
பொறியியல் பட்டம் அல்லது எம்.எஸ்சி. கணிதம் அல்லது எம்.சி.ஏ. முடித்தவர்கள், எம்.இ., ஐ.டி. படிப்பில் எத்திக்கல் ஹேக்கிங் பிரிவில் சேர்ந்து படிக்கலாம். ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெற்ற பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இவை பயிற்றுவிக்கப்படுகின்றன. அலகாபாத் ஐ.ஐ.டி., காஜியாபாத் ஐ.எம்.டி., மும்பை மற்றும் சண்டிகரில் இயங்கும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, புது டெல்லியில் செயல்படும் எத்திக்கல் ஹேக்கிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை எத்திக்கல் ஹேக்கிங்குக்கு எனத் தனியாகப் பல்வேறு வகை படிப்புகளை வழங்குகின்றன.
இவை தவிர்த்து எத்திக்கல் ஹேக்கிங்கில் பட்டயம், சான்றிதழ் படிப்புகளையும் ஏராளமான நிறுவனங்கள் வழங்குகின்றன. கொல்கத்தாவில் செயல்படும் `இந்தியன் ஸ்கூல் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங்’ பல்வேறு நடைமுறை பயிற்சி வகுப்புகளுடன் கூடிய படிப்புகளை வழங்குகிறது. இதுபோன்ற நிறுவனங்கள் ஆன்லைனிலும் பயிற்சி வகுப்புகளை வழங்குகின்றன. கோடைகால பயிற்சி வகுப்புகளும் உண்டு.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.isoeh.com/index.html
சட்ட நுணுக்கம்
இணையப் பயன்பாடுகள் அதிகரித்து வரும் இந்தியாவில், அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இதர நாடுகளைவிட மிகவும் குறைவு. இதனால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை இங்கு மிகவும் அதிகம். நம் நாட்டில் அடையாளத் திருட்டில் ஈடுபடுவோர் மீது 3 ஆண்டு சிறை, 1 லட்சம் ரூபாய் அபராதம் எனத் தண்டனை கிடைக்கத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66சி மற்றும் 66டி ஆகியவை வழி செய்கின்றன. ஆனால் அடையாளத் திருட்டில் ஈடுபடுவோர் நவீனத் தொழில்நுட்பம் உதவியுடன் தங்களது அடையாளங்களை மறைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாலும், நிழலுலகத் தொடர்பின் மூலம் வெளிநாடுகளில் இருந்தபடி குற்றங்களை நிகழ்த்துவதாலும் எளிதில் சிக்குவதில்லை. எனவே நமது பாதுகாப்பை நாமாக உறுதி செய்துகொள்வதே உசிதமானது.
அடையாளத் திருட்டைத் தவிர்க்க
1. உங்களது கணினி, ஸ்மார்ட் போன்களில் உரிய ஆண்ட்டி வைரஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை நிறுவுவது.
2. சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது. சாட் மற்றும் நட்பு வட்டாரத்தினரின் உரையாடல்களில் எச்சரிக்கை பேணுவது.
3. வலை வீசும் குப்பை மெயில்களை அவ்வப்போது அடையாளங்கண்டு அழிப்பது.
4. சந்தேகத்துக்கு இடமான இணையத் தளங்கள், மெயில்கள், வங்கி பெயரிலான அழைப்புகளைத் தவிர்ப்பது.
5. பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை இணைய இணைப்புகள் வைரஸ் மற்றும் மனித ஊடுருவலுக்கு வாய்ப்பளிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம்.
மாற்றத்துக்கான நாள்
உலகமெங்கும் பாஸ்வேர்டு உபயோகம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன், உலகப் பாஸ்வேர்டு தினம் மே மாதத்தின் முதல் வியாழன் (நடப்பாண்டு மே-4) அன்று கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அது குறித்த விழிப்புணர்வினைப் பரப்புவதோடு, இணையப் பயனர்கள் நேரம் ஒதுக்கித் தமது பாஸ்வேர்டுகளை புதிதாகச் சீரமைத்துக் கொள்கிறார்கள்.

சந்தேகம் சரியா 33: வலிப்பு வந்தவருக்குச் சாவியைக் கொடுப்பது சரியா?

டாக்டர் கு. கணேசன்

வலிப்பு ஏற்பட்டவருக்குக் கையில் சாவி போன்ற ஏதாவது ஓர் இரும்புப் பொருளைக் கொடுத்தால் உடனே வலிப்பு நின்றுவிடும் என்று கூறுகிறார்கள். இப்படிச் சொல்வது சரியா?
சரியில்லை.

சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு வந்தவர்களுக்குக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று சொல்வதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை.
இது ஒரு மூட நம்பிக்கை. திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிப்பதால், இந்த நம்பிக்கை மக்களின் பொதுப்புத்தியில் பதிந்துவிட்டது. பொதுவாக, வலிப்பு சில நிமிடங்களுக்குள் தானாகவே நின்றுவிடும். அருகில் உள்ளவர்கள் இரும்புப் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கும் சில நிமிடங்கள் ஆகுமல்லவா?
இயற்கையாக உடலில் வலிப்பு நிற்பதற்கும் இவர்கள் இரும்புப் பொருளை வலிப்பு வந்தவருக்குக் கொடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான். மற்றபடி, வலிப்பு நிற்பதற்கும் கையில் சாவியைக் கொடுப்பதற்கும் தொடர்பில்லை. இதைப் புரிந்துகொள்ள  வேண்டுமானால், வலிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வலிப்பு ஏற்படும் விதம்
மூளை, நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் 'வலிப்பு' என்கிறோம்.

பூமியின் உள்அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப் போல, மூளையில் உண்டாகிற மின்அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.

என்ன காரணம்?
தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.

பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக் குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக ‘பொய் வலிப்பு’ (Pseudo seizure) வருவதும் உண்டு.

குழந்தைகளுக்கு வலிப்பு!
குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வரும் சாத்தியம் அதிகம். சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

என்ன செய்ய வேண்டும்?
ஒருவருக்கு வலிப்பு வந்துவிட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் சாவியைத் தேடி நேரத்தை வீணாக்குவதைவிடக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றலாம்:
# அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள்.
# சட்டை பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து 'டை' போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.
# மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.
# அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.
# மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள்.
# உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.
# ஒருவருக்கு வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம்.

என்ன செய்யக்கூடாது?
# அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.
# வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
# வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக் கூடாது.
# முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்டு (இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம்) தண்ணீரைப் பருகச் செய்யலாம்.
# மூக்கில் வெங்காயச் சாற்றை ஊத்துவதும் கூடாது.
அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது. 25 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும். 
 
சென்னை,

தமிழகத்தில் தற்போது வெயில் கடுமையாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் தமிழகத்தில் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. கோடைமழை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் ‘கத்திரி வெயில்’ வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 28-ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிகிறது. இந்த 25 நாட்களும் வெயில் வாட்டி வதைக்கும். அனல் காற்று வீசும்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

அனல்காற்று

அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது. அக்னி நட்சத்திர நாட்களில் அனல் காற்று அதிகமாக வீசும். மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து அனல்காற்று வீசத்தொடங்கும். இப்போது உள்ள நிலவரப்படி, கடல் பகுதி, நிலப்பகுதிகளில் இருந்து காற்று அதிக அளவில் வீசுகிறது. இன்னும் 2 நாட்களில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

நெல்லை மாவட்டம் செங்கோட்டை 2 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் கேத்தி, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்து உள்ளது.


 டி.டி.வி.தினகரன் திகார் சிறையில் அடைப்பு 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

மே 02, 05:45 AM   dailythanthi

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் போலீஸ் விசாரணை முடிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டி.டி.வி.தினகரனை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தினகரன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

விசாரணை

அவருடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கோர்ட்டு அனுமதியுடன் அவர்கள் இருவரையும் டெல்லி போலீசார் சென்னை அழைத்து வந்து 3 நாட்கள் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, இந்த வழக்கில் முதலில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் பேச தினகரன் பயன் படுத்திய செல்போனை அவர்கள் கைப்பற்றியதாகவும், சென்னையில் உள்ள 5 வங்கி கணக்குகள் மூலம் ஹவாலா தரகர்களுக்கு பணம் அனுப்பப்பட்டதை கண்டுபிடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.50 லட்சம் பறிமுதல்

3 நாட்கள் விசாரணைக்கு பின் தினகரனையும், மல்லிகார்ஜூனாவையும் வெள்ளிக் கிழமை இரவு மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்குள்ள குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் அவரிடமும், இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி உள்ள ஹவாலா தரகர் நரேஷ் மற்றும் மற்றொரு ஹவாலா தரகரான புல்ஹித், சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த வக்கீல் கோபிநாத் ஆகியோரிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையை தொடர்ந்து புல்ஹித்திடம் இருந்து குற்றப்பிரிவு போலீசார் ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

தினகரன் கோர்ட்டில் ஆஜர்

இந்த நிலையில், தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு டெல்லி தனிக்கோர்ட்டு வழங்கிய 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு ஆஜர்படுத்தினார்கள். இதற்காக இருவரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

கோர்ட்டில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் சார்பில், தினகரனிடமும், மல்லிகார்ஜூனாவிடமும் விசாரணை முடிந்துவிட்டதாகவும், இந்த வழக்கில் மேலும் சில சாட்சியங்களை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும், தங்கள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

15-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு

இதைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரையும் வருகிற 15-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.

அப்போது தினகரன் தரப்பில், சிறையில் அவருக்கு மருத்துவ உதவி அளிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறையிடம் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். சிறைத்துறை விதிகளின் அடிப்படையில் தினகரனுக்கு மருத்துவ உதவிகள் அளிக்க சிறைத்துறை முடிவெடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் தினகரன், மல்லிகார்ஜூனா ஆகிய இருவருக்கும் ஒரே அறையை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதற்கும் சிறைத்துறையிடம் விண்ணப்பிக்குமாறு நீதிபதி கூறினார்.

காணொலி காட்சி மூலம் விசாரணை

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தினகரனிடம் கோர்ட்டு விசாரணையை இனி காணொலி காட்சி மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தினகரனிடமும், அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவிடமும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹவாலா தரகர் நரேஷின் ஒரு நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, அவரையும் தனிக்கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். நரேஷையும் 15-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.

திகார் சிறையில் அடைப்பு

இதைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் ஹவாலா தரகர் நரேஷ் ஆகியோரை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்று திகார் சிறை வளாகத்தில் உள்ள 7-ம் எண் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு இன்னும் 3 நாட்களில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாக கோர்ட்டுக்கு வந்திருந்த தினகரன் தரப்பு வக்கீல்கள் கூறினார்கள்.





MCI directs cancellation of 500 admissions in UP, TN med

Tue, 4 Apr 2017-05:45pm , PTI

The Medical Council of India (MCI) has directed some private colleges in Uttar Pradesh and Tamil Nadu to cancel admissions of around 500 students who had allegedly not appeared for NEET exam last year.

According to a senior MCI official, these are suspected to be backdoor admissions allegedly done after receiving capitation fees as these states were among those who had opted for NEET.

Around 17 to 18 private colleges in UP have been issued notices asking them to cancel the admissions of over 400 students, MCI secretary Dr Reena Nayyar said.

Similarly, in the line of fire is a private college in Tamil Nadu which has been issued a discharge notice to cancel the admission of around 36 students as it was allegedly done in violation of norms.

"The monitoring committee of MCI found that these institutes have admitted students who did not appear for the NEET exam despite the states opting for NEET," said Dr Nayyar.

The Centre had last year given state governments the option to either conduct their own exams or opt for NEET to fill undergraduate seats.

The committee, Nayyar said, is keeping an eye on admissions in all the medical colleges across the country and is yet to find out the exact numbers of students who did not appear in the NEET but still got admission.

"Such admissions are illegal as the concerned states had opted for NEET and so they cannot bypass it," she said.

The Dental Council of India (DCI) is also examining the admissions in dental colleges across India.

"We have received complaints about illegal admissions in dental colleges in states like Rajasthan and Madhya Pradesh and we are scrutinizing such admissions which were done ignoring NEET," Dr A K Chandna, a member of DCI, said.

The government, through NEET, is aiming to bring in more transparency and eliminate the practice of capitation fee charged by private colleges.

(This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)

MCI advisory to students

Bengaluru, Apr 14, 2017, DHNS: 1:06 IST 
 
The Medical Council of India has issued an advisory alerting students against believing messages that have been circulated on social media that counselling for NRI and management seats would be conducted by colleges themselves.

A fake document, resembling a notification, is doing rounds on WhatsApp, Facebook and other social media, regarding the filling of post graduate medical and dental seats by colleges themselves. The fake notification is dated April 11, but does not have any signature of authorities.

Students have been advised to only consider the notification that is made available on the official site www.mciindia.org. Minister for Medical Education Dr Sharan Prakash Patil announced in a press conference on Wednesday that postgraduate medical and dental seats, including the NRI and management quota, would be filled by the KEA only.
 AICTE directs students not to spit on campus

The All India Council for Technical Education (AICTE) has asked institutes under it to stop students from spitting on their campuses to ensure that they do not spit in public in the future.

The move is part of the Swachh Bharat (Clean India) campaign rolled out by the Centre on October 2, 2014. “The flagship programme of the Government of India has received enormous support from all technical institutions and is successfully being implemented,” AICTE chairman Anil D Sahasrabudhe noted in his letter to the principals and directors of engineering and other institutions offering technical programmes.

However, the practice of spitting in the open on the roadside “is still prevalent,” he noted. “One has to ensure change of the mindset and take preventive steps to stop this practice,” he said, asking the head of the institutions to take necessary steps in this regard.

The AICTE chief suggested that the heads of the institutions involve volunteers from the National Services Scheme, National Cadet Corps and other groups to start a campaign on their campuses against “the practice of spitting in the open.” “I am looking forward to your cooperation and support in creating mass awareness to stop this practice on the campuses,” he added.

A total of 10,330 technical institutes are functioning under the AICTE with more than 6.99 lakh teachers and 20.39 lakh students.

DH News Service

UGC clarifies doubt, CBSE to hold NET exam in July

  After several aspirants of the National Eligibility Test (NET) were confused about the upcoming July exam, UGC has now cleared the air that the exam would be conducted by the Central Board of Secondary Education (CBSE).

DNA had earlier reported about several NET aspirants being confused about whether or not the exam would take place in the month of July as the notification for the same which comes out by first week of April was still not out.

The CBSE had earlier written to the HRD ministry to relieve the body from additional burden of conducting exams like the NET, which gets close to 5 lakh applications every year.
The exam is a necessary pre-requisite for the appointment of assistant professors and to get the Junior Research Fellowship.

In a recently held event in Delhi, the University Grants Commission (UGC) Chairman V.S. Chauhan said that the commission has recently spoken to the CBSE and the exam would be conducted like every year.

Students said that while the decision comes as a major relief, the CBSE should release a notification in this respect soon.
 Centre revokes UGC directive on making PhD scholars' Aadhaar details public

Prakash Kumar, New Delhi, DH News Service, May 1 2017, 20:17 IST

The Centre has asked the universities not to make public Aadhaar number of PhD scholars, withdrawing the university grants commission's (UGC) instruction which required all of the varsities to upload the data of their students along with their unique identification numbers on their websites since last year.

“It is informed that the Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits and Services) Act, 2016 prohibits publishing and displaying the Aadhaar number publicly. Therefore, you are requested not to publish or display the Aadhaar number of the scholars publicly,” the university grants commission (UGC) has said in a recent directive to the varsities.

A course correction from the UGC comes at a time when the Supreme Court is hearing a petition against mandatory registration of Aadhaar for various welfare schemes. The issue has also been in focus with recent reports about the leakage of Aadhaar data.

Last year in June, the Centre made it mandatory for the students to submit their Aadhaar number for grant of all scholarships including fellowships at the level of higher education.

Following an instruction from the Human Resource Development (HRD) Ministry, the UGC directed the vice chancellors of all universities to collect and send to it Aadhaar number of the students getting scholarship or fellowship under various schemes.

The higher education regulator also directed the vice chancellors to put up “all information” about their students on their respective websites.

Later in September last year, the Commission directed all universities to maintain the list of all the MPhil and PhD students along with their details including name, topic of research, name of supervisor and co-supervisor, date of enrolment among others.

“As per the Clause 5.6 of these Regulations the University shall maintain the list of all the MPhil/PhD registered students including name of the registered candidate, topic of his/her research, name of supervisor/co-supervisor, date of enrolment registration on its website on year-wise basis,” UGC stated in an advisory on September 27, 2016.

It directed the universities to implement this clause “in letter and spirit” in your esteemed universities “immediately.” “The information (about the students) may be made available on the homepage of your University's website with a dedicated link. This data must be updated on university's website on a regular basis and intimated to UGC by e-mail,” the commission added.
 Pondy varsity ordered to award grace marks to 9 MBBS students

The Madras High Court has annulled a Pondicherry University rule doing away with the award of grace marks to the MBBS students and asked the university to give the relief to nine final year students who had failed in a sole practical examination.

A division bench of justices Huluvadi G Ramesh and S Vimala struck down the new rule, which discontinued the practise of awarding the grace marks from May 2016, terming the same as "arbitrary and discriminatory." The bench gave its ruling on an appeal by the students against the February 15 verdict of a single-judge bench, which had turned down their pleas for the grace marks.
The division bench said the decision to "deviate from its earlier practice of granting grace marks up to five is in our view without any basis or reasonableness and therefore discriminatory and arbitrary in nature."

Accordingly, the bench asked the university's controller of examinations to revise examination results of the students after awarding the grace marks.

While rejecting the students' plea for the grace marks, the single-judge bench had upheld the university's rule, doing away with the practice of awarding grace marks from May 2016.
In their appeals to the division bench against the single-judge bench ruling, the students had submitted that they had joined the MBBS course in 2012 and had appeared for the examinations of four subjects in December 2016. They cleared all subjects, but failed in a practical exam due to shortage of two to eight marks.

They said when they had joined the course, the university regulations provided for the grace marks.
The MCI regulations too, amended up to October 8, 2016, provided for the award of grace marks up to five to a student who failed only in one subject but passed in all others, they said.
The university, however, on June 29, 2016 decided to amend the regulations to the effect that there would be no revaluation and award of the grace marks to theory and practical examinations from May 2016.

Adjudicating the students' plea, the division bench held that the grant of grace marks was part of the course and various facets leading to the conferment of the degree that were in force at the time of affected students' admission in 2012.
It must remain the same till the student completed the course in accordance with those very rules, the bench said.

"The law does not permit alteration of the same when the candidate is half way through," the bench said.

The university has to exercise its vested discretion keeping in view the interest of the student who performed well in all his subjects, but unfortunately in one subject alone was unable to get the pass marks, it said.

(This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)

100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ பைபர் : அடுத்த இலவச யுத்தம் தயார்.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்டஸ்ட்ரீஸ் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகள் அதிகாரப்பூர்வமாக இயங்குவதோடு பல சலுகைகளை தற்ப்போது அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் பைபர் (எப்டிடிஇ) என்ற அகல அலைவரிசை சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் இன்டர்நெட் வேகம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

தற்போது வரும் ஜியோ பைபர் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பைபர் முன்னோட்டம்: இந்த ஜியோ பைபர்(எப்டிடிஇ) முன்னோட்டம் வரவிருக்கும் வரவிருக்கும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு முன்னேற்றங்களைப் பெற்று வருகிறது ஜியோ நிறுவனம்

பிராட்பேண்ட்: பைபர் பிராட்பேண்ட் 1ஜிபி பிஎஸ் வரை வழங்கப்படும் மேலும் 100 எம்பிபிஎஸ் வரை வேகத்தை வழங்கும் தன்மை கொண்டவையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜியோ பைபர் பிராட்பேண்ட் மும்பையில் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின் புனேவில் தொடங்க திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.

வலைதளம்: தற்போது ஜியோ பைபர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லை கூடிய விரைவில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ 4ஜி சேவையை பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப் படுகின்றன.

இணையப் பயனர்கள்: இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் இணையப் பயனர்கள் உள்ளன. பெரும்பான்மையானவர்கள் 2 ஜி, 3 ஜி, மற்றும் 4ஜி போன்ற வயர்லெஸ் இணைப்புகளைபப் பயன்படுத்துகின்றனர். மேலும் கம்பி இணைப்புகளில் எசிடி மற்றும் ஐஎஸ்பி-களின் வருகையின் காரணமாக சற்று முன்னேற்றம் தெரிந்துள்ளது.

ஜியோ பைபர் தாக்கம்: ஏர்டெல் சமீபத்தில் வி-பைபர் அறிமுகத்தை அறிவித்தது, இதனால் மிகப் பெரிய அளவிற்க்கு மாற்றம் ஏற்ப்பட்டது. மேலும் இதன் வேகம் 100 எம்பிபிஎஸ் அளவிற்க்கு முதலிடத்தில் உள்ளது. மேலும் தற்போது வரும் ஜியோ பைபர் மிகப் பெரியஅளிவற்க்கு வேகம் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு ஏர்டெல்க்கு போட்டியாக வரவுள்ளது.
 Tirupati darshan ticket now at head post office

Residents of Salem planning for a pilgrimage to Tirupati can now book special darshan tickets through the Head Post Office here.

A press release from the Senior Superintendent of Post Offices, Salem East Division, said that the Department of Posts had launched this facility from April 26 and one can obtain Rs. 300 ticket for darshan at 10 a.m., 11 a.m., 12 noon and 1 p.m. The release said that the entry ticket permits registration for six persons and one of the members of the group can obtain the ticket from the post office. He has to upload the pictures of other group members and should bring the Aadhaar card of all the six members for registration.


Registration can be done prior to 56 days. For details contact, 0427-2261180.

வடபழனியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

By DIN  |   Published on : 02nd May 2017 04:34 AM  |  

சென்னை வடபழனியில் புதன்கிழமை முதல் போக்குவரத்தில் (மே 3) தாற்காலிகமாக மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: கோயம்பேட்டிலிருந்து அசோக்பில்லரை நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் 100 அடி சாலையில் உள்ள வடபழனி மேம்பாலத்தின் மேலே சென்று தெற்கு சிவன் கோயில் அருகில் காவல் ஆய்வாளர் குடியிருப்பு முன் நின்று செல்லும்.
அசோக்பில்லர் மார்க்கம் செல்லும் பயணிகள் காவல் ஆய்வாளர் குடியிருப்பு முன் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. அசோக்பில்லரில் இருந்து வரும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் தெற்கு சிவன் கோயில் தெரு முன் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு வடபழனி மேம்பாலத்தின் மேலே சென்று கோயம்பேடு சென்றடையும்.

கோயம்பேடு பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் பயணிகள் தெற்கு சிவன் கோயில் தெரு முன் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்தப் போக்குவரத்து மாற்றம் புதன்கிழமை (மே.3) முதல் தாற்காலிகமாக அமலுக்கு வருகிறது.

ஐ.டி. துறைக்கு காத்திருக்கும் ஆபத்து?

By -எஸ்.சந்திரசேகர்  |   Published on : 01st May 2017 02:50 PM  |   

ஏற்கெனவே உலகளாவிய பொருளாதார சிக்கலால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடிகள், ஆஸ்திரேலியாவின் முட்டுக்கட்டைகள், சிங்கப்பூர், நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகள் என இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி ஆலோசனை நிறுவனமான மெக்கென்ஸி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை குறித்து ஆய்வு நடத்தியது. அதில், அடுத்த 3-4 ஆண்டுகளில் சுமார் 50 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்தத் துறையில் தானியங்கி மென்பொருள்களின் செயல்பாட்டால் 30% வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நடுத்தர திறன் வேலைவாய்ப்புகள் 8% வரையும், உயர் திறன் வேலைவாய்ப்புகள் 56% வரையும் பாதிக்கப்படலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவின் பிபிஓ துறையும் சரிவை சந்திக்கும் என கூறுகிறது ஆய்வு. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறையில் சுமார் 3.7 லட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும். தானியங்கி செயல்பாடுகளை பயன்படுத்துவதால், இந்தியாவில் 69 சதவீதமும், சீனாவில் 77 சதவீதமும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என உலக வங்கியும் அதன் பங்குக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஐ.டி. துறையில் முதலிடத்திலுள்ள டிசிஎஸ்ஸூக்கு அடுத்து அதிகம் பேர் பணியாற்றுவது, காக்னிசென்ட் நிறுவனத்தில். அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் இதன் 75% ஊழியர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். சுமார் 2.6 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் 5% ஊழியர்களை வெளியேற்றப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ பணிநீக்கத்தைத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் சோதனை நடத்தி 600 பேரை உடனடியாக நிறுவனத்தைவிட்டு வெளியேற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஊழியர்களின் பணிநீக்கம் 2000 வரை உயரும் என்றும், வர்த்தக நிலை சீராகும் வரை இந்தப் பணிநீக்கம் தொடரும் எனவும் விப்ரோ அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிநீக்கம் மட்டுமின்றி புதிய பணியாளர்கள் தேர்வும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இன்போசிஸ் சுமார் 17,857 புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்தது. ஆனால், 2016-17 நிதியாண்டில் 6,320 ஊழியர்களை மட்டுமே சேர்த்துள்ளது. இது கிட்டத்தட்ட 60% குறைவு.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரவீண் ராவ் ஒரு பேட்டியில் கூறும்போது, நிறுவனத்தில், "15-20 ஆண்டு அனுபவம் பெற்ற ஊழியர்கள் நிறுவனத்தின் சொத்து என்பதற்குப் பதிலாக சுமையாக மாறுகின்றனர்; அதிக அனுபவம் பெற்ற ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு நிறுவனத்துக்குப் பயன்பட வேண்டும்' எனக் கூறி சீனியர் ஊழியர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார்.
அடுத்து வரும் காலம் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு வசந்த காலமாக இருப்பது சந்தேகமே.

மூன்று நாள்களில் ரூ. 500 கோடி வசூலை அள்ளியது பாகுபலி 2

By DIN  |   Published on : 01st May 2017 03:28 PM  |
baahubali_2_90xxcc

ஒரு இந்தியப் படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 500 கோடி வசூல் அடைவது சாத்தியமா?

கனவில் கூட நினைக்கமுடியாத இந்த வசூலை அடைந்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது பாகுபலி 2.

முதல் நாளன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் சேர்த்து ரூ. 121 கோடி அள்ளியது. ஹிந்தியில் ரூ. 41 கோடியும் இதர மொழிகளில் ரூ. 80 கோடியும் கிடைத்தது. அதன்பிறகு நாளுக்கு நாள் அதன் வசூல் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

ஹிந்தி பாகுபலி 2 இந்தியாவில் முதல் மூன்று நாள் வசூலாக ரூ. 128 கோடியைப் பெற்றுள்ளது. வெள்ளியன்று ரூ. 41 கோடி, சனி ரூ. 40.5, ஞாயிறு ரூ. 46.5 கோடி. இது ஒரு சாதனை வசூல். சுல்தான், டங்கல் படங்களை விடவும் டப்பிங் படமான பாகுபலி 2 அதிக வசூல் அள்ளியிருப்பது பாலிவுட்டை அசரவைத்துள்ளது. ஹிந்திக்கு என எந்தவொரு பாலிவுட் நடிகர்களையும் படத்தில் நுழைக்காமல் தென்னிந்திய நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட பாகுபலி 2, முதல் மூன்று நாள் வசூலில் இதர ஹிந்திப் படங்களின் வசூலை மிஞ்சியிருப்பது மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது முதல் மூன்று நாள்களில் இந்தியா முழுக்க ரூ. 385 கோடி வசூலாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் இதன் சாதனைப் பயணம் தொடர்கிறது.

வட அமெரிக்காவில் முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 65 கோடி வசூல் கிடைத்துள்ளது. அமெரிக்காவில், கடந்த வார இறுதியில் அதிக வசூல் பெற்ற படங்களில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது பாகுபலி 2. இதனால் ஹாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு இந்தியப் படத்தால் டாப் 10-ல் இடம் பிடிக்கமுடியும் என்று நிரூபித்துள்ளது. வெளிநாடுகளில் முதல் மூன்று நாள்களில் ஒட்டுமொத்தமாக ரூ. 120 கோடி கிடைத்துள்ளது.  

இதையடுத்து உலகம் முழுக்க முதல் மூன்று நாள்களில் ரூ. 500 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று இதுவரையிலான அத்தனை சாதனைகளையும் உடைத்துள்ளது பாகுபலி 2. இதற்கு முன்பு வேறு எந்த இந்தியப் படமும் வசூலில் இத்தகைய சாதனைகளைப் படைத்ததில்லை. ஒரே மொழியில் என இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என நான்கு மொழிகளிலும் வசூலில் சாதனை படைப்பதால் ஒட்டுமொத்தமாக இத்தகைய வலுவான வசூலைப் பெறமுடிகிறது.

இன்று விடுமுறை தினம். கோடை விடுமுறை காலம் வேறு. எனவே இந்தப் படத்தின் வசூலும் சாதனை முறியடிப்புகளும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி சிறந்த தமிழ்நாடு!!

By ஆசிரியர்  |   Published on : 01st May 2017 02:26 AM  | 

கல்வித் துறையில் தமிழகத்துக்கு சிறப்பான இடமிருந்த காலம் ஒன்று இருந்தது. அந்தத் தலையாய இடம், இப்போது டஜன் கணக்கில் பல்கலைக்கழகங்கள் வந்துவிட்ட நிலையில் மேலும் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும் சர்வதேச அளவில் கல்வியின் தரத்துக்காக உயர்த்திப் பிடிக்கப்படுகிறதா என்றால் இல்லை. சில தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களால் தமிழகத்தில் மானம் காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை நிலை.

பள்ளிக் கல்வியின் தரமே கேள்விக்குறியாக இருக்கிறது. தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் நமது மாணவர்களால் போட்டியிட முடியாது என்று கூறி விலக்குக் கேட்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோமே தவிர, ஏனைய மாநிலங்களின் கல்வித் தரத்தைவிடத் தமிழகத்தின் கல்வித் தரம் உயர்ந்தது என்று நெஞ்சை நிமிர்த்தி நம்மால் சொல்லிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் உயர்கல்வியில் நாம் சர்வதேச அளவில் போட்டி போட முடியாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

தமிழகத்தின் முக்கியமான மூன்று பல்கலைக்கழகங்கள் சென்னை, மதுரை காமராசர், அண்ணா பல்கலைக்கழகங்கள். இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடந்த 2015 ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் துணைவேந்தர் இல்லாமல் இயங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த இரா. தாண்டவன் கடந்த 2016 ஜனவரி 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இன்று வரை, அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படாமல் பல்கலைக்கழக நிர்வாகம் இயங்கி வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் முக்கியமான தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. சுமார் 426 சுயநிதித் தனியார் பொறியியல் கல்லூரிகளும், ஆறு அரசுப் பொறியியல் கல்லூரிகளும், மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் இந்தப் பல்கலைக்கழத்தின்கீழ் இயங்குகின்றன. அப்படிப்பட்ட முக்கியமான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம். ராஜாராமின் பதவிக் காலம் கடந்த 2016 மே 26-ஆம் தேதி முடிவடைந்தது. அங்கு இன்னும் அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே அடுத்த துணைவேந்தரைப் பரிந்துரைக்க தேடல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதேபோல, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான தகுதியாளர்களைப் பட்டியலிட துணைவேந்தரின் பதவிக் காலம் முடிவடைவதற்குப் பத்து நாள்களுக்கு முன்பே தேடல் குழு அமைக்கப்பட்டு விட்டது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் ராஜாராமின் பதவிக் காலம் முடிந்து ஆறு மாதத்திற்குப் பிறகுதான் தேடல் குழுவே அமைக்கப்பட்டது என்றால் எந்த அளவுக்கு இங்கு கல்வி முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நியாயமாக ஆட்சியாளர்களுக்கும் துணைவேந்தர் நியமனங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கக் கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவுதான் துணைவேந்தர் நியமனங்கள் தாமதிக்கப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுமானால், நமது நிர்வாக துறையில் ஏதோ கோளாறு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 2015 ஏப்ரல் மாதத்திலும், 2016 ஜனவரி மாதத்திலும், 2016 மே மாதத்திலும் மதுரை, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பதவிக் காலம் முடிவடைந்தபோது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நமது நிர்வாக இயந்திரத்தின் மெத்தனத்திற்கு முதல்வரின் உடல்நலக் குறைவு காரணமாக்கப்படுவதை ஏற்க முடியாது.

துணைவேந்தர் இல்லாத நிலையில், உயர்கல்வித் துறைச் செயலரின் தலைமையிலான குழுவால் பல்கலைக்கழகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அதிகாரிகளால் எப்படி பல்கலைக்கழத்தின் அன்றாடப் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும்? துணைவேந்தர் இல்லாததால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஆண்டு நடைபெறவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது சென்னைப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள், புதிய பாடத்திட்டங்களைப் புகுத்துதல் போன்ற எல்லா செயல்பாட்டிற்கும் துணைவேந்தரின் பங்களிப்பு அவசியம். துணைவேந்தர் இல்லாததால் தமிழகத்தின் முக்கியமான மூன்று பல்கலைக்கழகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததோடு பதிவாளரும்கூட இல்லாத நிலைமை. தமிழகத்திலுள்ள13 பல்கலைக்கழகங்களில் 9 பல்கலைக்கழகங்களுக்கு முழுநேர பதிவாளர் நியமிக்கப்படவில்லை; எட்டு பல்கலைக்கழகங்களில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவி நிரப்பப்படவில்லை.

இத்தனை பிரச்னைக்கும் காரணம் தமிழக அரசு மட்டும்தானா என்றால் இல்லை. தேடல் குழுக்களின் பரிந்துரைகள் ஆளுநர் மாளிகையில் தேங்கிக் கிடக்கின்றன. பத்து நாட்களுக்கு முன்னால் முக்கியத்துவம் இல்லாத தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமித்திருக்கிறார் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். அந்த முக்கியத்துவம் சென்னை, மதுரை காமராஜர், அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு தரப்படாததன் காரணத்தை அவர்தான் விளக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் வேந்தராக இருப்பவர் மாநில ஆளுநர். தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரே நியமிக்கப்படாமல் இருக்கும்போது பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

வனமில்லையேல் மழையில்லை

By எஸ். பாண்டி  |   Published on : 01st May 2017 02:29 AM  |   

தேனி மாவட்டத்தில் வெள்ளிமலைப் பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகையாறு தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் நீர்த் தேவையை பல ஆயிரம் ஆண்டுகளாக தீர்த்து வந்தது.
ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின் சாகுபடி முறையில் மாற்றம் செய்ததால், நீர்த்தேவை அதிகரித்தது. பருவமழையும் மாறி, மாறி பெய்ததால் சீரான அளவில் நீர்வரத்தும் இல்லை.

இதனால் அதிக அளவு நீர்வரத்து இருக்கும் காலங்களில் அதனை தேக்கி வைத்து வறட்சி காலங்களில் பயன்படுத்துவதற்காக ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது.

கட்டப்பட்டதில் இருந்து இதுவரை 28 முறை இந்த அணை, தன் முழு கொள்ளளவை எட்டிப் பிடித்துள்ளது. இதில், 1,38,102.45 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலந்துள்ளது என்பது வேதனையான விஷயம்.

ஆனால் இந்த நீரை கண்மாய் மற்றும் குட்டைகளில் தேக்கி வைக்க முடியாமல் போனதற்கு காரணம், அவற்றை முறையாகத் தூர்வாராமல் விட்டதுதான்.

மேலும் வைகை அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், தற்போது அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 20 அடிக்கு மேல் சேறும், சகதியுமாக கிடக்கிறது. இந்த சேறு, சகதியை அகற்ற இதுவரை ஆண்ட எந்த அரசும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்குவது வருசநாடு அருகே உள்ள மூல வைகையாகும். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதி சூற்றுச்சூழல் பூங்கா போன்றது. இங்கு யானை முதல் பல்வேறு வகையான விலங்கினங்கள் உள்ளன.

அதோடு அரியவகை மரங்களும் சிங்கவால் குரங்கு, இருவாட்சிப் பறவை, சாம்பல் நிற அணில் போன்ற அரியவகை பறவை,விலங்கினங்களும் உள்ளன. இங்கு உள்ள வெள்ளிமலைப் பகுதியில் மழை தரும் மரங்களான சோலா, ஆல், அரசு போன்ற மரங்களை வெட்டி சாய்த்து விட்டு, வெப்பக் காற்றை வெளியிடும் இலவம் மற்றும் முந்திரி மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாததால் கேரள வனப்பகுதிக்கு விலங்குகள் இடம் பெயர்ந்து செல்கின்றன. இதனால் பருவநிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, மழை பொய்த்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் மூல வைகையாற்றில் எப்போதும் நீர்வரத்து இருக்கும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக நீரின்றி இந்த ஆறு வறண்டு காணப்படுகிறது. மரங்களை வளருங்கள் என்று கூறுவோர், வெள்ளிமலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக வனங்களை அழிப்பவர்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் பலர் போராடினர். அவர்கள் அன்று போராடியதன் விளைவுதான் இன்று வைகை அணையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி.

எனவே உடனடியாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் நாம் அகற்றியாக வேண்டும்.

மழையை வரவழைக்கும் மரங்களான சோலா, ஆல், அரசு போன்ற மரக்கன்றுகளை வனப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். நீர்வரத்துகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மரக்கன்றுகளை நடுவதால் மழை பொழிவது நிச்சயம் என்று இயற்கை ஆர்வலர்கள் உறுதி கூறுகிறார்கள்.
அண்மையில் வைகை நதியில் தெர்மகோல் மிதக்க விடப்பட்ட திட்டம் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. எந்த அரசியல்வாதியும் தண்ணீர் பற்றாக்குறையை பற்றி கவலைப்படாத நேரத்தில் அதைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓர் அமைச்சர் நினைத்தது நல்ல விஷயம் தான்.

ஆனால் தண்ணீரை மூட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக மழையை பெறுவது தான் நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என நீரியல் நிபுணர்ககள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீட்டுக்கழிவுகள், மண் கழிவுகள் மற்றும் இறந்த உயிரினங்களின் உடல்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு வைகை அணையை வந்தடையும் போது, அவற்றை மீன்கள், நண்டுகள், நீர்க்காக்கைகள், கூழைக்கிடா போன்ற உயிரினங்கள் உட்கொண்டு வந்ததால் நீர் சுத்தமாக்கப்பட்டது.
அவ்வாறு இருக்கும் போது தெர்மகோலை அணை தண்ணீரில் மிதக்க விட்டால் அதில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது. அணை நீரில் உள்ள அனைத்து உயிரினமும் அழிந்து விடும்.

இதனால் தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே அறிவுபூர்வமாக சிந்தித்து வெள்ளிமலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும்.
அத்துடன் வைகை அணையை தூர்வாருவதுடன் ஐந்து மாவட்டங்களில் உள்ள கண்மாய், நீராதாரங்களையும் தூர்வாரி மேம்படுத்த வேண்டும்.
இவை நடைபெற்றாலே பருவமழை தவறாமல் பெய்து, ஆண்டு முழுவதும் ஐந்து மாவட்டங்களுக்கும் வறட்சி இல்லாமல் போகும்.

எனவே குளுகுளு அறையில் அமர்ந்து யோசிக்காமல், களத்தில் இறங்கி நடை
முறைக்கு ஏற்றதை செயல்படுத்தி வறட்சியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

வங்கியா? வணிக நிறுவனமா?

By எஸ். கோபாலகிருஷ்ணன்  |   Published on : 02nd May 2017 02:31 AM  |   | 
DINAMANI 

அண்மையில் பாரத ஸ்டேட் வங்கி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.5,000/- இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அதற்கு உரிய கட்டணம் வசூலிக்கப்படும் என்பதே அது.

குறைந்தபட்ச இருப்புத்தொகை பெருநகரங்களில் ரூ.5,000/- என்றும், நடுத்தர நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் சற்றுக் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்புக் கிளம்பியதில் வியப்பில்லை. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் கோபம் வெளிப்பட்டது. அந்தக் கோபக் கனல் வழக்கம்போல் பிறகு தணிந்து போனது. எனினும் வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
எந்த அடிப்படையில் இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது? வங்கி சேவைக்கு ஆகும் செலவு கணக்கிடப்பட்டதா? ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா? சர்வதேச அளவில் இதற்கெல்லாம் ஏதேனும் விஞ்ஞான ரீதியில் அளவுகோல்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா? இவை எல்லாவற்றிற்கும் இல்லை என்பதே பதில்.

நடந்தது இதுதான்: பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார். பேச்சு வங்கிக் கட்டணங்கள் பக்கம் திரும்புகிறது.

உடனே அவர் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள வாடிக்கையாளர்களிடம் கேட்கிறார்: "உங்கள் சேமிப்புக் கணக்குகளில் யாரெல்லாம் ரூ.5,000/-க்குக் குறைவாக இருப்புத் தொகை வைத்திருக்கிறீர்கள்? அவர்கள் தயவுசெய்து கையைத் தூக்குங்கள்' என்கிறார்.

யாரும் கையைத் தூக்கவில்லை. உடனே, "பார்த்தீர்களா? இவர்கள் எல்லோருமே ரூ.5,000/-க்குக் குறையாமல் இருப்புத் தொகை வைத்திருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல. மிக, மிகச் சிலரே தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து மாதம் 10 தடவைக்கு மேல் பணம் எடுக்கின்றனர்' என்கிறார் எஸ்.பி.ஐ. தலைவர்!

என்னே, ஓர் ஆய்வு? அவர் பேசியது பெருநகரம்தான். நிகழ்ச்சியில் 500 அல்லது 600 பேர் கலந்து கொண்டிருப்பார்கள் என்றே வைத்துக் கொள்வோம். 125 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில், இது ஒரு நியாயமான கணக்கெடுப்பு ஆகுமா?
வாடிக்கையாளர்களின் "நீறு பூத்த நெருப்பு' போன்ற கோபத்தை வங்கிகள் புரிந்து கொள்ளாதது வியப்பளிக்கிறது. நல்ல வேளையாக ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் புரிந்து கொண்டுள்ளன. இந்த ஒரு விஷயத்தில், ரிசர்வ் வங்கி மற்றும் அரசு மக்கள் பக்கம் இருப்பதுபோல் தெரிகிறது.

ரூ.500, ரூ.ஆயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு, டிஜிட்டல் முறை செயல்பாடுகளை விரைந்து புழக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்கிற முனைப்பு அரசிடம் காணப்படுகிறது. அதற்கு வங்கிகளைப் பயன்படுத்திக் கொள்ள அரசு விரும்புவது இயல்பு. இந்த வேளையில், தேவையில்லாத கட்டண அதிகரிப்பின் மூலம், வங்கி வாடிக்கையாளர்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ள அரசு விரும்பவில்லை.

வங்கிச் சேவைக் கட்டணங்கள் ஒன்றா? இரண்டா? சேமிப்புக் கணக்கு இருப்புத் தொகையில் ஆரம்பித்து, டெபிட் கார்டு பயன்பாட்டுக் கட்டணம், ஏ.டி.எம்.களிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமான முறை பணம் எடுத்தால் அதற்குக் கட்டணம், கணக்கிலிருந்து பணம் மாற்றம் (டஹஹ்ம்ங்ய்ற் ற்ழ்ஹய்ள்ச்ங்ழ்) கட்டணம் என பட்டியல் நீள்கிறது.
கடன் அட்டை (கிரெடிட் கார்டு) அல்லது பற்று அட்டை (கணக்கில் உள்ள தொகையை எடுப்பதற்கான கார்டு) என எதுவாக இருந்தாலும் வங்கிகள் தங்கள் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட வியாபார நிறுவனங்களிலிருந்தோ வசூலித்து விடுகின்றன.

சேமிப்புக் கணக்குகளில் ரூ.1,000/- முதல் ரூ.10,000/- வரை - கிராமங்கள், சிறு நகரங்கள், நடுத்தர நகரங்கள், பெரும் நகரங்கள் என - கிளைகள் இயங்கும் இடத்துக்கு ஏற்ப குறைந்தபட்ச இருப்புத்தொகை இருத்தல் வேண்டும் என நிர்ணயிக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால், கட்டணம் உண்டு.
அதேபோல், ஒரே சீரான கட்டணங்கள் வங்கிகளிடையே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. டெபிட் கார்டு வழங்குவதற்கும் ரூ.130/- முதல் ரூ.300/- வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஏ.டி.எம்.களைப் பொருத்தவரை பெரும்பாலான வங்கிகள் மாதம் 5 முறை பணம் எடுத்தால் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கட்டணம் வசூலிப்பது கிடையாது. அதற்கு மேல் 6-ஆவது, 7-ஆவது முறை எடுத்தால் கட்டணம் உண்டு.

தங்கள் வங்கியின் வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கு மூன்று முறை பணம் எடுப்பதற்கு மட்டுமே கட்டணம் இல்லை. கட்டணம் ஒவ்வொரு முறையும் ரூ.15/- முதல் ரூ.20/- வரை வசூலிக்கப்படுகிறது.
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை வங்கிப் பணியாளர்கள் முகமலர்ச்சியுடன் வரவேற்ற காலம் மலை ஏறிவிட்டது. இப்போது வங்கிக் கிளைக்கு நேரில் சென்று சொந்தக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு அல்லது பணம் டெபாசிட் செய்வதற்கு மாதம் நான்கு முறைக்கு மேல் சென்றால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.150/- கட்டணம் செலுத்திட வேண்டும். நோக்கம், வங்கிக் கிளைகளில் கூட்டம் தவிர்ப்பது; ஆன் லைன் வங்கிப் பரிமாற்றங்களை அதிகரிப்பது.

தொடக்க காலங்களில், வாடிக்கையாளர், தான் வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைப்பார். தேவையானபோது செலவு செய்வதற்காகப் பணத்தை எடுப்பார் அல்லது பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு அல்லது காப்பீட்டு பிரீமியத்துக்கு காசோலை எழுதிக் கொடுப்பார்.

தன் மகன் அல்லது மகள் பல்கலைக்கழகப் பரீட்சை எழுதும்போது, பரீட்சை கட்டணம் செலுத்துவதற்கு வங்கியில் டிமாண்டு டிராப்ட் (வரைவு ஓலை) சிறிய கட்டணம் செலுத்தி வாங்குவார்.
ஆனால், அதேநேரம் முன்பு, பணம் எடுப்பதற்கு அரை மணி நேரம்கூட ஆகும். இப்போது நிமிஷத்தில் பணம் எடுத்துவிடலாம். நாள் முழுவதும், வாரம் முழுவதும் எந்நேரமும் ஆன்லைன் சேவை கிடைக்கிறது.
முன்பு வீட்டுக்கடன், வாகனக்கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இப்போது எளிய மக்களும் இதுமாதிரியான கடன்களைப் பெறலாம்.
வங்கிச் சேவையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்ட பிறகும், சில விஷயங்களில் சாதாரண மக்களுக்குப் பாதகமாகவும், வசதி படைத்தவர்களுக்குச் சாதகமாகவும் வங்கியின் போக்கு அமைந்துள்ளது. உதாரணமாக, கடன் வழங்கும்போது சாதாரண மக்களிடம் விதிமுறைப்படி வட்டி விகிதத்தைக் கறாராக வாங்கிவிடுகிறார்கள்.

ஆனால் செல்வந்தர்களிடம் பெரிய நிறுவனங்களில் அவர்களது தரவரிசை (இழ்ங்க்ண்ற் தஹற்ண்ய்ஞ்) அ அ அ வாக இருக்குமானால், வங்கியின் வழக்கமான வட்டிவிகிதத்தைவிட குறைவான வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்களிடமிருந்து "செக்யூரிடி' (பிணையம்) கிடைக்கிறது, பலவகை சேவைக் கட்டணங்களை வசூலிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கூடுதல் லாபம் கிடைக்கிறது' என்று பதில் வருகிறது.

முக்கியமான விஷயம் என்னவெனில், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்துவிட்டது. இதனால் இழப்பு ஏற்படுகிறது. இழப்பை ஈடுகட்ட சகட்டுமேனிக்கு சேவைக்கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கிவிட்டன வங்கிகள்.

வாராக்கடன் இழப்பைச் சரி செய்வதற்குத் திறமையான, துரிதமான, துணிவான செயல்பாடுகள்தான் தேவை. அதை விடுத்து, சேவைக் கட்டணங்களை உயர்த்தி எளிய வாடிக்கையாளர்களைத் துன்புறுத்துவது நியாயம் அல்ல.

சமீப காலத்தில், வங்கித் துறையில் டிஜிட்டல் வழிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, கிராமப்புறங்களில் கையடக்க ஏ.டி.எம்.களின் (ஙண்ஸ்ரீழ்ர் அபஙள்) பயன்பாடு அதிகரித்துள்ளது. 2,000 பேர் வசிக்கும் கிராமங்களில் வங்கிக் கிளைகளை அமைப்பதற்கு பதில் ஆஹய்ந்ண்ய்ஞ் இர்ழ்ழ்ங்ள்ல்ர்ய்க்ங்ய்ற்ள் எனப்படும் வங்கிப் பிரதிநிதிகளை நியமிக்கும் திட்டம் ஏற்கெனவே செயல்படுகிறது.
தற்போது கூடுதல் நன்மை என்னவெனில், புதிய டிஜிட்டல் வழிமுறைகளை வங்கிப் பிரதிநிதிகள் கையடக்க ஏ.டி.எம்.கள் மூலம் வங்கியின் கிராமக் கிளைகள் செய்யக் கூடிய பணிகள் அனைத்தையும் செய்து முடித்து விடுகின்றனர்.

அதாவது சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்தல், கணக்கில் பணம் டெபாசிட் செய்தல் போன்ற பணிகளை கிராமங்களில் வங்கிப் பிரதிநிதிகள் செய்து விடுகின்றனர். அவர்களுக்கு சொற்ப தொகைதான் கட்டணமாக (ஊங்ங்ள்) வங்கிகள் தருகின்றன. அதையும் குறைப்பதற்கு வங்கிகள் முயன்று வருகின்றன.

நியாயமாகப் பார்த்தால் அவர்களுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும். வங்கிகள் கிளைகளை அமைத்தால் ஆகக் கூடிய செலவை அவர்களை பயன்படுத்திக் கொண்டு மிச்சப்படுத்துகின்றன.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு எழுதி, கையடக்க ஏ.டி.எம்.களை கையாளும் வங்கிப் பிரதிநிதிகளுக்கு உரிய கட்டணம் (ஊங்ங்ள்) வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

வங்கிகள் குறிப்பாக பொதுத் துறை வங்கிகள் வெறும் வணிக நிறுவனங்கள் அல்ல. அவர்களுக்கு சமூக கண்ணோட்டம் தேவை. பொருளாதார வளர்ச்சி, எளிய மக்களையும் குறிப்பாக ஊரகப் பகுதி வாழ் மக்களையும் உள்ளடக்கியதாக (ஊண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் ஐய்ஸ்ரீப்ன்ள்ண்ர்ய்) மாற்றுவதில், வங்கிகளுக்கு பெரும் பங்கு உண்டு.
இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க முதல் நாளில் 4,738 விண்ணப்பம்

பதிவு செய்த நாள் 02 மே 2017 01:45

சென்னை, அண்ணா பல்கலை, இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க, முதல் நாளான நேற்று, 4,738 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு நடத்தும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலை மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, மாலை, 6:00 மணி நிலவரப்படி, 4,738 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

அவர்களில், ௪௮ பேர் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, ஆன்லைன் பதிவு மையம் மூலமாக விண்ணப்பித்து உள்ளனர்.மே, 31 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப பிரதியை, ஜூன், 3க்குள், அண்ணா பல்கலையில், தபாலிலோ, நேரிலோ
சமர்ப்பிக்கலாம். விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில் சேர விரும்புவோர், உரிய ஆவணங்களுடன், அண்ணா பல்கலைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.'பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்புவோருக்கு விண்ணப்பிக்கும் தேதி, தனியாக அறிவிக்கப்படும்' என, இன்ஜி., கவுன்சிலிங் மாணவ சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பதிவு செய்த நாள் 02 மே  2017

சென்னை, இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால், டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.

முதுகலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, அரசு டாக்டர்கள், நடத்தி வரும் போராட்டம், நேற்று, 13வது நாளாக நீடித்தது. இதனால், நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். 'டாக்டர்களின் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்' என, மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வில், இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. 'நீதிமன்ற உத்தரவை பொறுத்தே போராட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என, முடிவு செய்வோம்' என, டாக்டர்கள்
கூறுகின்றனர்.

NEWS TODAY 21.12.2024