நீட்' அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்துக்கு ஓராண் டுக்கு விலக்கு கோரும் அவசர சட்டத்துக்கு, மத்திய சட்ட அமைச்சகம், நேற்று ஒப்புதல் அளித்தது; இருப்பினும், இதனால் எதிர்பார்க் கும் பலன் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான, 'நீட்'டிலிருந்து, தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும்படி, தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி வந்தது; இதற்கு, மத்திய அரசு செவி சாய்க்காததால், இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டது.
இதன்பின், இரண்டு ஆண்டு என்பது, ஓராண் டாக மாறியது. அப்போதும், எந்த உறுதியும் பெறப்படாத நிலையில், சமீபத்தில், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர்களிடம் பேசினார்.அப்போது, 'நீட் தேர்விலிருந்து, ஓராண்டுக்கு மட்டும் விலக்கு கேட்டு கோரிக்கை வந்தால், அதுகுறித்து பரிசீலிக்க, மத்திய அரசுதயாராக உள்ளது' என்றார். மிக முக்கியமான பிரச்னை யில், மாநில அரசிடம் தெரிவித்து இருக்க வேண்டிய தகவலை, ஊடகங்கள் மூலமாகவே மத்திய அமைச்சர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், மாநில சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் டில்லி விரைந்தார். ஓராண்டுக்கான அவசர சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், வேணுகோபாலி டம்,தமிழக அரசின் அவசர சட்ட வரைவு குறித்து கருத்து கேட்கபட்டது.ஓரிரு நாட்களில் என் கருத்தை தெரிவிப்பேன்,'' என, காலையில் கூறிய வேணுகோபாலிடம், மதியம் பேசியபோது, நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற் கான ஒப்புதலை அளித்து விட்டதாக கூறினார்.
இதையடுத்து, நீட் தேர்வு விஷயத்தில், சட்ட ரீதி யாக தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்ற நிலைக்கு மத்திய அரசு வந்துள்ளது, தெளிவா னது. மீண்டும் டில்லிவந்துள்ள, அமைச்சர் விஜய பாஸ்கரும், மத்திய சட்டத்துறை இணையமைச்சர், சவுத்ரியை சந்தித்துப் பேசினார்.
சட்டத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பிற அமைச்சகங்களின் ஒப்புதலைப் பெறும் பணிகளிலும் தமிழக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகம், அவசர சட்டத்துக்கான ஒப்புதலை, நேற்றிரவு அளித்தது.
இதை தொடர்ந்து, உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகங் கள் ஒப்புதல் அளித்த பின், இந்த சட்ட முன்வரைவு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் படும். எந்த நேரத்திலும், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.
எல்லா வேலைகளும் முடிந்து விட்டாலும், அவசர சட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கு, நீட் விலக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக் கும் தரப்பினர், தயார் நிலையில்உள்ளனர். இது வரையில், நீட் தேர்வை நியாயப்படுத்தும் வகை யில் தான், கோர்ட் உத்தரவுகள் அனைத்துமே உள்ளன.
இதனால், அவசரச் சட்டத்தின் கதி, சுப்ரீம் கோர்ட் கைகளில்தான் உள்ளது என்பது, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றாகவே தெரியும்; இருப்பினும், நீட் விலக்கு, அரசியல் ரீதியாக, தங்களை பாதித்துவிடக் கூடாது என்பதை, இதில்சம்பந்தப்பட்ட கட்சிகள் உணர்ந்துள்ளன.
இதனால்தான், 'முடிவு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை; முடிந்தவரை போராடினோம்' என்பதை காட்டுவதில், அந்த கட்சிகள் தீவிரமாக உள்ளன. எனவே, நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டம், எதிர்பார்க்கும் பலனை தரப்போகிறதா அல்லது அந்தரத்தில் மீண்டும் தொங்கப்
போகிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
என்ன சொல்லப்போகிறது சுப்ரீம் கோர்ட்?:'நீட்'
தேர்வின் அடிப்படையில், மாணவர்சேர்க்கை நடத்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
காவ்யா நக்கீரன் உட்பட, ஐந்து மாணவியர் சார்பில், மூத்த வழக் கறிஞர், நளினி சிதம்பரம் இதற்கான மனுவை தாக்கல் செய்தார். நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில், நேற்று ஆஜரான, நளினி சிதம்பரம், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு ஏற்கும்படி வாதிட்டார்.
நீட் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதால், இதை தனியாக விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது; அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நீட் நுழைவுத் தேர்வு நடந்து முடிந்தும், மாணவர் சேர்க்கை இதுவரை துவங்கவில்லை. மாணவர் சேர்க்கையில், 85 சதவீதம் உள் ஒதுக் கீடு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டது. மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என, மாணவர்களும், பெற்றோரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்தும் படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -