ஆள் பற்றாக்குறையால் திணறும் பஸ் ஊழியர்கள்
பதிவு செய்த நாள்17ஆக2017 01:16
சென்னை: அரசு விரைவு போக்கு வரத்து கழகமான, எஸ்.இ.டி.சி.,யில், 1,800 பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஊழியர்கள், பணிச்சுமையில் திணறும் நிலை ஏற்பட்டுஉள்ளது.
பணிச்சுமை : அரசு விரைவு போக்கு வரத்து கழகத்தில், 1,185 பஸ்கள் உள்ளன. இவை, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும், தொலைதுார பஸ்களாக இயக்கப்படுகின்றன. இதில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டிய கட்டாயம். ஆனால், ஊழியர்கள் பற்றாக்குறையால், சட்ட ரீதியான ஓய்வு கூட வழங்க முடியாமல், தொடர்ந்து பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, எஸ்.இ.டி.சி., ஊழியர்கள் கூறியதாவது:எஸ்.இ.டி.சி.,யில் உள்ள, 6,800 பணியிடங்களில், தற்போது, 5,000 பணியிடங்களே உள்ளன. ஓட்டுனர்கள், 1,560 பேர்; நடத்துனர், 235 பேர் உட்பட, 1,800 இடங்கள் வரை, காலியாக உள்ளன. இதனால் ஊழியர்களுக்கு, அதிக பணிச்சுமை ஏற்படுகிறது.
மன உளைச்சல் : தட்டிக் கேட்கும் ஊழியர்களுக்கு, வருகைப் பதிவை குறைப்பது, அதிக பணி வழங்குவது என, பல்வேறு நெருக்கடிகள், நிர்வாகத்தால் தரப்படுகின்றன. ஓய்வில்லாத பணியால் ஓட்டுனர், நடத்துனர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இது, விபத்துகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, காலி பணியிடங்களை, அரசு உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment