Wednesday, August 16, 2017

ஆடி கடைசி செவ்வாய்... குமரி மாவட்ட அம்மன் கோயில்களில் அலைமோதிய கூட்டம்!




ஆடி கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு குமரி மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆடி கடைசி செவ்வாய்கிழமையில் குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் விஷேச பூஜைகள் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வையாருக்கு தனி கோயில்கள் உண்டு. தாழக்குடி அருகேயுள்ள அவ்வையார் அம்மன் கோயிலில் பெண்கள் கூட்டம் அதிகமாக வந்து அம்மன் அருள் பெற்று சென்றனர். அங்கு குமரி மற்றும் கேரள பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்து பெண்கள் கோயில் வளாகத்தில் கூழ், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் போன்றவை தயாரித்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். கோயிலில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அவ்வையார் அம்மனை வழிபட்டனர்.

நாகர்கோவிலில் இருந்து இறச்சகுளம் வழியாகவும், செண்பகராமன்புதூர் வழியாகவும் சிறப்பு பஸ்கள் அவ்வையார் அம்மன் கோயிலுக்கு இயக்கப்பட்டன. குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தன. பிரசித்தி பெற்ற முப்பந்தல் இசக்கி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கொட்டாரம் முத்தாரம்மன் கோயில், சந்தனமாரியம்மன் கோயில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன், வடசேரி காமாட்சி அம்மன் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடந்தன. இதனால் அம்மன் கோயில்களில் கூட்டம் களைகட்டியது. குமரி மாவட்ட பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024