பள்ளி சுதந்திர தின விழாவில் சாக்லேட்டுக்கு பதில் கடலை மிட்டாய்!
காரைக்குடி, தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.
சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது. இதுபற்றி பள்ளித் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் பேசும்போது, "இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே, சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர். இப்பள்ளியில் சாக்லேட்டுகளுக்கு இடம் கிடையாது. நமது ஊர் பொருளைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். அதனால்தான் மாணவர்களுக்குக் கடலை மிட்டாய் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் சாக்லேட்டை தவிர்த்து கடலை மிட்டாய் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாணவர்களின் உடலுக்குக் கடலை மிட்டாய் நல்லதும் கூட" என்றார்.
Dailyhunt
No comments:
Post a Comment