Saturday, January 6, 2018


‘ராசியில்லாத வீடு’ நம்பிக்கையா? / மூட நம்பிக்கையா? 


By கார்த்திகா வாசுதேவன் | Published on : 05th January 2018 05:59 PM |




மூடநம்பிக்கை... மூடநம்பிக்கை என்கிறோமே அதன் எல்லை தான் எது? வெறும் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கையில் சேர்த்தி இல்லையா? இன்னும் சிலர் செய்வினை என்கிறார்கள்... அட நமக்குத் தெரியாத செய்வினை, செயப்பாட்டு வினையா என்ன? அதெல்லாம் தெரியும் போங்கடா சாமிகளா! என்று அதை புறம் தள்ளவே பெரும் தைரியம் வேண்டியிருக்கிறது, இதில் எங்கிருந்து அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று ஒதுக்கித் தள்ள!

மனித இனம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதெல்லாம் தொடர்ந்து கொண்டே தான் இருந்திருக்கக் கூடும்?! வெவ்வேறு ரூபங்களிலும் வேறு, வேறு நம்பிக்கைகளிலும், இதில் வாஸ்து வேறு சேர்ந்து கொள்ள அதற்கென்று கருத்து யுத்தம் நடத்தி பார்க்கும் வரையில் மட்டுமே இன்று நாம் முன்னேறி இருக்கிறோம், சிலர் வலுக்கட்டாயாமாகவேனும் சில மூட நம்பிக்கைகளை அறவே ஒதுக்கித் தள்ளத் தான் பார்க்கிறார்கள், அவர்களின் பிரயத்தனம் விழலுக்கு இறைத்த நீராய் வீட்டிலுள்ள மனைவி, மக்கள், மற்றுமுள்ள இன்னோரன்ன சொந்த பந்தங்களால் மீறப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது .

கடந்த மாதம் நண்பர் ஒருவர் புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்தார். கிட்டத் தட்ட ஐம்பது லகரத்தை தொடக் கூடிய அளவில் நவீன வசதிகள் கொண்ட அல்ட்ரா மாடர்ன் ஃபிளாட். இரண்டே இரண்டு சயன அறைகள், சின்னதாக கைக்கு அடக்கமான ஒரு சமையலறை, கொஞ்சம் பரவாயில்லை எனும்படியான இடவசதியோடு இரண்டு குளியல் அறைகள், படுக்கை அறையை விட கொஞ்சமே கொஞ்சம் பெரிய அளவில் ஒரு ஹால் இவ்வளவு தான். சின்னதோ பெரியதோ சென்னையில் சொந்த வீடு என்பது சாமான்யர்களுக்குச் சாமான்ய காரியமில்லையே! அப்படிப் பார்த்தால் நண்பர் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம் என்றார்கள் அக்கம்பக்கத்தினர்.

இங்கே நாம் குறித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம் ‘அதிர்ஷ்டத்தின்’ மீதான நமது அர்த்தமற்ற நம்பிக்கைகள். நண்பரது விஷயத்தில் அவர் வீடு வாங்கியது அவரது கடின உழைப்பின் பலன் என்று தானே கூற வேண்டும். அதை விடுத்து... எல்லாம் அவரது அதிர்ஷ்டம் என்றால் அதுவும் ஒருவகையில் மூடநம்பிக்கையில் சேர்த்தியா இல்லையா? இதையெல்லாம் நாம் ஏன் எப்போதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை.

ஒரு வீட்டில் குடி இருக்கிறோம், விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏதேனும் அந்த வீட்டில் நாம் குடி இருக்கையில் நிகழ்ந்தால் அது மனிதச் செயல் அல்லவென்றே நம்பத் தொடங்குகிறோம். உடனே வீடு ராசி இல்லை... வாஸ்து சரி இல்லை... இதெல்லாம் தான் அதற்குக் காரணம் என்று சொல்லிக் கொள்கிறோம். எனில், அப்படியா? அது தான் விரும்பத்தகாத காரியங்கள் நடப்பதற்கான காரணமா?

வீடென்பது வாய் பேசாப்பொருள்... என்னதான் உயிர்ப்புடன் இருப்பதாக நாம் நம்பினாலும் மனிதர்கள் இருக்கும் வரை மட்டுமே அதற்கு உயிர்ப்பு உண்டே தவிர, யாருமற்றுக் கைவிடப்படுகையில் அவை வெறும் ஜடப்பொருட்களே! சொல்லப் போனால் வீட்டைக் குறித்து நாம் தான் நமது ஞாபகங்களை வளர்த்துக் கொண்டு என் வீடு... என் தோட்டம்... என் சமையல் அறை, என் படுக்கை அறை என்றெல்லாம் பேசிப்பேசி மாய்ந்து போகிறோமே தவிர; வீடு எப்போதேனும் பேசி இருக்கக் கூடுமோ? ‘என்னுள் குடி இருக்கும் மனிதர்களை எனக்குப் பிடித்தம் இல்லை, இதோ இன்று அவர்கள் பயணம் செய்கையில் வண்டியில் இருந்து அவர்களைப் பிடித்து கீழே தள்ளி விடப் போகிறேன், அதில் தப்பி விட்டானா, சரி அடுத்த இலக்கு அவர்களது மகனோ மகளோ பள்ளி இறுதி தேர்வு எழுதப் போகிறார்களா நல்ல சான்ஸ் அவர்களை என் ராசியைக் கொண்டு ஃபெயில் ஆக்குகிறேன் பார்!’ என்று வீடு சங்கல்பம் ஏதும் செய்து கொள்ளக் கூடுமா?!

இந்த ராசி சென்டிமென்ட் மனிதர்களின் பிரத்யேகக் கண்டுபிடிப்பேயன்றி வீடென்ன செய்யக் கூடும்?! புரியத்தான் இல்லை .

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்ணேறு (திருஷ்டி) கழிக்கிறோம் என்று காய்ந்த மிளகாய் வற்றல்களை அடுப்பிலிட்டு மொத்தக்குடும்பத்தினரையும் மூக்கில் கார நெடியேற்று இருமச் செய்து தெருமுக்குகள் தோறும் கொட்டி வைக்கிறோம். அல்லது அமாவாசை... பௌர்ணமிகளில் மொத்தமாக திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பது எனத் தொடங்கி எல்லாக் கடை வாசல்களிலும் பூசணிக்காய்களை பலி கொடுக்கிறோம். அகஸ்மாத்தாக வாகனஓட்டிகள் யாரேனும் கவனிக்காமல் அதன் மேல் தங்கள் இருசக்கர வாகனங்களை ஏற்றித் தொலைத்தால் அவர்களது மண்டைகளும் தான் தான் சில நேரங்களில் பலி பொருட்களாகின்றன. இதற்கென்ன சொல்ல? ஒருவருக்கு நன்மை தரக்கூடும் எனும் நம்பிக்கையில் செய்யப்படும் நமது சடங்கு சம்பிரதாயங்கள் கடைசியில் அடுத்தவருக்கு கெடுதல் இழைப்பதில் முடிவதைப் பற்றி நாம் ஏன் யோசிப்பதே இல்லை.

மற்றொரு உதாரண சம்பவத்தைப் பாருங்கள், ஒரு மாமி தன் பெண்ணின் திருமணத்தை முன்னிட்டு தன் வீட்டை ஒட்டி இருந்த அவரது காலி மனையை விற்று விட்டார், அதை விலைக்கு வாங்கியவர் அங்கே அடுக்கு மாடி வீடு கட்டி வாடகைக்கு விட்டு நல்ல வருமானம் பார்க்க ஆரம்பித்தார், அப்போது மாமிக்கு ஏற்பட்ட மன வருத்தத்தை சொல்லி மாளாது, இதற்குள் எந்த கடமைக்காக மனையை விற்றாரோ அந்தப் பெண்ணும் கணவன் சரியில்லை என்று வாழவெட்டியாக பிறந்தகம் வந்து விடவே நிலைமை... மாமியின் வயிற்றெரிச்சலை சொல்லில் விளக்கி விட இயலாமல் ஆனது.

தன் கண்முன்னே தனது காலி மனை அடுக்குமாடி வீடாக மாறி அங்கே கலகலவென்று மனிதர்கள் புழங்குவதைக் கண்டு மாமி புழுங்கித் தவித்தார்... ஐயோ இடம் போச்சே... போச்சே என்று மாமி இப்படிப் புலம்புவதைக் காதால் கேட்ட சிலர் தங்களுக்குத் தெரிந்த கதைகளை இட்டுக் கட்ட சமயம் பார்த்தனர்.

காக்காய் உட்காரப் பனம் பழம் விழுந்த கதை போல, புதிதாகக் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீட்டில் குடி இருந்த ஒரு குடித்தனக்காரருக்கு எதிர்பாராமல் தொழிலில் நஷ்டம் வர அவர் தொழிலை ஏறக்கட்டி விட்டு விற்றது போக மிச்சம் மீதி இருந்த பணத்தில் எளிமையாக ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு வாடகை வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்.

அடுத்து அந்த வீட்டுக்கு குடி வந்த குடும்பத்தில், வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் எண்பது வயதிலும் ஆரோக்கியமாக இருந்தவர் இந்த வீட்டுக்கு வந்ததும் சில மாதங்களில் உடல் நலக் குறைவால் இறந்தார். இதையும் முன்னதையும் சம்பந்தப்படுத்திப் பேச நல்ல சந்தர்ப்பம் அமையவே பேசும் நாக்குகள் வேலையை ஆரம்பித்தன.

முதலில் அந்த வீடு ‘ராசி இல்லாத வீடு’ ஆனது.

‘மாமி வயித்தெரிச்சல் தான் அங்க குடி இருக்கறவங்களை இந்தப் பாடுபடுத்துது.’

‘வேற வீடே இல்லையா என்ன?!’

‘இந்த வீட்டுக்குப் போய் குடி போகனுமா?!’

‘அதென்னவோ முந்தியெல்லாம் காட இருந்த இடம் தானே இதெல்லாம்! அங்க காத்து கருப்பு நடமாட்டம் இருந்துச்சோ என்னவோ? இல்லனா குடி இருக்கறவங்களை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தக் கூடுமா? என்னவோ இருக்கு அந்த இடத்துல?!’

‘அந்த இடத்தை வித்துத்தான் மாமி தம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சா... என்ன ஆச்சு சுவத்துல அடிச்சா பந்தாட்டம் மறு மாசமே பொண்ணு திரும்பி வந்துட்டா... என்னமோ இருக்குடீ அங்க...

அம்புட்டுத் தான்... கதை முடிஞ்சது. வீடு ராசி இல்லாத வீடே தான் என அழுத்தமாக முத்திரை குத்தப்பட்டு விட்டது. .

இதில் குறிப்பிடத் தகுந்த சங்கதி ஒன்றை கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும், மனையை விற்ற மாமிக்கு விற்றதில் ஒன்றும் நஷ்டம் இல்லை, நல்ல விலைக்கு விற்றுத்தான் பணம் வாங்கிக் கொண்டார். விலைக்கு வாங்கியவருக்கும் நஷ்டமே இல்லை. கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டு நல்ல லாபம் பார்க்கிறார் அவரும். குடி இருப்பவர்களை மட்டும் வீட்டு ராசி பாடாய்ப் படுத்துகிறதாம்.
‘என்னய்யா கொடுமை இதென்றால்?!’

‘கொடுத்தவங்களும் வாங்கினவங்களும் அந்த இடத்துல குடி இருக்கலை இல்ல? அந்த இடத்தை அனுபவிக்கிறவங்களுக்குத் தானே அதோட பலன். அப்படிப் பார்த்தா குடி இருக்கிறவங்களைத் தானேப்பா பாதிக்கும்!’

இதைப் படிப்பவர்கள் யாரேனும்... இப்போதேனும் சொல்லுங்கள் மூடநம்பிக்கை... மூட நம்பிக்கை என்கிறோமே அதன் எல்லை தான் எது?!’
திருப்பதியில் பக்தர்கள் அவதி

Added : ஜன 06, 2018 04:44


திருப்பதி:தமிழகத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதியிலிருந்தும் தமிழக அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அதனால், தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்ய முடியாமல், பக்தர்கள் திருப்பதி பேருந்து நிலையத்தில், பல மணி நேரம் காத்திருந்தனர். 


திருப்பதியிலிருந்து, ஆந்திர, ஆர்.டி.சி., பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால், அதில் மட்டுமே, பக்தர்கள் பயணம் செய்கின்றனர்.
முதுகலை மருத்துவம்: நாளை 'நீட்' தேர்வு : தயார் நிலையில் மையங்கள்

Added : ஜன 06, 2018 04:48


முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நாளை நடக்க உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள இளங்கலை, முதுகலை மருத்துவ இடங்கள், 'நீட்' தகுதி தேர்வு மூலம், ஒதுக்கப்படுகின்றன.


தேசிய அளவில், மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுகள், தேசிய தேர்வு வாரியம் சார்பில், நடத்தப்படுகின்றன.


இந்தாண்டு முதுகலை மருத்துவ இடங்களுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப வினியோகம், கடந்தாண்டு அக்., 31 முதல், நவ., 27 வரை நடந்தது.
மாணவர்கள் 'ஆன்லைன்' முறையில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.


இந்நிலையில், இதற்கான தேர்வு, நாளை நாடு முழுவதும் நடக்கிறது. இம்மாத இறுதிக்குள்,
முடிவுகள் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


நாடு முழுவதும், 129 மையங்களில் நாளை தேர்வுகள், நடத்தப்பட உள்ளன. இத்தேர்வில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.


தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய ஆறு நகரங்களில் தேர்வுகள் நடக்கின்றன.


தேர்வு மையங்களுக்குள்அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், தேர்வர்களுக்கான அனைத்து
வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -
 அரசு,பஸ்,ஓட்டிய,அந்தியூர்,MLA,எம்.எல்.ஏ.,ராஜாகிருஷ்ணன்

 அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ.,

பவானி : போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்கால், டிரைவர் இல்லாததால், அந்தியூரில் இருந்து பவானிக்கு, அரசு பஸ்ஸை, எம்.எல்.ஏ., ஓட்டினார்.

அரசு போக்குவரத்து தொழிலாளர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு பஸ்கள், டிரைவர், கண்டக்டர் இல்லாமல், பணிமனையில் முடங்கியுள்ளன. பல இடங்களில் தற்காலிக ஊழியர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர்,அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன், நேற்று அரசு பஸ்சை இயக்கி ஆச்சர்யப்படுத்தினார். அந்தியூர் பணிமனைக்கு உட்பட்ட அரசு பஸ்சை, அந்தியூரில் இருந்து பவானிக்கு, நேற்று மதியம் இயக்கினார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ., கூறுகையில்,''என்னிடம், 'ஹெவி லைசென்ஸ்' உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் காட்டி, அனுமதி பெற்றே, அந்தியூரில் இருந்து பவானிக்கு பஸ் ஓட்டி வந்தேன். பஸ்சில், 50 பேர் இறங்கி, ஏறினர்,'' என்றார்.

எம்.எல்.ஏ., அரசு பஸ் ஓட்டிச் செல்லும் தகவல் பரவியது. இதனால், தொ.மு.ச.,வினர், அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த, எம்.எல்.ஏ., பஸ்சை தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.
புதுமை!'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரயில்வே..
பயணியருக்கு முழு தொகை திரும்ப கிடைக்க வாய்ப்பு

புதுடில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவில், 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யில், 'மொபைல் ஆப்' மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியரில், அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு, டிக்கெட் கட்டணத்தில், 100 சதவீதம் திரும்ப தரும் திட்டத்தை, ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.





கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, 2016, நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டன.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், டிஜிட்டல் பண பரிவர்த்தனை கணிசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 'பாரத் இன்டர்பேஸ் பார் மணி' எனப்படும், 'பீம்' மற்றும், 'யுனிபைடு பேமென்ட் இன்டர்பேஸ்' எனப்படும், 'யு.பி.ஐ.,' மொபைல் ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

தனியார், 'பேமென்ட் வாலட்'டுகளை விட, மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்த ஆப்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதால், மக்கள் இந்த ஆப்களை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவன இணையதளம் மூலம், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் போது, இந்த ஆப்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்வோரை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இது குறித்து, ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: ரயில் டிக்கெட் முன்பதிவில்,

டிஜிட்டல் பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை மேலும் அதிகரிக்க, ரயில்வே அமைச்சகம் சில திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பீம் மற்றும் யு.பி.ஐ., ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியருக்கு, அதிர்ஷ்ட பரிசு வழங்கும் திட்டம், சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறையில், பண பரிவர்த்தனை செய்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணியரில், ஒவ்வொரு மாதமும், குலுக்கல் முறையில், ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் முன்பதிவு செய்த தொகை முழுவதும், திருப்பித் தரப்படும். அதாவது, அதிர்ஷ்டசாலிகள் ஐந்து பேருக்கு, 100 சதவீத டிக்கெட் தொகை பரிசாக கிடைக்கும்.

தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு, அவர்களின் மொபைல் எண் மற்றும் இ - மெயில் முகவரியில், தகவல் தெரிவிக்கப்படும். வரும் மார்ச் வரை சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பொதுமக்கள் வரவேற்பை பொறுத்து, மேலும் நீட்டிக்கப்படும். இது போன்ற மேலும் சில சிறப்பு திட்டங்களை செயல்படுத்தவும், ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

முக்கிய ரயில்களின் நேர மாற்றம், கால தாமதமாக வரும் ரயில்கள் பற்றிய அறிவிப்பு உள்ளிட்டவை குறித்து, பயணியரின் மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது, அனைத்து ரயில் சேவைகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்கள் வரவேற்பு:

மத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்படும் பீம் மற்றும் யு.பி.ஐ., மொபைல் ஆப்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்துள்ளது. 2017 நவம்பரில், யு.பி.ஐ., ஆப்பை பயன்படுத்தி, 10.5 கோடி பரிவர்த்தனைகள் நடந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில், இந்த எண்ணிக்கை, 14 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆப்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

  கூடுதல் வருவாய் :

ரயில் டிக்கெட் புக்கிங்கில் அமல்படுத்தப்பட்ட, 'பிளக்சி பேர்' திட்டத்தால், ரயில்வேக்கு, 671 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்து, ரயில்வே இணையமைச்சர் ராஜன் கொஹைன், லோக்சபாவில் கூறியதாவது: ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட ரயில்களில், 2016 செப்டம்பரில், பிளக்சி பேர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில்களில், ஒவ்வொரு, 10 சதவீத படுக்கை வசதி இருக்கைகள் காலியானதும், 10 முதல், 50 சதவீதம் வரை, அடிப்படை கட்டணம் உயரும். அந்த அடிப்படையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 2017 நவம்பரில், ரயில்வேக்கு, 671 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ரயில் நிலையங்கள் மேம்பாடு:

'பயணியர் எண்ணிக்கை, வருவாய் அடிப்படையில், நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், ராஜ்யசபாவில் கூறியதாவது: பயணியர் எண்ணிக்கை, வருவாய் மற்றும் மேலும் பல அம்சங்களின் அடிப்படையில், பல ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். தேவைக்கேற்ப ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும். பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில், ரயில்வே அமைச்சகம் உறுதியாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 



ரூ.143 லட்சம் கோடி!

நாட்டின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நவ., 2016ல், 91 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட நிலையில், அக்., 2017ல், இந்த எண்ணிக்கை, 153 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 143 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

-அல்போன்ஸ், மத்திய இணையமைச்சர், பா.ஜ.,
708 அரங்குகள் அமைப்பு: சென்னை புத்தக கண்காட்சி 10-ந்தேதி தொடக்கம்


 
41-வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 ஆயிரம் புதிய தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெறுகின்றன. 
 
சென்னை, 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) தலைவர் எஸ். வைரவன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாசலம், பொருளாளர் டி.எஸ்.சீனிவாசன், துணை தலைவர்கள் பி.மயிலவேலன், ஏ.ஆர்.சிவராமன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாச்சலம் ஆகியோர் கூட்டாக சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

வாசகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 41-வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற 10-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. இதற்காக சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 708 புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டி மீடியா 22, பொது அரங்குகள் 24 அடங்கும்.

376 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் 236 தமிழ் பதிப்பாளர்களும், 102 ஆங்கில பதிப்பாளர்களும், 14 மல்டி மீடியா பதிப்பாளர்களும், 24 பொது பதிப்பாளர்களும் அடங்குவர்.

வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கு தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் தலைப்பிலான புதிய புத்தகங்கள் இந்த ஆண்டு கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

அமைச்சர் செங்கோட்டையன்

புத்தக கண்காட்சி தொடக்க விழா 10-ந்தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு பபாசியின் புரவலரும், தொழில் அதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்குகிறார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கிவைக்கிறார். மேலும் சிறந்த பதிப்பாளர், விற்பனையாளர், எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.

திருவள்ளுவர் சிலை திறப்பு

புத்தக கண்காட்சியை பிரபலப்படுத்தும் வகையில் 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி புத்தக கண்காட்சி நடைபெறும் அரங்கில் 8-ந்தேதி நடக்கிறது. வாசகர்களை கவரும் வண்ணம் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை புத்தக கண்காட்சி வளாகத்தில் நிறுவப்பட உள்ளது.

சிலை திறப்பு விழா 11-ந்தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முனைவர் கோ.விஜயராகவன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

பெண்களை போற்றும் விதமாக 12-ந்தேதி பெண்கள் தினமாக புத்தக கண்காட்சியில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெ.இறையன்பு, எம்.ராஜாராம், என்.சுப்பையன், ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.திருநாவுக்கரசு, பேச்சாளர்கள் பழ.கருப்பையா, கு.ஞான சம்பந்தன், சுகி சிவம் பாரதி பாஸ்கர், திரைப்பட நடிகர் சமுத்திரகனி உள்பட பல்வேறு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

புத்தக கண்காட்சி நிறைவு விழா 22-ந் தேதி (திங்கட் கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவுக்கு, மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் தலைமை தாங்குகிறார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி பேசுகிறார். எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனர் எல்.மனோகரன் வாழ்த்துரை வழங்குகிறார்.

நுழைவு கட்டணம் ரூ.10

41-வது புத்தக கண்காட்சி மாணவர்களை மையப்படுத்தி நடக்கிறது. அதன்படி 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச அனுமதி நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இலவசம். 12 வயதை கடந்தவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி செயல்படும். கண்காட்சிக்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலவசமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனை, ஆதார் கார்டு சேவை போன்றவற்றிற்கும் தனியாக அரங்குகள் உள்ளன.

கார்கள் நிறுத்துவதற்கு ரூ.30-ம், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு 10 லட்சம் பேர் வந்தனர். இந்த ஆண்டு 15 லட்சம் பேர் வருவார்கள் என்று நம்புகிறோம். இதன் மூலம் ரூ.13 கோடி வருவாய் கிடைக் கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மெட்ரோ ரெயில் பணி

சென்னை அமைந்தகரையில் நடந்து வந்த ‘மெட்ரோ ரெயில்’ பணியால் கடந்த சில ஆண்டுகளாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் சென்னை புத்தக கண்காட்சி நடந்து வந்தது. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்ததையடுத்து சென்னை புத்தக கண்காட்சி மீண்டும் செயின்ட் ஜார்ஜ் ஆங்கில இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 தேசிய மருத்துவ ஆணையம்
 
 
1933–ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது இந்திய மருத்துவ கவுன்சில். மருத்துவக்கல்வி, மருத்துவசேவை, மருத்துவர்களை நெறிப்படுத்துதல் போன்றவற்றை தனது தலையாய பணிகளுக்கான நோக்கமாகக் கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் இயங்கி வருகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் பற்றி சமீப காலங்களாக நிறைய புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் என்னும் அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் மக்களவையில் மத்திய அரசாங்கம் தாக்கல் செய்தது.

இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகும். ஆனால், 25 பேர்கள் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் பெரும்பாலும் மத்திய அரசாங்கம் நியமிக்கும் தேர்வுக்குழுவால் நியமனம் பெறுபவர்கள் ஆவார்கள். ஆக, தேசிய மருத்துவ ஆணையம் சுயேச்சையாக இயங்காது. மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்கும் என்று ஒரு பெரிய குறை கூறப்படுகிறது. இதில் மருத்துவர்கள் பெரும்குறையாக சொல்வது ‘ஆயுஷ்’ என்று கூறப்படும் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படித்த மருத்துவர்கள் ‘பிரிட்ஜ்கோர்ஸ்’ என்று கூறப்படும் இணைப்பு படிப்பை சிறிதுகாலம் படித்தால் அவர்களும் எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் டாக்டர்கள் போல, அலோபதி மருந்தை எழுதிக்கொடுப்பதற்கு தகுதிபடைத்தவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்று இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற மருத்துவங்கள் அலோபதி மருத்துவத்திற்கு சளைத்தது அல்ல என்று இந்த மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் கருத்தாகும். ஆனால், அவர்களையே அலோபதி மருத்துவத்தையும் நீங்கள் செய்யலாம் என்று கூறினால், இந்த மருத்துவத்தின் தகுதியும், மேன்மையும் பற்றி அவர்களுக்கே சந்தேகம் இருக்கிறதா? என்பது அலோபதி மருத்துவர்களின் கேள்வியாக இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இந்த மசோதாவில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 40 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டில் 60 சதவீதமும் நிர்ணயிக்கும் வகையில், 40 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை மட்டும் அரசே நிர்ணயிக்கும் என்று கூறியுள்ளது. மீதி 60 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை கல்லூரிகளே நிர்ணயித்தால் மருத்துவக் கல்விகட்டணம் உயரும். ஏழை மாணவர்களால் இவ்வளவு உயர்ந்த கட்டணத்தில் படிக்கமுடியாது என்பது மற்றொரு கருத்தாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், 4½ ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படிப்பை படித்து தேர்வு எழுதி தொடர்ந்து ஒரு ஆண்டு ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வெளியே வரும் டாக்டர்கள், தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் மற்றொரு தேர்வை எழுதியபிறகுதான் டாக்டர் தொழில் செய்யமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இப்போது இந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். பாராளுமன்ற நிலைக்குழு டாக்டர்கள் கோரிக்கைகள் உள்பட அனைத்து பிரச்சினைகளையும் ஆழமாக ஆராய்ந்து விரைவில் அறிக்கை தரவேண்டும். அதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் விரிவாக விவாதித்து தகுந்த திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதுதான் அனைவருடைய நம்பிக்கையாக இருக்கிறது.
பொங்கல் பரிசு தொகுப்பை எடப்பாடி பழனிசாமி வழங்கினார் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்

பொங்கல் பரிசு தொகுப்பை எடப்பாடி பழனிசாமி வழங்கினார் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்
 
பொங்கல் பரிசு தொகுப்பை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 
 
 
சென்னை,

பொங்கல் பரிசு தொகுப்பை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இன்று (சனிக்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக ரூ.210 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகிய 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடிநீளக் கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 7 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கிவைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக்கொண்டார்.

சென்னையில் முதல்- அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் சனிக்கிழமை (இன்று) முதல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்களால் தொடங்கி வைக்கப்பட்டு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கார்டுகளை பிரித்து 3 நாட்கள் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. எந்த நாளில் யார்? யார்? பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என்ற விவரம் ரேஷன் கடைகளில் ஓட்டப்பட்டிருக்கும்.

41st book fair to begin on January 10toi | Updated: Jan 6, 2018, 00:41 IST

Chennai: The 41st Chennai Book Fair is set to be held at St George Anglo-Indian School on Poonamallee High Road for 13 days from January 10 to 22. School education minister S A Sengottaiyan will inaugurate the fair, which is being organised by the Booksellers & Publishers' Association of South India (BAPASI).

More than 700 stalls, including 428 Tamil book stalls, 234 English book stalls and 22 multimedia stalls, will be part of the fair. Books on various subjects, including environment, architecture, food, health, cinema and music, will be on exhibition for sale. Separate stalls have been set up to sell Braille books for the blind.

Participants of the fair include Sahitya Akademi, University of Madras, International Institute of Tamil Studies, National Book Trust, Tamil Nadu textbook corporation, Thanjavur Saraswathi Mahal Library and Gandhian Literature Society.

BAPASI president S Vairavan said, "Ahead of the book fair, city schoolchildren will conduct a musical performance at the venue on Monday." The musical event will be attended by publishers, including Biplob Bhaktha of Scholastic India and journalist A Kumaresan.

As an added attraction, a massive Thiruvalluvar statue at the fair will be inaugurated by minister for Tamil official language and Tamil culture K Pandiarajan.

Art and cultural competition will be conducted for schoolchildren. Elocution contest will be held for school and college students. Short films made by budding filmmakers will get a special screening at the venue. The screenings are open for the public and will be attended by eminent film directors and actors.



Friday, January 5, 2018


Madras HC asks striking transport employees in TN to go back to work

Sureshkumar | TNN | Updated: Jan 5, 2018, 16:17 IST

Highlights

The high court asked the striking employees to go back to work or face consequences including termination and contempt of court.

Transport workers announced the strike on Thursday night after talks with the Tamil Nadu government on salary revision failed.

The strike affected commuters across the state on Friday.



Buses which were parked in Chennai Mofussil Bus Terminus after transport employees began an indefinite strike ... Read More

CHENNAI: "Go back to work or face consequences including termination and contempt of court," said the Madras high court to the striking workers of transport corporations in Tamil Nadu.
Noting that the transport workers cannot indulge in such flash strike without any prior intimation making the public suffer, the first bench headed by Chief Justice Indira Banerjee passed the interim order on Friday.

The court further said it is the duty of the state government to ensure and protect the rights of its citizens during such circumstances.

The issue pertains to the strike announced by drivers and conductors of various state transport corporations as wage revision talks with transport minister failed on Thursday night.

Claiming that the strike has left scores of commuters stranded at bus stops in various parts of the state since Thursday evening, advocate Vijayendran moved a PIL on behalf of Varaaki seeking to direct the state government to convene a meeting to negotiate with the striking workers and find a solution to the issue.

When the plea came for hearing, advocate general Vijay Narayan submitted that 32 unions had already signed the settlement proposed by the government and only 14 are indulging in strike.
Fodder scam: Lalu Prasad cites illness and old age to seek leniency; sentencing tomorrow

PTI | Updated: Jan 5, 2018, 21:24 IST

Highlights

Court had convicted Lalu Prasad for offences of cheating with criminal conspiracy
Lalu Prasad can be sentenced to a minimum jail term of one year and maximum of seven years
Lalu Prasad would be able to apply for bail immediately at the lower court itself if the quantum of sentence happens to be less than three years
  
)

 RANCHI: Citing illness and old age, RJD chief Lalu Prasad, convicted in a fodder scam case+ along with 10 others, on Friday sought leniency from the CBI court which will pronounce the quantum of punishment on Saturday.

Lalu Prasad appeared before the court of CBI special judge Shiv Pal Singh for the sentencing hearing through videoconferencing from Birsa Munda central jail and in a written plea sought leniency due to his illness and old age, his counsel Chittaranjan Prasad said. The 69-year-old RJD leader is lodged in the central jail since his conviction on December 23+ .

"The judge said he would pronounce the judgement at 2pm tomorrow," Chittaranjan Prasad told reporters after emerging from the videoconferencing hall here.

The court had convicted Lalu Prasad for offences of cheating with criminal conspiracy under the Indian Penal Code (IPC) and the Prevention of Corruption Act.

Under the sections, Lalu Prasad can be sentenced to a minimum jail term of one year and maximum of seven years, according to Chittaranjan Prasad.

According to legal experts, Lalu Prasad would be able to apply for bail immediately at the lower court itself if the quantum of sentence happens to be less than three years.

The court concluded arguments on the quantum of punishment against Lalu Prasad and 10 others in connection with the withdrawal of Rs 89.27 lakh from Deogarh Treasury between 1990 and 1994 when he was the chief minister of Bihar.

Earlier, he was awarded five years imprisonment in 2013 in a case relating to fraudulent withdrawal of Rs 33.61 crore from the Chaibasa treasury.

The RJD supremo was later released on bail granted by the Supreme Court.

Lalu faces another three fodder scam cases for illegal withdrawal of Rs 3.97 crore from the Dumka Treasury, Rs 36 crore from the Chaibasa Treasury and Rs 184 crore from the Doranda treasury.

Besides Lalu Prasad, the court today heard arguments on the punishment of RJD leader RK Rana, former IAS officers Phoolchand Singh, Mahesh Prasad, former government official Subir Bhattacharya, suppliers/transporters Tripurari Mohan Prasad, Sushil Kumar Sinha, Sunil Kumar Sinha, Raja Ram Joshi, Sanjay Agarwal and Sunil Gandhi.

The court had heard pre-sentencing arguments in alphabetical order yesterday of former IAS officer Beck Julius, Gopinath Das, RJD leader Jagdish Sharma, transporter/suppliers Jyoti Kumar Jha and Krishna Kumar Prasad.

It had deferred announcing the punishment against Lalu Prasad and others for the second consecutive day on Thursday.

The court had on December 23 convicted all the 16 accused in the fodder scam while acquitting six others, including former Bihar chief minister Jagannath Mishra.

In 1996, the Patna High Court had ordered an inquiry into the fodder scam cases and a chargesheet in the Deogarh treasury case was filed against 38 people on October 27, 1997. Eleven of them died and three turned approvers while two other accused confessed and were convicted in 2006-07, a CBI official said.

On September 30, 2013, Yadav, Jagannath Mishra and several others had been convicted in another case pertaining to illegal withdrawal of Rs 37.7 crore from Chaibasa Treasury in the early 1990s. The conviction on December 23 last is the second in the scam.

RJD leaders, meanwhile, asserted that none from the party made telephone calls to the special CBI judge at Ranchi as claimed by him but felt political opponents may have done so in the guise of RJD supporters.

The assertions were made by Shivanand Tiwary and senior party leader Jagdanand Singh.
Aadhaar helped identify 80,000 'ghost' teachers in higher education institutions 

Manash Pratim Gohain | TNN | Updated: Jan 5, 2018, 20:59 IST

Highlights

HRD ministry has identified around 80,000 “ghost” teachers in various colleges & universities across India after the introduction of Aadhaar.

The ministry, however, clarified that none of these teachers are from any central universities.
The ministry has asked all varsities to seek Aadhaar number from all employees and students to

ensure that there is no duplication.File photo used for representation only NEW DELHI: Mandatory Aadhaar disclosure during the All India Survey on Higher Education 2016-17 (AISHE) revealed that there are over 80,000 teachers who are faculty members of three or more higher education institutions in the country. This was disclosed by the Human Resource Development minister Prakash Javadekar, at the release of the final AISHE 2016-17 report on Friday.
The HRD ministry has identified around 80,000 "ghost" teachers in various colleges and universities across the country after the introduction of Aadhaar. So far, 85% of the teachers have given their Aadhaar numbers, and the ministry believes that the number would increase when all the teachers comply.

"There are certain 'ghost' teachers who use proxy methods and are apparently teaching at multiple places as full-time employees. After the introduction of Aadhaar, 80,000 such teachers have been identified and action will be taken against them," Javadekar said.

The minister, however, clarified that none of these teachers are from any central universities. "The ghost teachers have not been identified in any central universities but in some state varsities and private ones," he said.

The HRD ministry has asked all varsities to seek Aadhaar number from all employees and students to ensure that there is no duplication.

"Sharing Aadhaar number is like sharing your mobile number or Email ID. Sharing your mobile number doesn't mean the person you give it to can see your text messages. Aadhaar works the same way. It is protected," Javadekar said.

The report also highlighted the growth in the sector as the Gross Enrolment Ratio (GER) now stands at 25.5% as against 21.5%, five years ago. In last five years, the GER of the Muslims and other minority communities has been slow. From 4.15% GER of the Muslim youth (age group of 18-23 years) in 2012-13, it is just 4.90% in 2016-17. Similarly, the GER growth for other minority groups has been 0.33% in the same period.

The survey also indicates that in last five years, the student population of higher education between the age of 18 and 23 has increased by 35 lakh. While there are just 9.3% colleges exclusively for girls, there are 15 women exclusive universities across 10 states.




போடியில் ஒரு 'பிதாமகள்'


Published : 04 Jan 2018 10:26 IST

ஆர்.சௌந்தர்




நள்ளிரவில் சுடுகாட்டுக்குள் நடந்து செல்லவே தயக்கம் காட்டும் ஆண்கள் மத்தியில் எந்தவொரு சலனமும் இன்றி சுடுகாட்டிலேயே இரவு, பகலாக தங்கி சடலங்களுக்கு எரியூட்டும் வேலை செய்து வருகிறார் ஒரு பெண்.

தேனி மாவட்டம் போடி நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு மயானத்தில் வெட்டியான் வேலை செய்து வருகிறார் முருகேஸ்வரி. பெண் ஒருவர் வெட்டியான் வேலை செய்து உள்ளூரில் இருக்கும் பலருக்கும் தெரியாது. கடந்த 5 ஆண்டுகளில் 1,890 சடலங்களை தொட்டு தூக்கி எரியூட்டியுள்ளார். 500-க்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்து ஈமகாரியங்களைச் செய்திருக்கிறார்.

போடியில் இருந்து 2 கிமீ தூரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்துள்ள எரிவாயு மயானத்துக்கு முருகேஸ்வரியை சந்திக்க நாம் சென்றிருந்தபோது எரியூட்ட ஒரு சடலம் கொண்டு வரப்பட்டிருந்தது. சடலத்தின் நெருங்கிய உறவினர்கள் அழுது கொண்டிருக்க வெளியூர் உறவினர்கள் வருவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அவரிடம் பேசினோம்.

“சார் எனது சொந்த ஊர் மதுரை ஆனையூர். எனது தந்தை சலவை தொழில் செய்து வந்தார். என் கூட பிறந்தது ஒரு அக்காள் மட்டும்தான் அவரும் மனவளர்ச்சி குன்றிவர். குடும்பத்தின் ஏழ்மை காரணமாக நான் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். 2003-ல் போடியைச் சேர்ந்த கருப்பையாவை திருமணம் செய்து கொண்டேன். எங்களது தொழில் சலவை செய்து கொடுப்பது என்பதால் நானும் எனது கணவரும் ஊருக்கு வெளியில் உள்ள கொட்டக்குடி ஆற்றங்கரை ஓரத்தில் தற்போது உள்ள சுடுகாட்டின் அருகில் குடிசை போட்டு தங்கியிருந்தோம். ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் அழுக்கு துணிகளை வாங்கி வைத்து அதனை துவைத்து காயப்போட்டு மீண்டும் ஊருக்குள் சென்று கொடுத்து விட்டு இரவில் திரும்புவோம்.

பொதுமக்கள் கொடுக்கும் சொற்ப பணத்தில் எங்களது வாழ்க்கை ஓடி கொண்டிருந்தது. எங்களுக்கு அடுத்தடுத்து 2 ஆண் குழந்தைகள் பிறந்தது. சொந்த வீடு எதுவும் இல்லாமல் தங்க இடவசதியும் இன்றி ஆற்றங்கரை ஓரத்தில் போட்டிருந்த குடிசையில் வெயில், மழை, பனி என்று அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு சலவைத் தொழில் செய்து வந்தோம். மாலை 6 மணிக்கு மேல் யாரும் ஆற்றங்கரை பகுதிக்கு வருவதில்லை.

முதலில் சுடுகாடு அருகே வசிப்பதற்கு சற்று தயக்கமாக இருந்தது. பின்னர் போக போக பயம் நீங்கி பழகிவிட்டது. வாசிங்மிஷின், அயன்பாக்ஸ் புழக்கத்துக்கு வந்தபிறகு சலவை வேலை கிடைக்கவில்லை. வறுமை தாண்டவமாடியது. எனது கணவருக்கு சலவை தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாது. குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுக்க முடியவில்லை. ரேசன் கார்டு இல்லாததால் இலவச அரிசியும் வாய்க்கவில்லை. பல நாட்கள் பட்டினிதான்.

அந்த நேரத்தில் 2012-ம் ஆண்டு சுடுகாட்டுக்குள் எரிவாயு மயானம் அமைக்கப்பட்டது. இதனை ஒப்பந்தம் எடுத்த பெரியார் சமத்துவ நிர்வாகிகளான ரகுநாகராஜனும் சுருளிராஜும் வெட்டியான் வேலைக்கு ஆட்கள் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது நானும் எனது கணவரும் வேலை கேட்டுச் சென்றோம். பல ஆண்டுகளாக சுடுகாடு அருகிலேயே வசிப்பதை அவர்கள் பார்த்துள்ளனர். இதனால் எதுவும் பேசாமல் எங்கள் இருவருக்கும் வெட்டியான் வேலை போட்டுக் கொடுத்தனர். மேலும் தகன மேடை அமைந்துள்ள கட்டிடத்தின் ஒட்டியுள்ள அறையில் தங்கி கொள்ளவும் அனுமதித்தனர்.

அதன்பிறகு குடிசையைக் காலி செய்து விட்டு கடந்த 5 ஆண்டுகளாக இந்த அறையைத்தான் வீடாக பயன்படுத்தி வருகிறோம். ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தபோது குடியிருப்பு முகவரியாக மயானம் என்று கூறியிருந்ததால் அதிர்ந்து போன அதிகாரிகள் முதலில் ரேசன் கார்டு தர மறுத்தனர். பின்னர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மயானம்தான் எங்களின் முகவரி எனத் தெரிந்த பிறகு ரேசன் கார்டு கொடுத்தனர்.

இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த போது எனது கணவருக்கு திடீர் என கண்பார்வை குறைந்தது. இதனையடுத்து நானே முழுவேலைகளையும் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். தீ வைத்துக் கொண்டவர்கள், தூக்கிட்டவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், விபத்தில் உயிரிழ்தோர் என பலதரப்பட்ட சடலங்கள் வரும். உறவினர்கள் விருப்பப்படி எரியூட்டவோ அல்லது புதைக்கவோ செய்வேன்.

சில நேரங்களில் ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு சடலங்கள் கொண்டு வரப்படும். அப்போது சாப்பிடக் கூட நேரமிருக்காது. சடலங்களுடன் வரும் உறவினர்கள் சிலர் குடிபோதையில் ‘நாங்கள் சுமந்து வந்த சடலத்தைத்தான் முதலில் எரியூட்ட வேண்டும்’ என தகராறு செய்வார்கள். அந்தநேரத்தில் அவர்களிடம் பொறுமையாக பேசி எனது வேலையைச் செய்வேன். தகராறு செய்தவர்கள் அஸ்தியை வாங்கிச் செல்ல வரும்போது என்னிடம் மன்னிப்பும் கேட்டதுண்டு.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என்று சடலத்துக்கு எந்த பெயரும் இல்லை. சலவை தொழில் செய்பவர்கள் யாரும் வெட்டியான் வேலை செய்வதில்லை. ஆனால் நான் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவதால் எனது வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் 1,890 சடலங்களுக்கு எரியூட்டியுள்ளேன். 500-க்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்துள்ளேன். என்று கூறிக்கொண்டிருந்தவ ரிடம், “முருகேஸ்வரி நேரமாகுது வந்து தேவையான ஈமகாரியங்களை செய்ங்க” என்று குரல் வர 1891-வது சடலத்துக்கு எரியூட்ட கிளம்பிச் சென்றார் இந்த பிதாமகள்.

சகல துறைகளிலும் ஆணுக்கு சமமாக இணைந்து நிற்கும் பெண்களின் எழுச்சி இப்போது மயானம் வரை நீண்டிருக்கிறது.
குறிப்புகள் பலவிதம்: சளியை விரட்டும் சின்ன வெங்காயம்

Published : 31 Dec 2017 11:37 IST
 
 


எந்தவகை கீரைப் பொறியல் செய்தாலும் வதக்கும்போது இரண்டு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்தால் ருசி அதிகமாவதுடன் பச்சை நிறமும் மாறாது.


பழுத்த, தோல் கறுத்த பழங்களை வீணாக்காமல் மசித்து கோதுமை மாவு, சர்க்கரை, சிறிதளவு சமையல் சோடா சேர்த்துத் தண்ணீர் விட்டு எண்ணெய்யில் போட்டுப் போண்டாவாகப் பொரித்தெடுத்துச் சாப்பிடலாம்.


கற்பூர டப்பாவில் பத்து மிளகுகளைப் போட்டுவைத்தால் கற்பூரம் காற்றில் கரையாது.
பாத்திரம் தேய்க்கும் சிங்க், வாஷ்பேசின், வீட்டின் மூலை முடுக்குகளில் குழந்தைகள் எடுக்காத வகையில் பாச்சை உருண்டைகளைப் போட்டுவைத்தால் கரப்பான் போன்ற பூச்சிகள் வராது.
டீத்தூளுடன் கொஞ்சம் ஏலக்காயைத் தட்டிப்போட்டுக் கலந்துவைத்தால் டீயின் மணம் தூக்கலாக இருக்கும்.


மார்கழி மாதம் கோலம் போடும்போது கலர் பவுடருடன் சலித்த மணலைக் கலந்து போட்டால் கோலம் எடுப்பாக இருக்கும்.


தினம் ஒரு சின்ன வெங்காயத்தைத் தோலுரித்துச் சாப்பிட்டுவந்தால் சளி பிடிக்காது.

-பிரேமா சிவசண்முகம், கிருஷ்ணகிரி.

வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்! 


கு.ஆனந்தராஜ் சொ.பாலசுப்ரமணியன்



மற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது போக்குவரத்து சங்கத்தினரின் நீண்டகால கோரிக்கையாகவுள்ளது. இக்கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில், நேற்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


முடிவில் 2.44 சதவிகித ஊதிய உயர்வு வழங்கும் அரசின் முடிவுக்கு, அண்ணா தொழிற்சங்கம் உள்பட பல சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்தன. ஆனால், சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்பட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. அதனால் இச்சங்கத்தினர் உடனடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அருகிலுள்ள பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் நேற்று இரவு தமிழகம் முழுக்க பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.



  இந்நிலையில், இரவு நேரங்களிலும் பரபரப்பாக காணப்படும் சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் தற்போது ஆள் நடமாற்றமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஒன்றிரண்டு புறநகர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வழக்கம்போல இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் இயக்கப்படாததால், வெளியூர் பயணிகள் பேருந்து நிலையத்துக்குள்ளேயே படுத்து உறங்கிக்கொண்டிருக்கின்றனர். சில வெளியூர் பயணிகள் திட்டமிட்டப்படி தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில போக்குவரத்துச் சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்ந்தால், பகல் நேரத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
‘சென்னை ஸ்கூல் பஸ் டிரைவர், ஹெலிகாப்டர் அதிபரானார்!’ - சினிமாவை மிஞ்சிய சதுரங்க வேட்டை

நமது நிருபர்


சென்னையில் நிலம் வாங்கித்தருவதாக 40 கோடி ரூபாய் மோசடி செய்தவரை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர். சாதாரண ஸ்கூல் பஸ் டிரைவராக இருந்தவர், போலீஸிடம் சிக்கும்போது சொந்தமாக ஹெலிகாப்டர், செயற்கைக்கோள் போன், வடமாநிலங்களில் கம்பெனி என வசதியுள்ள தொழிலதிபராக வலம் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர், வெங்கடரமணன். 57 வயதாகும் இவர், சில ஆண்டுகளுக்கு முன்புவரை அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஸ்கூல் ஒன்றில் பஸ் டிரைவராகப் பணியாற்றினார். இவரது மனைவி, அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். வெங்கடரமணனின் பெற்றோரும் ஆசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். வெங்கடரமணனுக்கு மூன்று குழந்தைகள்.

ஸ்கூல் பஸ் டிரைவர் வேலையோடு, ரியல் எஸ்டேட் தொழிலிலும் வெங்கடரமணன் கால்பதித்தார். அதில், வருமானம் அதிகரித்தது. அதனால், ஸ்கூல் பஸ் டிரைவர் வேலையை உதறித்தள்ளினார், முழுநேரம் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் அலுவலகம், சொகுசு கார்கள் என பந்தாவாக வலம் வந்தார்.

இந்தச் சமயத்தில், பிரதீப்குமார் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 ஏக்கர் நிலம் வாங்கித்தரும்படி வெங்கடரமணனை அணுகியுள்ளார். அதில், 1.70 கோடி ரூபாயை ஏமாற்றியதாக பிரதீப்குமார், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கே.ஆர்.வி. ப்ராபர்ட்டீஸ் சி.இ.ஓ குமார், சென்னையைச் சேர்ந்த கிரண் வர்கீஸ் தாமஸ் ஆகியோரும் வெங்கடரமணன் மீது மோசடிப் புகார் கொடுத்தனர். மூன்று புகார்கள் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸார் தேடுவதையறிந்த வெங்கடரமணன், வடமாநிலத்துக்குத் தப்பிஓடிவிட்டார். அவரது கூட்டாளிகள் முத்துநாராயணன், கமலேஷ், சஞ்சய் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், மூன்று ஆண்டுகளாக வெங்கடரமணன் வடமாநிலங்களில் தலைமறைவாகவே இருந்துவந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக் குண்டுபாய்ந்து பலியானார். இதனால், வடமாநிலங்களில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சென்னை போலீஸார் கூடுதல் கவனம்செலுத்திவருகின்றனர். வெங்கடரமணன், மஹாராஷ்டிராவில் தலைமறைவாக இருக்கும் தகவல், உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்குக் கிடைத்ததும் அங்கு செல்ல முடிவுசெய்தனர். உடனடியாக, சில நாள்களுக்கு முன்பு முத்துவேல்பாண்டி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், ஆனந்தபாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கமல்மோகன், யோகேஷ்வரன் மற்றும் போலீஸார் கஜேந்திரன், செந்தில்குமார் ஆகியோர் மஹாராஷ்டிராவுக்குச் சென்றனர். அங்கு வெங்கடரமணன், ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார் என்ற தகவல் கிடைத்ததும், அந்த இடத்துக்கு போலீஸார் சென்றனர்.



உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீஸார், வெங்கடரமணனைப் பொறிவைத்து மடக்கிப்பிடித்தனர். பிறகு, சென்னைக்கு அழைத்துவந்தனர். வெங்கடரமணன் மீது 40 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. அதில் முதல் குற்றவாளியான வெங்கடரமணனை, துரிதமாகச் செயல்பட்டு பிடித்துவந்துள்ளனர். அவர்களை சென்னை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “வெங்கடரமணன், சென்னையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தியபோது மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் பணியாற்றியுள்ளார். போலீஸில் வெங்கடரமணன் மீது நிலமோசடி புகார் கொடுக்கப்பட்டவுடன், வெங்கடரமணன் மஹாராஷ்ராவுக்குச் சென்றுள்ளார். அங்கு, அந்தப் பெண் உதவியுடன் கம்பெனியை நடத்திவந்துள்ளார். மேலும், மும்பையில் இந்திரா ஏர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஹெலிகாப்டரை வாடகைக்கு விட்டுள்ளார். இதற்காக, 6 கோடி ரூபாய் மதிப்பில் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். போலீஸ் தேடுவதையறிந்ததும் மும்பை, மஹாராஷ்டிரா என வடமாநிலங்களில் தலைமறைவாக வாழ்ந்துள்ளார். அதற்கு, ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியிருக்கிறார். பல சொகுசு கார்களும் அவரிடம் இருந்துள்ளன. தலைமறைவு வாழ்க்கையால் அந்த கார்களைச் சிலர் கைப்பற்றியுள்ளனர்.

போலீஸிடம் சிக்காமலிருக்க, செயற்கைக்கோள் போனை வெங்கடரமணன் பயன்படுத்திவந்துள்ளார். இதனால், அவரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. தற்போது, வெங்கடரமணன் குறித்த தகவல் கிடைத்ததும், அவர் மஹாராஷ்டிராவில் நடத்திவரும் நிறுவனத்துக்குச் சென்றோம். வெங்கடரமணனின் புகைப்படத்தை அங்கு காட்டியதும், அங்குள்ளவர்கள் அடையாளம் காட்டினர்.

வெங்கடரமணனிடம் போலீஸார் விசாரித்தபோது, நான் ஏமாற்றியதாக என் மீது புகார் கொடுத்தவர்களுக்குப் பணம் கொடுத்துவிடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள். தற்போது சென்னையில் கோடிக்கணக்கில் எனக்குச் சொத்துகள் இருக்கின்றன. அதைக்கூட புகார் கொடுத்தவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். வெங்கடரமணனைக் கைதுசெய்ய, அவர் பயன்படுத்திய செயற்கைக்கோள் போனை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். தொடர்ந்து, அவரது சொத்துகுறித்த விவரங்களைச் சேகரித்துவருகின்றனர்.

தலைமறைவாக இருந்த வெங்கடரமணன், போலீஸுக்கு பயந்து சில மாதங்களாக ஹெலிகாப்டரைப் பயன்படுத்தாமல் இருந்ததால், அது பழுதடைந்துள்ளது. மேலும், ஹெலிகாப்டரை இயக்கும் பைலட் ஒருவரை வெங்டரமணன் வேலைக்குச் சேர்த்துள்ளார். அவருக்கு மாதச் சம்பளம், இரண்டரை லட்சம் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது, அந்த பைலட் மத்திய அமைச்சர் ஒருவரின் தூரத்து உறவினர் என்று தெரிவித்துள்ளார். அதுதொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரித்துவருகின்றனர். நிலமோசடிப் புகாரில் சிக்கிய வெங்கடரமணனின் வாழ்க்கை, ‘சதுரங்க வேட்டை’ சினிமாவின் நிஜம் போல இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அதாவது, நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, பிளாட் போட்டு அதிக லாபத்தைப் பெறலாம் என்று, புகார் கொடுத்தவர்களிடம் வெங்கடரமணன் கூறியிருக்கிறார். மேலும், வாங்கிக்கொடுத்த இடத்தை வேறு நபருக்கு விற்கும்போது, குறைந்த விலைக்குக் கொடுத்துள்ளார். அதிலும் லாபத்தை வெங்கடரமணன் பார்த்துள்ளார். லட்சக்கணக்கில் மோசடிசெய்து, ஆடம்பரமாக அவர் வாழ்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
காலையில் கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம்.. மாலையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - திணறிய புதுக்கோட்டை பேருந்து நிலையம் 

பாலஜோதி.ரா


ம.அரவிந்த்



புதுக்கோட்டை நகர புதிய பேருந்து நிலையம் இரண்டு திடீர் விஷயங்களால் இன்று திணறியது. காலை ஒன்பது மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அனைத்துத் தரப்பினரும் பேருந்துநிலையத்தில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். கிட்டதட்ட ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வளவு பேரையும் கைதுசெய்து, அருகில் உள்ள ஆயுதப்படை விடுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்கவைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

இந்த பிரச்னை முடிந்து ஆறுமணி நேரம் கழித்து அடுத்தப் பிரச்னை ஆரம்பித்தது. ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து தமிழகமெங்கும் பேருந்துகள் இயங்கவில்லை. இதன் பாதிப்பு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உடனடியாக தெரிந்தது. பேச்சுவார்த்தையின் போக்கை உடனுக்குடன் தெரிந்துகொண்ட மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் வேலை நிறுத்தத்துக்கு தயாராக இருந்தனர்.

மாலை 6 மணிக்கு சென்னையிலிருந்து வந்த தகவலையடுத்து, மின்னல் வேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்தத் திடீர் வேலை நிறுத்தத்தால், புதுக்கோட்டைக்கு வந்த கிராம மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். பாஸ் எடுத்து அரசுப் பேருந்தை மட்டுமே நம்பி பயணிக்கும் பள்ளி மாணவ மாணவிகளும் வேலைக்குச் செல்லும் பெண்களும் ஆண்களும் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். இதனால் இரவு எட்டு மணி வரைநிரம்பி வழிந்த பயணிகளால் மீண்டும் பேருந்து நிலையம் திணறியது. புத்திசாலியான மாணவ மாணவிகள் அருகில் உள்ள டீக்கடைகளில் மொபைல் போன்வாங்கி, தங்கள் அப்பா, அம்மா, சகோதரர்களுக்கு போன் செய்து தகவல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திலேயே அவர்களது உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்துச் சென்றார்கள்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நான்குபேர்களை ஏற்றிக்கொண்டு விரைந்த அந்த மோட்டார் சைக்கிளை போக்குவரத்துக் காவலர்கள் கண்டும் காணாமல் இருந்ததோடு, 'கவனமா போங்கப்பா' என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்ததை இன்று பார்க்க முடிந்தது. அதே சமயம் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு எதிராக மக்கள் எரிச்சலுடன் முனுமுனுப்பதையும் கேட்க முடிந்தது. "அமைச்சர்களுக்கும் அதிகாரிகளும் சொகுசான காரில் போறாங்க.. வர்றாங்க. நாம படுற கஷ்டம் அவங்களுக்கு என்ன தெரியும். அவங்களும் இந்த பஸ்ல நெருக்கியடித்து போய்வந்தாதான் தெரியும்" என்றவர்கள், போக்குவரத்து ஊழியர்களையும் விடவில்லை. "இப்படி திடுதிப்புன்னு மக்களை 'அலங்க மலங்க' அடிச்சுதான் சம்பளத்தை உயர்த்திக் கேட்கணுமா?" என்று கொந்தளித்தார்கள்.
  அதேசமயம் தஞ்சை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து புதுக்கோட்டைக்குப் பேருந்துகள் வந்து போய்க்கொண்டிருந்தன. நகரப் பேருந்துகள் சுத்தமாக இயங்கவில்லை. இப்படி காலையில் கட்டுமானத்தொழிலாளர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த புதிய பேருந்து நிலையம், மாலையில் தொடங்கிய போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் புதுக்கோட்டை திணறிவிட்டது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு: கால்குலேட்டருக்கு அனுமதி!



பிளஸ் 2 வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதுவோர்  --
கால்குலேட்டர் கொண்டு வரலாம் என நேற்று (ஜனவரி 3) அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, “பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. பிளஸ் 2 மாணவர்களில் கணிதத் தேர்வு எழுதும் மாணவர்கள் ‘லாக்ரதம் டேபிள்’ புத்தகம் கொண்டுவர வேண்டும். ஜவுளி தொழில்நுட்பம் தேர்வு எழுதுவோர் முழு கிராப் பேப்பரும் கொண்டுவர வேண்டும். புள்ளியியல் தேர்வு எழுதும் மாணவர்கள் புள்ளியியல் டேபிளும், டிராப்ட்ஸ் மேன் தேர்வுக்கு சாதாரண ‘கால்குலேட்டரும்’, இயற்பியல், வேதியியல் தேர்வுகளுக்கு ‘லாக்ரதம் டேபிள்’ புத்தகமும் கொண்டு வர வேண்டும். அதேபோல் வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டர் கொண்டு வரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுவரை மாணவர்கள் தேர்வறைக்குள் கால்குலேட்டர் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Medical physics programme gets AERB nod

Special Correspondent 
 
TIRUCHI, January 05, 2018 00:00 IST

Course is an inter-disciplinary one

The M.Sc. Medical Physics programme offered by the Department of Medical Physics of Bharathidasan University has been recently approved by the Atomic Energy Regulatory Board (AERB).

The Department has been offering the course specialised in radiation technology applied to cancer therapy in collaboration with GVN Hospital, Tiruchi since 2006.

The course is an inter-disciplinary one that bridges physics with medicine and biology for applications in healthcare particularly in radiation cancer therapy. Due to increased health care awareness in India, several hospitals have installed state-of-the-art equipment for diagnostics and therapeutic treatment of cancer patients, and there has been increasing demand for well-trained medical physicists and radiation safety officers in the country, a release from the university said.

To address the shortage of skilled work force in these fastest growing areas of cancer radiation therapy, Bharathidasan University is also engaged in training PG students as qualified medical physicists and radiation safety officers.

G. Gopinath, Registrar, said medical physics was one of the fastest growing areas of employment for physicists. They play crucial roles in radiology, nuclear medicine and radiation oncology. These fields use very sophisticated and expensive equipment, and medical physicists are responsible for much of its plan, execution, testing and quality assurance.

K. Jeganathan, Head, Department of Medical Physics of the varsity, said the minimum syllabi prescribed by AERB included practicals in the university and the hospital. Successful completion of the programme and one-year internship in radiation therapy, meeting AERB criteria, will help post graduates qualify as medical physicist and get employment in medical institutions.

On successful completion of the programme, the students will have to pass an examination conducted by BARC-DAE to become eligible to be appointed as Radiological Safety Officer in medical institutions, he said.
T.N. has most engg. colleges with less than 30% intake 
 
R. Sujatha 
 
CHENNAI, January 05, 2018 00:00 IST

 
Lack of employment demand, deemed universities increasing seats cited as reasons

Tamil Nadu has the most number of engineering colleges with less than 30% intake of students this year. The State has 526 colleges of which 177 have enrolled only 12,399 students this year, according to Satya Pal Singh, Minister of State for Human Resources.

The Minister provided the information in the Lok Sabha in response to questions from eight members, who sought details of the number of colleges that had enrolled less than 30% of its total intake in the last three years and what steps the government had taken to remedy the situation.

The Minister said the All India Council for Technical Education did not offer the option of converting engineering colleges into arts and science colleges. Closure itself depended on voluntary application furnished to the Council.

In Tamil Nadu, while 140 engineering colleges had less than 30% of its sanctioned intake in 2014-15, the number rose to 142 colleges in the following academic year. In 2016-17, in 177 engineering colleges only 12,399 were enrolled against a sanctioned intake of 77,509.

Principals blame AICTE

Though the government has tried to absolve the Council of blame, engineering college principals do not agree. The Council had, in the past decade, eased the requirements for setting up an engineering college, spawning more institutions to circumvent the restriction on intake.

This led to more students enrolling in colleges, but many were not skilled enough to be employable, says V. Venkatachalam, principal of Sengunthar Engineering College. “The AICTE opened the market and colleges increased intake without considering the demand-supply ration. Job opportunities have reduced gradually and poor skilling have led to students joining the college as faculty in some cases,” he says.

While the Minister has said that the AICTE has introduced skill development centres or vocational education institute, engineering educators say it will take a long time before there can be a turnaround.

Several factors contributed to fall in admissions, says M.S. Mathivanan, vice-chairman of the consortium of self-financed engineering colleges of Tamil Nadu. “Some colleges are closing as there is no employment demand. Another reason is deemed universities have increased the number of seats and students prefer them or even autonomous colleges where results are liberal.”

The AICTE recently reduced the teacher to student ratio to 1:25 from 1:20, but it may take a long time for the effect to percolate as colleges are struggling to pay the salaries to the existing staff. He faults the State government for delay in reimbursement of fee of Scheduled Caste students.

“Classes started in July but we have not yet received the money. We are not able to pay the salary to teachers because of this. Since it is free education more students join but we have a problem in paying salary to the staff,” Mr. Mathivanan says.

Fingers are pointed at AICTE for permitting colleges to increase the number of courses. “Whoever had accreditation could increase intake. As a result colleges have gone for increase in intake. New colleges have also been allowed to commence. We find that nearly 20% of students are not interested in engineering in a given institution,” says S. Kuppuswami, principal of Kongu Engineering College.

The AICTE opened the market and colleges increased intake
V. Venkatachalam,
Principal, Sengunthar Engineering College
Hyderabad: Refused biryani, 10 attack hotel owner 

DECCAN CHRONICLE.

Published Jan 5, 2018, 12:31 am IST

The victim, Syed Ali Raza, claimed that the suspects barged into the hotel and threatened him.



The whole episode was recorded in the CCTV. Raza, who suffered severe injuries on his head, alerted the police. (Photo: DC)

Hyderabad: Ten persons under the influence of alcohol attacked the owner of Lucky Restaurant at Alkapuri on Wednesday night after he denied to serve them biryani, citing shortage.

The victim, Syed Ali Raza, claimed that the suspects barged into the hotel and threatened him. The LB Nagar police arrested four persons related to the case —Venkatesh Yadav, Srisailam Yadav, Santosh and Ramulu, who are doing real estate business in the city.

Lucky Restaurant is located on Alkapuri X Road at Nagole. On Wednesday at around 11.45 pm, four persons entered the hotel and asked for biryani. When Raza told them that the food is also not available, they picked up an argument with him. A few minutes later, others joined the group and started assaulting Raza.

“They first damaged the furniture and threw away the utensils and later attacked me with vessels,” said Raza. The whole episode was recorded in the CCTV.
Raza, who suffered severe injuries on his head, alerted the police.

“We have arrested four persons in connection with the attack on the hotel owner. Further investigations are on to verify the role of the second group. Based on the evidence, the investigation will proceed,” said N. Prakash, SI of LB Nagar.
Chennai: Defunct escalator in Chromepet rly station irks seniors, differently-abled 

DECCAN CHRONICLE.

Published Jan 5, 2018, 2:41 am IST

Meanwhile, residents of Chromepet have warned that they would agitate against officials’ apathy over restoring the escalator.



CHENNAI: Physically challenged and senior citizens are left in the lurch after an escalator at Chromepet railway station had stopped working two weeks ago.

“The escalator at the western side of the foot overbridge (FOB) connecting Chromepet railway station with GST Road has not been working for last 15 days. Due to this, senior citizens and physically challenged are left to suffer,” V. Santhanam, president, New Colony Residents’ Welfare Association, said.

The escalator had been used by residents of the New Colony, Lakshmip-uram and Shastri Nagar among other neighbouring areas. On any given day, nearly 25,000 to 30,000 commuters are using the foot overbridge, V. Santhanam added.

One of the railway engineers said that the maintenance works on escalators are entrusted to a private contractor. “The private firm has given subcontract to another firm and monetary disputes between two contractors have held up the restoration works,” the official added.

Meanwhile, residents of Chromepet have warned that they would agitate against officials’ apathy over restoring the escalator.
Change in visa rules can affect 7.5 lakh Indians in US, most of them Telugus 

DECCAN CHRONICLE. | NAVEENA GHANATE

Published Jan 5, 2018, 12:47 am IST


While tightening immigration policies will hurt Indians, there will be a loss of income to the USA as well.



The impact will be felt most by Telugu speaking people as a large number of visas and green card applications are issued to people from Andhra Pradesh and Telangana.

Hyderabad: The proposal being circulated in the Department of Homeland Security of the United States government to end the provision of granting extensions to H-1B visas holders waiting for their green cards (permanent residency in the United States), is causing some amount of insecurity among that section of the Indian diaspora. If the proposal goes through, it could put the visa status of between 5,00,000 and 7,50,000 Indians in jeopardy.

The impact will be felt most by Telugu speaking people as a large number of visas and green card applications are issued to people from Andhra Pradesh and Telangana. These two states send the most number of students to the US every year. Furthermore, when these students pass out of American universities, they prefer to work in the US rather than return to India.

K. Pradeep is a software engineer based in Chicago, who entered the US as a student. He does not think it’s time to press the panic button yet.

“As of now, no government agency has officially expressed the intention of deporting people. Immigration attorneys are key people who can educate and create an impact to a certain extent. However, people of Telugu origin are not getting much help from immigration attorneys. If the Indian government doesn’t intervene and lobby at the proposal level itself, it cannot be of much help at later stages.”

Techies in the US are certain that any law that the Trump administration will bring in cannot be done at the drop of a hat, but will take at least two years.

According to a widely circulated LinkedIn post among the Telugu diaspora by Rajiv Khanna, Managing Attorney of Immigration.com, discontinuing H-1B extensions beyond six years is easier said than done.

“The law that permits, in fact mandates, the availability of extensions beyond six years is clearly binding upon the Trump administration. The idea that is being floated that there are occasional uses of the word “may”, which permits the government to implement or not to implement the extension provisions is incorrect,” Mr Khanna posted.

Taking away the H-1B extensions by Executive action is going to be extremely difficult if not impossible, he added.

Telugu diaspora keen on staying in US

The Telugu diaspora is keen on staying in the US. Jay Challa, head of the business group of the American Telugu Association, recently said that there are a lot of business persons from Andhra Pradesh and Telangana in the United States and the government will certainly not shut its doors completely to skilled labour, considering the fact that the country has to be economically competitive.

While tightening immigration policies will hurt Indians, there will be a loss of income to the USA as well. Many Indians are holding off making big investments like buying a house or investing in business until there is more clarity.

Lasya Reddy, whose green card is in the processing stage, said, “If this becomes a law, certainly I will be deported. However, I have a couple of years to get the next extension. While the fear is not as much as is being portrayed, there is a sense of insecurity among us. Most of us postponed our plans of purchasing a home as we will not be able to pay the mortgage immediately if something goes wrong.”

“This is going to be a slow poison. Every time a person goes for a visa, they are thoroughly scrutinised and there are a lot of factors based on which they get extension. There is a possibility that the extension for a lot of people will be stalled over the next two years. But deportation in one go may not happen, said P. Venkat, who works in Philadelphia.
IndiGo to operate flights from Chennai to Udaipur, Varanasi, Patna and LucknowV Ayyappan | TNN | Jan 4, 2018, 18:48 IST



CHENNAI: IndiGo on Wednesday announced six new flights and five additional frequencies on its existing domestic network.

Effective February 1, IndiGo will connect Chennai for the first time with Udaipur, Varanasi, Patna and Lucknow.

Five additional flights on the Ahmedabad-Chennai, Chennai-Thiruvananthapuram, Thiruvananthapuram-Chennai, Chennai-Ahmedabad and Jaipur-Chennai sectors are also being introduced.

IndiGo will also introduce a direct flight on the Patna-Varanasi, Udaipur-Jaipur and Jaipur-Chennai sectors as well. Booking for these flights are open.

The company recently announced the introduction of ATR aircraft to its fleet and four new destinations - Colombo, Vijayawada, Rajahmundry and Tirupati - to its network.

Sanjay Kumar, chief commercial officer, IndiGo, said, "With soaring demand on these sectors, we are hopeful that these flights will prove to be popular among our customers."
Gundri students can now get home early

Senthil Kumaran | TNN | Jan 5, 2018, 06:24 IST





 ERODE: A day after TOI published a report on the gruelling daily schedule of school and college students living at Gundri and 26 surrounding hamlets in Erode district, Tamil Nadu school education minister K A Sengottaiyan, who hails from the district, ordered officials to do a ground check. The minister told this correspondent that he ordered transport officials to divert a bus to pick up students at 3.30 pm from Kadambur, where the school is situated. He also ordered the school authorities to allow students from Gundri to leave at 3.20 pm to catch the bus.
TOI reported on Thursday that children from the region had to leave home for school around 5 am to catch the lone bus to Kadambur, 19km away, and they get back home at 10 pm.

The announcement has come as a big relief for people of the region. "We are happy that our children will come back home at 5 pm instead of 10 pm," G V Ravichandran, a parent told TOI. He said the state government had finally woken up to their long-pending plea after the news report appeared.

A total of 32 students, 18 of them girls, studying Class XI and XII in the government higher secondary school at Kadambur, besides 18 students, including seven girls, studying in the Government Arts and Science College in Sathyamangalam, 54km from Gundri, take the dawn bus and return late at night. If they miss the bus, it means an arduous trek through the Sathyamangalam Tiger Reserve.

When told about the children's ordeal, Sengottaiyan said on Wednesday that he would convene a meeting with transport department officials on Sunday to discuss the issue. However, on Thursday he contacted education and transport officials and passed the necessary orders. He said the possibility of operating buses suitable to school timings was being explored. The transport officials told the minister that they would operate a bus at 3.30 pm to Gundri from Kadambur. The minister also ordered Erode district chief educational officer (CEO) R Balamurali to ensure that students from the Gundri region are allowed to leave their classes at 3.20 pm to catch the bus.

"I have helped the students to return home before dusk," Sengottaiyan told TOI. He said he will check the possibility of operating another bus at 8 am.

Balamurali confirmed that he has received the order. "I have given directions to the school headmaster based on the minister's order," he said. Transport officials said they have directed the bus driver and the conductor to pick up Gundri students even if they come at 3.30 pm.

School upgradation to be studied: CEO

அண்ணாமலைப் பல்கலை.யில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம்

By DIN | Published on : 05th January 2018 02:18 AM |

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வுத் துறை சார்பில், தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் (1991 - 2017) படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் பெறாமல் நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் மூன்றாவது முறையாக நடைபெற உள்ளது. 


மேற்கூறிய காலகட்டத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்களின் பலர் தங்களது மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ்களைப் பெற்றுகொள்ளாமல் தேர்வுத் துறையில் உள்ளது. எனவே பல்கலைக்கழகத் தேர்வுத் துறை சார்பில், படித்த மாணவர்களுக்கு நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு திட்ட முகாம் தேர்வுத் துறை அலுவலக வளாகத்தில் வருகிற பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 


எனவே, இதுவரை மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ் பெறாதவர்கள், சிறப்பு திட்ட முகாமில் பெற்றுக்கொள்ளலாம். 


சான்றிதழ் பெற வரும் மாணவர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையுடன் நேரில் வந்து, பல்கலைக்கழகத்தில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளலாம். 


மேலும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களுக்கும் தேர்வுத் துறை, தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் படிப்பு மையத்தை தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்துள்ளார். 


இந்த முகாம் 3 நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ரஜினிக்கு போட்டி:கமல் திட்டவட்டம்

நடிகர் ரஜினி, அரசியலில் நுழைந்துள்ள நிலையில், அவருக்கு முன், அரசியல் அறிவிப்பு வெளியிட்ட கமல், 'தன் முடிவில் மாற்றம் இல்லை' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.




சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' மாநில அரசை விமர்சித்து, அரசியல் பதிவுகளை, கமல் வெளியிட்டு வந்தார். அதற்கு, அமைச்சர்கள் மற்றும், பா.ஜ.,வினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனிக்கட்சி துவங்கி, அரசியலில் குதிக்கப் போவதாக, கமல்
அறிவித்தார். அதற்கு முன், திரைப்பட பணிகளை முடிப்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த சூழலில், நடிகர் ரஜினி, அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். அதை, 'டுவிட்டரில்' கமல் வரவேற்றார். எனினும், ரஜினி, கட்சி துவங்குவதாக அறிவித்தது, கமலுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதனால், ரஜினிக்கு போட்டியாக, அரசியலில் கமல் குதிப்பாரா என, சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அரசியலில் குதிப்பதை, கமல் உறுதி செயதுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: சென்னை, ஆர்.கே.நகர் தேர்தல், மிகப் பெரிய களங்கம். சென்னை வெள்ளத்தின்போது, மக்களாகிய நீங்கள் காட்டிய அன்பு, நெகிழச் செய்தது. அப்படிப்பட்ட நீங்கள், ஆளுங்கட்சி தந்த பணத்திற்கும், சுயேச்சை வேட்பாளர் தந்த, 20 ரூபாய், 'டோக்கனுக்கும்' விலை போகலாமா; அது, திருடனிடம் பிச்சை எடுப்பது போன்றது.

என் சினிமா பணிகளை முடித்துவிட்டு, அரசியலுக்கு செல்லவிருப்பதை அறிந்த, அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் பலர், அங்குள்ள வாய்ப்பை பட்டியலிட்டு, 'அரசியல் வேண்டாம்' என்கின்றனர். ஆனால், அரசியலுக்கு வரும் அவலத்திற்கு, என்னை இங்குள்ள சிலர் ஆளாக்கி விட்டனர். என் பழைய பேட்டிகளில் கூறியதைப் போல், அரசியலுக்கு வருவேன் என, மறுபடியும் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர் -


தேடப்படும் குற்றவாளி மல்லையா; அறிவித்தது டில்லி கோர்ட்

Added : ஜன 05, 2018 02:21 |

    புதுடில்லி : 'பெரா' வழக்கில் ஆஜராகாத, பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை, தேடப்படும் குற்றவாளியாக, டில்லி கோர்ட் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேரந்த, பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கியுள்ள அவன் மீது, ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 1996, 97 மற்றும் 98ம் ஆண்டுகளில், பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில், 'பார்முலா ஒன்' கார் பந்தயம் நடந்தது. இந்த போட்டிகளில், மல்லையாவுக்கு சொந்தமான, கிங்பிஷர் நிறுவன தயாரிப்புகளை விளம்பரப்படுத்த, பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.

அமெரிக்க டாலரில் செலவழிக்கப்பட்ட இந்த தொகை, இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் செலவழிக்கப்பட்டதாக, பெரா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை, டில்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், ஆஜராகும்படி, மல்லையாவுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

பல முறை, 'சம்மன்' அனுப்பியும், மல்லையா ஆஜராகாததால், அவனுக்கு எதிராக, கடந்த ஆண்டு, ஜாமினில் வெளிவர முடியாத, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. எனினும், மல்லையா, மீண்டும் ஆஜராகாததால், அவனை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, டில்லி கோர்ட், நேற்று உத்தரவிட்டது.
முன்னாள் பதிவாளர் அறை உறவினர் முன் திறப்பு

Added : ஜன 05, 2018 02:36


சேலம்: பெரியார் பல்கலை, முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவின் அலுவலக அறை, அவரது உறவினர்கள் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது.


சேலம், பெரியார் பல்கலையில், 2005ல், உடற்கல்வி இயக்குனராக சேர்ந்தவர் அங்கமுத்து. இவர், அதே பல்கலையில், 2012 முதல், 2015 வரை பதிவாளராக பணிபுரிந்தார்.
அப்போது, பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு கோப்புகள் ஒப்படைக்காதது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டிச., 18ல், அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது அலுவலக அறையில் உள்ள பொருட்களை யாரும் பயன்படுத்தாமல் இருக்க, பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது.


இதை பாதுகாக்க, சிண்டிகேட் உறுப்பினர் செந்தில்வேல்முருகன் தலைமையில், குழு அமைக்கப்பட்டிருந்தது.


நேற்று, அங்கமுத்து மகள் சவுமியா, அவரது உறவினர்கள், பல்கலைக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில், அங்கமுத்து பயன்படுத்திய உடற்கல்வி இயக்குனர் அலுவலகம் திறக்கப்பட்டது.


அங்குள்ள பொருட்கள் குறித்து ஆய்வு நடந்தது. சொந்த பொருட்கள் பிரிக்கப்பட்டு, உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.

மொபைல் - 'ஆதார்' இணைக்க, '14546'

Added : ஜன 05, 2018 00:28

மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை, மார்ச், 31க்குள் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன், வாடிக்கையாளரே, மொபைல் எண்ணை இணைக்க, வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, '14546' என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, மொபைலில் இருந்து அழைத்தால், அப்போது, பதிவு செய்யப்பட்ட குரல் சேவை ஒலிக்கும். அது சொல்வதை செய்தால், இரு நிமிடத்திற்குள், இரு எண்களையும் இணைக்கலாம்.
இதை, 'ஏர்டெல், வோடபோன்' உள்ளிட்ட, பல முன்னணி நிறுவனங்கள், அறிமுகம் செய்துள்ளன.

- - நமது நிருபர் -
சபரிமலை செல்லும் மகளிருக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்

Added : ஜன 05, 2018 02:07

திருவனந்தபுரம்: 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள், தங்கள் பிறப்பு சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும்' என, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு உத்தரவிட்டுள்ளது.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. 


இங்குள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண்டு தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிரம்மச்சாரியான அய்யப்பனை தரிசிக்க, 10 - 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. 10 வயதுக்கு குறைந்த சிறுமியர் மற்றும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
சமீபகாலமாக, சபரிமலைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 10 - 50 வயதுக்குட்பட்ட பல பெண்கள், போலீஸ் சோதனையில், பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.


இதையடுத்து, ''சபரிமலைக்கு வரும் சிறுமியர் மற்றும் பெண்கள், கோவிலுக்குள் செல்வதற்கு முன் நடக்கும் சோதனையின் போது, தங்கள் பிறப்பு சான்றிதழை காட்ட வேண்டும். ஆதார் அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்,'' என, தேவஸ்வம் போர்டு தலைவர், பத்மகுமார் கூறினார்.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். 
 
சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 47 தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 11 முறையும், சென்னை பல்லவன் இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் 10 முறையும் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவுகள் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந் தது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.35 காரணி மடங்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தொழிற்சங்கத்தினர் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இதை வலியுறுத்தி கடந்த மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த சூழ்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நேற்று நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் 47 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி காணப்பட்டது. டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியில் ஈடுபட்டிருந்தாலும், பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை தொழிற்சங்க உறுப்பினர்களிடம் அவ்வப்போது கேட்டபடி இருந்தனர்.

மாலை 6 மணியை கடந்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சில ஊழியர்கள் விரக்தி அடைந்தனர். பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்து விடுமோ? என்று கவலையும் அடைந்தனர்.

இந்தநிலையில் அமைச்சருடன், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதாக பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனால் ஆவேசமடைந்த பெரும்பாலான டிரைவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் பஸ்களை இயக்க மறுத்துவிட்டனர்.

கோயம்பேடு, பாரிமுனை, வடபழனி, எண்ணூர் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும், பஸ்கள் இயக்கப்படாமல் அணிவகுத்து நின்றன. பஸ்சில் ஏறிய பயணிகளிடம், பஸ்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதேபோல தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் இயங்குவது நிறுத்தப்பட்டது.

அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

எனவே பேச்சுவார்த்தையில் இருந்து தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் வெளியேறி அதிகாரபூர்வ ‘ஸ்டிரைக்’ அறிவிப்பை நேற்று இரவு 8 மணியளவில் வெளியிட்டனர். இதையடுத்து இயக்கப்பட்ட ஒரு சில பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பஸ்சில் இருந்த பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் செய்வது அறியாது திகைத்தனர். பஸ் டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டிக்கெட் கட்டணத்தையும் திருப்பி கேட்டனர். ஆனால் சில கண்டக்டர்கள் தர மறுத்துவிட்டனர்.

வெளியூர் செல்லும் பெரும்பாலான பஸ்களும் இரவில் இருந்து நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்க வேண்டிய நிலை பலருக்கு ஏற்பட்டது. அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்சில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பலருக்கு ஏற்பட்டது.

பஸ் டிரைவர்கள் போராட்டத்தால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கையாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பஸ் நிலையங்கள், போக்குவரத்து பணிமனைகள் பல்லவன் இல்லம் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய முதல்வராக ஜெயந்தி பொறுப்பு ஏற்பு

ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில்
புதிய முதல்வராக ஜெயந்தி பொறுப்பு ஏற்பு
 
ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக டாக்டர் ஆர்.ஜெயந்தி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 
 
சென்னை, 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (டீன்) ஆர்.நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக டாக்டர் ஆர்.ஜெயந்தி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பொது மருத்துவமனை புதிய ‘டீன்’ ஆக நேற்று பொறுப்பேற்ற டாக்டர் ஆர்.ஜெயந்தி, உடனடியாக தனது பணியை தொடங்கினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது டாக்டர் ஆர்.ஜெயந்தி கூறுகையில், “நோயாளிகள் நலனுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள மருத்துவ வசதிகளை நோயாளிகள் எளிதில் கிடைக்கவும் பாடுபடுவேன்”, என்றார்.

டாக்டர் ஜெயந்தி 1986-ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு முதல் முறையாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


NEWS TODAY 21.12.2024