Saturday, January 6, 2018

முதுகலை மருத்துவம்: நாளை 'நீட்' தேர்வு : தயார் நிலையில் மையங்கள்

Added : ஜன 06, 2018 04:48


முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நாளை நடக்க உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள இளங்கலை, முதுகலை மருத்துவ இடங்கள், 'நீட்' தகுதி தேர்வு மூலம், ஒதுக்கப்படுகின்றன.


தேசிய அளவில், மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுகள், தேசிய தேர்வு வாரியம் சார்பில், நடத்தப்படுகின்றன.


இந்தாண்டு முதுகலை மருத்துவ இடங்களுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப வினியோகம், கடந்தாண்டு அக்., 31 முதல், நவ., 27 வரை நடந்தது.
மாணவர்கள் 'ஆன்லைன்' முறையில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.


இந்நிலையில், இதற்கான தேர்வு, நாளை நாடு முழுவதும் நடக்கிறது. இம்மாத இறுதிக்குள்,
முடிவுகள் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


நாடு முழுவதும், 129 மையங்களில் நாளை தேர்வுகள், நடத்தப்பட உள்ளன. இத்தேர்வில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.


தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய ஆறு நகரங்களில் தேர்வுகள் நடக்கின்றன.


தேர்வு மையங்களுக்குள்அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், தேர்வர்களுக்கான அனைத்து
வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024