அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ.,
பவானி : போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்கால், டிரைவர் இல்லாததால், அந்தியூரில் இருந்து பவானிக்கு, அரசு பஸ்ஸை, எம்.எல்.ஏ., ஓட்டினார்.
அரசு போக்குவரத்து தொழிலாளர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு பஸ்கள், டிரைவர், கண்டக்டர் இல்லாமல், பணிமனையில் முடங்கியுள்ளன. பல இடங்களில் தற்காலிக ஊழியர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர்,அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன், நேற்று அரசு பஸ்சை இயக்கி ஆச்சர்யப்படுத்தினார். அந்தியூர் பணிமனைக்கு உட்பட்ட அரசு பஸ்சை, அந்தியூரில் இருந்து பவானிக்கு, நேற்று மதியம் இயக்கினார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ., கூறுகையில்,''என்னிடம், 'ஹெவி லைசென்ஸ்' உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் காட்டி, அனுமதி பெற்றே, அந்தியூரில் இருந்து பவானிக்கு பஸ் ஓட்டி வந்தேன். பஸ்சில், 50 பேர் இறங்கி, ஏறினர்,'' என்றார்.
எம்.எல்.ஏ., அரசு பஸ் ஓட்டிச் செல்லும் தகவல் பரவியது. இதனால், தொ.மு.ச.,வினர், அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த, எம்.எல்.ஏ., பஸ்சை தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.
No comments:
Post a Comment